Simply Sruthi YouTube சேனலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

author-image
Devayani
New Update
simply sruthi marriage

வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் எந்த பக்கம் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கக்கூடிய முடிவு நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படி தைரியமாக தனக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இணையத்தில் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் Sruthi. 

எப்படி Simply Sruthi என்ற சேனல் ஆரம்பிக்கப்பட்டது?

Advertisment

Sruthiயின் தந்தை தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் சிறுவயதில் இருந்து அவர் நடிப்பதையும், இயக்குவதையும், மேடையில் நடக்கும் விஷயங்களையும் பார்த்து வளர்ந்த சுருதிக்கு ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்து இருந்தது. பள்ளி படிப்பை முடித்தவுடன் Viscom எடுத்து படித்துள்ளார். படித்துக் கொண்டிருக்கும் போதே லைப் ஸ்டைல் ப்ரொபோஷன்(LIfestyle Proportion) என்ற பெயரில் ஒரு blogயை இவர் நடத்தி வந்துள்ளார். அதில் லைப் ஸ்டைல் டிப்ஸை(lifestyle tips) அளித்து வந்தார்.

simply sruthi

பிறகு அவர் ஒரு இன்டர்ன்ஷிப்புக்கு சென்ற பொழுது அங்கு நடந்த சில விஷயங்களை வைத்து ஒரு நகைச்சுவையான வீடியோவை பதிவிடலாம் என முடிவு செய்தார். அதற்காக ஸ்கிரிப்ட்(script) எழுதி அவரே நடித்துள்ளார். அவருக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. அப்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் வீடியோ பதிவிடுவதில் கண்சிஸ்டெண்டாக(consistent) அவர் இல்லை. 

Advertisment

படித்து முடித்த பிறகு லாக்டவுன் வந்தது. அப்பொழுதுதான் முழு நேரமாக YouTubeயில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு வந்தார். எளிமையாக தன் பெயருடன் இருக்கக்கூடிய ஒரு புதிய பெயரை YouTube சேனலுக்கு வைக்க வேண்டும் என்று எண்ணி லைஃப்ஸ்டைல் பிரபோஷன்ஸ்(Lifestyle Proportion) என்ற பெயரை Simply Sruthi என மாற்றியுள்ளார். 

இவர் தனது UG, PGயில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் மற்றும் NET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று Assistant Professor ஆக சில நாட்களுக்கு ஒரு கல்லூரியில் வேலை பார்த்தார். பிறகு முழு நேரமாக YouTubeல் கன்டென்ட் பதிவிடலாம் என முடிவெடுத்து தற்போது முழு நேரமாக நகைச்சுவை கன்டென்டுகளை பதிவிட்டு வருகிறார். அவர் இந்த முடிவு எடுத்த போது அவரின் பெற்றோர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

simply sruthi video

அவர் சந்தித்த சவால்கள் மற்றும் எதிர்மறையான கருத்துக்கள்:

Advertisment

நமது சமூகத்தில் கன்டென்ட் கிரியேட் செய்வதை ஒரு வேலையாக யாரும் பார்ப்பதில்லை. அதை ஒரு பொழுதுபோக்கேனவே பலர் நினைக்கின்றனர். அதனால் கன்டென்ட் க்ரியேட் செய்பவர்களை அவர்களுக்கு மாத சம்பளம் தரும் வேலை இல்லை என்று நினைக்கின்றனர். அதேபோல் இவரின் உறவினர்களும் இவரை வேறு ஏதாவது படித்திருக்கலாம், வேறு வேலைக்கு சென்று இருக்கலாம் என்று அறிவுரை கூற தொடங்கினர். ஆனால் இவரின் வீட்டில் இவருக்கு ஆதரவு இருந்தது என்பதால் அதனை அவர் கடந்து வந்து விட்டார். அதேபோல் ஆரம்பத்தில் எதிர்மறையான(negative) கருத்துக்கள் வரும்போது அதனை கடந்து வர கடினமாக இருந்தது என்றும் அவர் கூறினார். பின்பு அவருக்கு வரும் நேர்மறையான(positive) கருத்துக்கள் அவருக்கு ஊக்கம் அளித்தது. 

Simply Sruthi சேனலுக்கு எது திருப்பு முனையாக இருந்தது?

இவர் பல கேரக்டர்களை உருவாக்கி அதை தனது வீடியோக்களில் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரம் தான் சோபாமா(Shobama). இந்த சோபாமா கதாபாத்திரம் ஒரு தாயின் கதாபாத்திரம். தாயின் கோபத்தை கூட நகைச்சுவையாக மக்களுக்கு காட்டும் ஒரு கதாபாத்திரம். இவரின் சோபாமா கதாபாத்திரம் மற்ற சேனல்களில் வரும் ஹேக்ஸ்களை(hacks) பார்த்து ரியாக்(react) செய்வது போல் ஒரு வீடியோவை பதிவிட்டு இருப்பார். அந்த வீடியோவிற்கு மக்களிடமிருந்து நிறைய வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தான் இவருக்கு subscribers அதிகரிக்க தொடங்கியுள்ளனர். 

simply sruthi shobama 5 mins crafts

Advertisment

அதேபோல் இவரின் அனைத்து கதாபாத்திரங்களும், இவர் போடும் வேடங்களும், அதற்கான வாய்ஸ் மாடுலேஷனும்(voice modulation) மிகவும் அற்புதமாக இருக்கும். சில முறை ஒரு நபர் தானா இதையெல்லாம் செய்கிறார் என்பதை நினைத்து வியக்க கூட வைக்கும். அப்படி தன் திறமையினால் மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார் சுருதி.

இவரின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சோபாமா, வேலு, வருண் இந்த கதாபாத்திரங்களுக்கு மக்களிடமிருந்து பெரிய வரவேற்பு உள்ளது. 

simply sruthi family

எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொள்ள அவர் கூறும் ஆலோசனை:

Advertisment

இது போன்ற எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுபவர்கள் பெரும்பாலும் ஃபேக் ஐடிகளாக(fake id) தான் இருப்பார்கள். அவர்களின் ப்ரொபைல் பிக்சர்(profile picture) கூட இருக்காது. இப்படி முகத்தை காட்ட கூட தயங்குகிறவர்கள் கூறும் கருத்தை கேட்டு நாம் நமக்கு பிடித்த விஷயத்தை செய்யாமல் பின் வாங்கினால் அதனால் அவர்களுக்கு எந்த இழப்பும் கிடையாது, நமக்கு தான் இழப்பு ஏற்படும் என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இப்படி பல விஷயங்களை கடந்து வந்த Simply Sruthi சேனலுக்கு தற்போது 2.5 லட்சத்திற்கும் மேலான subscribers உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggested Reading: Jenni MJ மற்றும் Jenni's Hacks மூலம் மக்களை மகிழ்விக்கிறார் ஜெனிபர்

Suggested Reading: யார் இந்த fitsio_max சுமையா நாஸ்(Sumaiya Naaz)?

Advertisment

Suggested Reading: தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)⁠⁠⁠⁠⁠⁠⁠

simply sruthi tamil youtuber tamilcontentcreator