Advertisment

புதிதாக குழந்தை பெற்ற பெண் தெரிந்து கொள்ள வேண்டியவை-Life Coach Maalica

Life Coach Maalica நிறைய பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். அவர் Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டிர்காக அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
tips for women by life coach maalica

Image of Maalica

புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

Advertisment

குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். உடல் ரீதியாக வலிகள் இருக்கும், சோர்வாகவும் இருக்கும். Mood swings நிறைய இருக்கும். தூக்கமின்மையும் உடல் நலத்தை பாதிக்கும். நிறைய பேர் அதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த சில மாதங்களை கடந்து விட்டால் வாழ்க்கை மாறத் தொடங்கும். 

என் குழந்தையை நான் இப்பொழுது நிம்மதியாக கொஞ்சுகிறேன். ஆனால் அவள் குழந்தையாக இருக்கும் போது என்னால் அப்படி கொஞ்ச முடியவில்லை. ஏனென்றால் அப்பொழுது பெண்களுக்கு பல சிந்தனைகள் இருக்கும். எத்தனை மணிக்கு அவளுக்கு feed பண்ணனும், குளிக்க வச்சாச்சா, டயப்பர் மாத்தியாச்சா இந்த மாதிரி கடமைகள் தான் அதிகமாக இருந்தது, அதை தவிர உடம்பில் அந்த வலியை வைத்துக் கொண்டும் என்னால் அவளை கொஞ்ச முடியவில்லை. இன்று எனக்கு அந்த வலி இல்லை. அதனால் என்னால் அவளை கொஞ்ச முடிகிறது. எல்லா தாயுமே இதை கடந்து தான் வந்திருப்பார்கள். முதல் ஆறு மாதங்கள் இப்படித்தான் இருக்கும். அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கும். 

எனக்கும் அப்படித்தான் இருந்தது. அதன் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. அவளுக்கு ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் என்று என்னை மெருகேற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். அதனால் முதல் ஆறு மாதங்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். அதனால் உங்களை நீங்களே வற்புறுத்திக் கொள்ளாமல், காயப்படுத்தாமல் நடந்து கொள்ளுங்கள்.

Advertisment

Maalica

உங்களிடம் ஆலோசனைக்காக வரும் பெண்கள் நிறைய சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

என்னிடம் வரும் நிறைய பெண்கள் புகுந்த வீட்டில் பிரச்சினை இருப்பதாக சொல்லுகிறார்கள். நிறைய பெண்களுக்கு புகுந்த வீட்டில் இருப்பவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. அதேபோல் மாமியார்களுக்கும் மருமகளை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்பது தெரிவதில்லை. நமது குடும்பத்தில் ஒரு பெண் புதிதாக வருகிறாள் என்றால் நம்பளும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். வரும் மருமகள் மட்டுமே அனைத்தையும் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

Advertisment

எல்லா பெண்களும் வீட்டில் பாசமாக தான் வளர்க்கப்படுகிறார்கள். அப்படி புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணை பொத்திவைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் மனசை காயப்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். நிறைய மாமியார், மாமனார், நாத்தனார் பிரச்சினைகள் தான் வருகின்றது. அதுவும் குறிப்பாக மாமியார், நாத்தனார் உடன் தான் பிரச்சினைகள் வரும். இதை நினைத்து பார்க்கும் பொழுது எனக்கு என்ன தோன்றும் என்றால் ஒரு பெண்ணிற்கு பிரச்சினை கொடுப்பது இன்னொரு பெண்தான். அதை நினைக்கும் போது கஷ்டமாக இருக்கும்.

மற்றொரு பிரச்சனை என்னவென்றால் நிறைய பேருக்கு ப்ரோடக்டிவ்வாக இருக்க தெரியவில்லை. சிலர் வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். சிலர் குடும்பத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். இல்லையென்றால் வேலை, குடும்பம் என இரண்டையும் பார்த்துக் கொள்வார்கள், அவர்களின் உடல்நிலையை கவனித்துக் கொள்வதில்லை. அதனால் அனைத்தையும் பேலன்ஸ் செய்வது ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

Maalica life coach

Advertisment

அடுத்த முக்கியமாக பிரச்சனை என்னவென்றால் பணம். எப்படி பணம் சம்பாதிப்பது? எப்படி பணரீதியாக சுதந்திரமாக இருப்பது? ஒரு பெண் பணரீதியாக சுதந்திரமாக இருந்தால் அவளுக்கு தைரியம் அதிகமாக இருக்கும். அவர்களுடைய பேஷனில்(passion) இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது, எப்படி தொழில் தொடங்குவது இது போன்று பிரச்சனைகளுடன் வருவார்கள். என்னிடம் வரும்போது இதை எப்படி சமாளிப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். 

வேலையையும், குடும்பத்தையும் எப்படி சமாளிப்பது?

முதலில் இதை சமாளிப்பது எளிதான விஷயம் அல்ல என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் சிலர் வேலை செய்வதையும், குடும்பத்தோடு இருப்பதையும் பதிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் அதை பதிவிட்ட பிறகு என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அதனால் அப்படி பதிவிடுபவர்களை மற்றவர்கள் பார்த்து அவர்களால் மட்டும்தான் வேலையும், குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள முடிவதில்லை என்று எண்ணி வருத்தப்பட்டு தங்களை தாழ்த்தி நினைத்துக் கொள்கிறார்கள். இரண்டையும் சமாளிப்பது அனைவருக்கும் கஷ்டம் தான். ஆனால் ப்ராக்டிஸ்(practice) மூலமாக அதை நீங்களும் செய்ய முடியும். 

Advertisment

மற்ற குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click here: Life tips for women - Maalica | Life Coach | Founder of Evergrowth Academy⁠⁠⁠⁠⁠⁠⁠ 

 

Advertisment

Suggested Reading: என் வாழ்வில் பிடிவாதம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது - Saritha Jo
Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?
Suggested Reading: Nykaa நிறுவனத்தின் நிறுவனர் மாணவர்களுக்கு கூறும் ஆலோசனை
Suggested Reading: சுயமரியாதையை (self-esteem) அதிகரித்துக் கொள்வதற்கான ஐந்து பழக்கங்கள்

Life Coach Maalica Evergrowth Academy
Advertisment