Advertisment

Tamil Beauty Beats Deepashreeயின் YouTube பயணம்

author-image
Devayani
New Update
Tamil Beauty Beats DeepaSri

YouTube சேனல் பற்றியும், அதில் பணம் சம்பாதிக்கலாம் என்பதை பற்றியும் தற்போது மக்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது. ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு YouTube சேனல் என்பது பலர் அறியாத ஒன்றாகவே இருந்தது. அப்பொழுது YouTubeயில் தமிழில் கன்டென்ட் பதிவிடுபவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். அப்படி இருந்த காலகட்டத்திலேயே தனது YouTube சேனலை தொடங்கியுள்ளார் தீபஸ்ரீ. 

Advertisment

தீபஸ்ரீ Tamil Beauty Beats என்ற தனது YouTube சேனலில் ஸ்கின் கேர்(skincare), பேஷன்(fashion), ஹால்(haul), ஹைஜீன்(hygiene), மாதவிடாய், ரிலேஷன்ஷிப் டிப்ஸ்(relationship tips) போன்ற விஷயங்களை பதிவிட்டு வருகிறார். இவர் கல்லூரி முதல் ஆண்டிலேயே YouTube சேனல் தொடங்கி அதில் அவருக்கு தெரிந்த மேக்கப், ஹேர்ஸ்டைல்(hairstyle) போன்ற விஷயங்களை செய்து வீடியோவாக பதிவிட்டு வந்தார். தற்போது ஒன்பது லட்சத்திற்கும் மேலான Subscribers உடன் தனது YouTube பயணத்தின் ஆறாவது ஆண்டிற்குள் செல்கிறார்.

Tamil Beauty Beats period myths busted

இவர் ஆரம்பித்த காலத்தில் தமிழில் பியூட்டி கன்டென்டுகளை உருவாக்குபவர்கள் பெரிய அளவில் இல்லை. எனவே, இவர் தமிழில் பதிவிட்ட வீடியோக்கள் மக்களை ஈர்த்தது. இயல்பாக இவர் பேசுவதும், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இவர் அளிக்கும் பியூட்டி டிப்ஸ்களும்(beauty tips) மக்களை பெரிய அளவில் கவர்ந்தது. 

Advertisment

இந்த சமூகத்தில் பெண்கள் பேச தயங்கும் விஷயங்களை பற்றியும், தெரிந்து கொள்ள நினைக்கும் விஷயங்களை பற்றியும் தமிழில் தனது வீடியோக்களின் மூலம் இவர் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக மாதவிடாய் பற்றியும், அந்தரங்கப் பகுதிகளை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற சுகாதார வீடியோக்களை பதிவிடுகிறார். இதை பற்றிய விழிப்புணர்வு இந்த சமூகத்தில் பெண்களுக்கு இல்லை. ஆனால், இவர் பதிவிடும் வீடியோக்கள் இதைப்பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும் பெண்களுக்கு உதவியாக இருக்கிறது. 

tampon in tamil tamil beauty beats

தீப ஸ்ரீ சந்தித்த சவால்கள்:

Advertisment

இந்த ஐந்து வருட பயணம் அவருக்கு எளிதானது அல்ல. அதில் பல தடைகள், பல சிக்கல்கள், பல எதிர்மறையான கருத்துக்களையும் இவர் கடந்து வந்துள்ளார். சாதாரணமாகவே ஒரு பெண்ணிற்கு நிறைய அட்வைஸ்களும், கருத்துக்களும் வரக்கூடும். அதுவும் சமூக வலைத்தளங்களில் ஒரு பெண் ஏதாவது செய்து சாதிக்க நினைத்தால் அவர்களுக்கு வரும் பிரச்சனைகள் அளவுக்கு அதிகமானது. அப்படித்தான் இவருக்கும் உருவ கேலி மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் வந்தது. ஆனால் இதையெல்லாம் கடந்து வந்து அவரைப் போல் உள்ள மற்ற பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

ஒரு முறை இவரது YouTube சேனல் ஹேக் செய்யப்பட்டது. அப்பொழுது Day with Deepa என்ற ஒரு சேனலை தற்காலிகமாக தொடங்கினார். பிறகு ஹேக் செய்யப்பட்ட Tamil Beauty Beats சேனல் மீட்டு எடுக்கப்பட்டதற்கு பிறகு அவர் வழக்கமாக பதிவிடும் வீடியோக்களை Tamil Beauty Beats சேனலில் பதிவிட தொடங்கினார். 

Tamil Beauty Beats Grooming tips

Advertisment

Day with Deepa என்ற சேனலில் தனது வாழ்வில் நடக்கும் விஷயங்களை vlog ஆக எடுத்து பதிவிடுகிறார். இவர் நஞ்சு வாய்ந்த காதல் உறவில்(toxic relationship) இருந்து வெளிவந்த பிறகு மக்களுக்கு toxic relationship பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும் வீடியோக்களையும் பதிவிடுகிறார். மேலும் டிப்ரஷன்(depression), லேசினஸ்(laziness) போன்ற விஷயங்களை எப்படி கடந்து வருவது போன்ற வீடியோக்களையும் தனது YouTube சேனலில் பதிவிட்டு வருகிறார்.

இவரின் சேனலுக்கு ஆண்களை விட பெண்களின் ஆதரவு அதிக அளவில் உள்ளது. சொல்லப்போனால் இது முழுக்க முழுக்க பெண்களுக்கான ஒரு சேனல் என்றே கூறலாம். இவரின் தைரியத்தையும், எதார்த்தமான பேச்சையும் பார்த்து பல பெண்கள் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். 

பெண்கள் சுதந்திரமாக இருப்பதும் பணரீதியாக சுதந்திரமாக இருப்பதும் மிகவும் அவசியமாகிறது. தீபஸ்ரீ தனது 25 வயதிற்குள்ளே பணரீதியாக சுதந்திரமாக ஒரு பெண்ணாக உள்ளார். தனக்கு பிடித்ததை செய்வதை மட்டும் இல்லாமல் பல எதிர்மறையான விஷயங்களை கடந்து வந்து இளம் பெண்களுக்கு ஒரு ஊக்கமாகவே இருந்து வருகிறார்.

Advertisment

Suggested Reading: Simply Sruthi YouTube சேனலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

Suggested Reading: Jenni MJ மற்றும் Jenni's Hacks மூலம் மக்களை மகிழ்விக்கிறார் ஜெனிபர்

Suggested Reading: The Cheeky DNA பற்றியும், அதன் பின்னால் உள்ள கதையும்

Tamil Beauty Beats Deepashree tamilyoutuber
Advertisment