Advertisment

என் வாழ்வில் பிடிவாதம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது - Saritha Jo

சரிதா ஜோவின் வாழ்க்கை கதை பல பெண்களை ஊக்குவிக்கும். சிறுவயதில் இருந்து தனக்கு வேண்டிய விஷயங்களை போராடி பெற்றுள்ள இவர் தனது வாழ்க்கை கதையை ஜோஷ் டாக்கில் பகிர்ந்துள்ளார். அவரின் வாழ்க்கை கதையை தெரிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
RJ Saritha Jo

Image of Saritha Jo

பெண்களுக்கு பிடிவாதமாக இருக்க கூடாது என்ற கருத்து இந்த சமூகத்தில் பரவி உள்ளது. ஆனால் சிறுவயதில் இருந்து தனக்கு என்ன வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த சரிதா ஜோ பல தடைகளை தாண்டி தற்போது ஒரு RJவாக, எழுத்தாளராக, பட்டிமன்ற பேச்சாளராக இருக்கிறார். இதில் அவர் சிறந்து விளங்குவதற்கு முன்பு சிறுவயதில் இருந்து பல போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார்.

Advertisment

இவரின் வீட்டில் இரவு உணவகம் நடத்தி வந்ததால், பெற்றோர்களுக்கு வேலையை முடித்துவிட்டு தூங்குவதற்கு காலை நான்கு மணி ஆகிவிடும். அதனால் இவரும், இவரின் சகோதரியும் பெரும்பாலும் பள்ளிக்கு காலை மற்றும் மதிய உணவு இல்லாமல் வெறும் காப்பியை மட்டும் குடித்துவிட்டு கிளம்பி விடுவர். பிறகு மாலை வீட்டிற்கு வந்தவுடன் தான் சாப்பிடுவர். அதுமட்டுமின்றி அந்த ஹோட்டலில் அவர்களுக்கென சிறு சிறு வேலைகள் இருக்கும். அதனை செய்து கொண்டிருக்கும் போதே அவ்வப்போது விளையாடிவிட்டு வருவர்.

சிறுவயதில் இருந்து இவர் ஒரு பிடிவாதமான பெண்ணாகவே இருந்து இருக்கிறார். இவரின் பிடிவாதம் வாழ்க்கையில் நிறைய நேர்மறையான விஷயங்களை இவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது. இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது வீட்டின் அருகில் கற்றுத் தந்த தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். மேலும், சிறு வயதில் இருந்து இவருக்கு தைரியமாக இருப்பது பிடிக்கும். அதனால் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது மூலம் இன்னும் தைரியமாக இருக்கலாம் என நினைத்தார். இதற்காக ஆறு மாதங்கள் அம்மாவிடம் போராடி அதன் பிறகு அந்த தற்காப்பு கலையை கற்றுக் கொண்டார்.

Saritha Jo Josh talk

Advertisment

இந்த தற்காப்பு கலை கற்றுக் கொள்ளும் பொழுது நிறைய போட்டிகளில் பங்கேற்று உள்ளார். அதில் இவர் பெற்ற வெற்றி, தோல்விகள் இவருக்கு ஒரு பக்குவத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு 11ஆம் வகுப்பு படிப்பதற்காக வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் வீட்டில் அவரை அனுமதிக்கவில்லை. இவரின் தாய் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்ததால், அவருக்கு கல்வியைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இருப்பினும் சரிதா மீண்டும் பிடிவாதம் பிடித்து 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார்.

பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதற்கே வீட்டில் இவ்வளவு போராட வேண்டி இருந்த நிலையில், கல்லூரிக்கு செல்வதற்காகவும் இவர் போராடி உள்ளார். ஆனால் இந்த போராட்டத்தில் அவர் தாய் தான் வென்றிருக்கிறார். சரிதாவிற்கு தனது பேருக்கு பின்னாடி ஒரு டிகிரி வேண்டும் என்ற ஆசை இருந்தது. இருப்பினும் இவரை கல்லூரிக்கு செல்ல அனுமதிக்காததால் தொலைதூர கல்வியை பயில தொடங்கினார்.

