கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறிய ரித்திகா

Devayani
15 Feb 2023
கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறிய ரித்திகா

சின்னத்திரைக்கு வருபவர்கள் பெரிய திரையில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் வருவார்கள். சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு முன்னேறுவார்கள்‌. அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது அவரின் குணத்தாலும், நடிப்பாலும் பலரை கவர்ந்து உள்ள ரித்திகா தமிழ்செல்வி.

ரித்திகா குடும்பம்:

ரித்திகா தமிழ்செல்வி கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்துள்ளார். இவரின் பெற்றோர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் சொந்தக்காரர்கள் என பெரிய அளவில் எந்த ஆதரவு எதுவும் இல்லை‌. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் எப்படி இருக்குமோ, அப்படியே இவரின் வாழ்க்கையும் இருந்தது. அப்பா, அம்மா, தம்பி என சிறிய குடும்பம். சிறுவயதில் இருந்து ரித்திகா தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான காரணம் அவர் பள்ளியில் இருந்த சரஸ்வதி என்ற ஆசிரியர்.

எப்படி நடிக்க தொடங்கினார்?

இவர் பல பேச்சுப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு அவரது திறமையை வெளிப்படுத்தினார். பிறகு இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் போது தந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால், ஏதாவது வேலைக்கு செல்லலாம் என முடிவெடுத்து பக்கத்தில் இருந்த ஒரு சேனலில் VJவாக சேர்ந்துள்ளார். கல்லூரி படித்துக் கொண்டே இந்த வேலையையும் அவர் செய்து வந்தார். பிறகு பிறந்தநாள் பார்ட்டிகள், மால்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று அவர் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இப்படி அவரை சுற்றி வந்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தி கொண்டார்.

rithika tamilselvi

இப்படி பல சேனல்களில் VJவாக பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஒரு டெலி ஷாப்பிங் சேனலில் இருந்து அவருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வேலைக்காக மும்பை செல்ல வேண்டும் எனக் கூறினார்கள். ஆரம்பத்தில் இந்த வேலை வேண்டுமா என்ற குழப்பத்தில் இருந்தாலும், தந்தையின் உடல் நிலையையும், வீட்டின் நிலையையும் கருதி அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு மும்பை சென்று அந்த டெலி ஷாப்பிங் சேனலில் சிறிது காலம் வேலை செய்தார்.

அப்பொழுதுதான் டிக் டாக் போன்ற விஷயங்கள் பிரபலமாக தொடங்கியது. அதனால் இவரும் நடித்து சில வீடியோக்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அதை பார்த்து இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்துள்ளது. தனது முதல் தொடரான ராஜா ராணியில் கதாநாயகனுக்கு தங்கையாக நடித்தார். அது அவருக்கு புதிதான அனுபவமாக இருந்தால் அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டார் என்று ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.

பிறகு அந்த சீரியலில் இவரின் கதாபாத்திரமும் இவருக்கு துணையாக நடித்த கதாபாத்திரமும் மக்களிடமிருந்து பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளது.

வாழ்க்கையின் திருப்புமுனை:

இவரின் எதார்த்தமான நடிப்பிற்கும், குணத்திற்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். பிறகு அவர் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஏற்படுத்தியது. குக் வித் கோமாளி என்ற இந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு குக்காக போட்டியில் பங்கு பெற்றார். இவர் வயில்காடு கண்டஸ்டண்டாக நடுவில் வந்திருந்தாலும், ஒரு சில எபிசோடுகளிலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் முன்பை விட அவருக்கு ஆதரவு அதிகரிக்க தொடங்கியது.

rithika serial actrees

தனது பேச்சினாலும், எதார்த்த குணத்தினாலும் இவர் மக்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு இவருக்கு வரவேற்பு அதிகரித்து. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

தன் வாழ்க்கையில் வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு தற்போது பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் ரித்திகா.


Suggested Reading: தீபா அக்கா சிரிப்புக்கு பின்னாடி இவ்வளவு சோகமா?

Suggested Reading: குக் வித் கோமாளி கனியின் வாழ்க்கையை மாற்றியது எது

Suggested Reading: Tamil Beauty Beats DeepaShreeயின் YouTube பயணம்

அடுத்த கட்டுரை