இவர் அரசு பள்ளியில் படித்ததால் ஆங்கிலம் பேசுவதில் ஒரு தாழ்வு மனப்பான்மை இவருக்கு ஏற்பட்டிருந்தது. இருப்பினும் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. பிறகு திருமணம் ஆகி இரண்டு, மூன்று வருடங்களுக்கு பிறகும் இவரின் தேடல் முடியவில்லை. அதனால் பல வகுப்புகளுக்கு இவர் சென்றுள்ளார். 

Advertisment

இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்த போதும் திருமணம் ஆகி 8 வருடத்திற்கு பிறகு இவர் கல்லூரிக்கு படிக்க சென்றுள்ளார். B.Ed படிப்பு என்பதால் இவருக்கு நிறைய வேலைகள் இருந்தது. அதுமட்டுமின்றி நாடகம், பட்டிமன்றம் போன்ற விஷயங்களுக்காக இவர் மேடையும் ஏறி உள்ளார். மைக் மீது தீராத ஏக்கம் கொண்ட இவருக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது அதனை நினைவாகி கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த கல்லூரியில் படிக்கும் பொழுது நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டார்.

Saritha Jo story teller

படித்து முடித்துவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் ஒரு வருடத்திற்கு மேல் அதனை தொடர முடியவில்லை. இருப்பினும் அவர் தேடல் நிற்கவில்லை. ஒரு நாள் பேஸ்புக்கில் கதை சொல்லி என்ற ஒரு போஸ்டரை இவர் பார்த்துள்ளார். சிறுவயதிலிருந்து இவருக்கு குழந்தைகள் பிடிக்கும் என்பதாலும் வீட்டில் குழந்தைகளுக்கு நன்றாக கதை சொல்லுவார் என்பதாலும் அதில் கலந்து கொள்ள முடிவெடுத்தார். 

Advertisment

இருப்பினும் அங்கு வந்திருந்த கூட்டத்தை பார்த்து அவருக்கு பயம் ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு அக்கா, "போ, உன்னால முடியும்" என்று கூறினார். இதுதான் அவர் எடுத்து வைத்த முதல் அடி. "இந்த பிரபஞ்சம் நமக்கான வாய்ப்பை வைத்து காத்துக் கொண்டிருக்கும். நாம் முதல் அடி எடுத்து வைத்தால் அது அடுத்தடுத்து நமக்குத் தரும்" என்று அவர் ஜோஷ் டாக்கில் கூறினார்.

இவர் கூறியது போலவே அந்த முதல் அடி எடுத்து வைத்த பிறகு இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதன் பிறகு RJ, பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளராகவும் மாறி உள்ளார். கதைகளை வெவ்வேறு வடிவங்களில் கொடுக்க வேண்டும் என்று எண்ணியும்‌, தன்னை மெருகேற்றிக் கொள்வதற்காக நிறைய புத்தகங்களை படிக்கத் தொடங்கினார். அதேபோல் புத்தகங்கள் வழியாக இந்த உலகத்தை புரிந்து கொள்ளவும் ஆரம்பித்தார்.

பெரியாரும், பாரதியாரும் தங்களின் சிந்தனை மற்றும் எழுத்தினாலும் பல பெண்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். அப்படி சரிதாவின் வாழ்க்கையிலும் இருவரும் பெரிய பங்காற்றி உள்ளனர். மேலும் அவர் ஜோஷ் டாக்கில் பேசிய பொழுது, பெண்கள் ஒரே இடத்தில் இருக்காமல் வெளியே பரந்து கிடக்கும் உலகத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் நிறைய செய்து சாதிக்க வேண்டும் என்றும் கூறி தனது பேச்சை முடித்தார்.

Advertisment

Suggested Reading: Home Cooking Show வெற்றியின் காரணம்- Hema Subramanian

Suggested Reading: தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி (Srimathi Chimu)

Suggested Reading: IT வேலையை விட்டு மக் கேக்ஸ்(Mug Cakes) ஆரம்பித்த ஸ்வேதா

Suggested Reading: கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறிய CWC ரித்திகா

Saritha Jo Tamil story teller author
Advertisment