Advertisment

Jenni MJ மற்றும் Jenni's Hacks மூலம் மக்களை மகிழ்விக்கிறார் ஜெனிபர்

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jenni MJ Jennifer

சமூக வலைத்தளங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல தளமாக உள்ளது. அதை தற்பொழுது பலர் நல்ல முறையில் பயன்படுத்தி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தி அவர் திறமையின் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார் ஜெனிபர்(Jennifer).

Advertisment

சமூக வலைத்தளங்களில் பலர் தற்போது கன்டென்ட் கிரியேட்(content create) செய்ய தொடங்கியிருந்தாலும், அதைவிட நிறைய நபர்கள் சமூக வலைத்தளங்களை ஒரு பொழுதுபோக்குக்காக பயன்படுத்துகின்றனர். தங்களின் ப்ரொபஷனல்(professional) வாழ்க்கையில் இருந்து வெளிவந்து சந்தோஷமாக இருப்பதற்காக சமூக வலைத்தளங்களை பார்க்கின்றனர். அதனால், நகைச்சுவையாக மக்களை என்டர்டெயின் செய்யும் கன்டென்ட்களுக்கு நிறைய வரவேற்பு உள்ளது.

ஜெனிபர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு YouTube சேனல் தொடங்கியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவருக்கு ITயில் வேலை கிடைத்தது. அப்பொழுது வேலை பார்த்துக் கொண்டே YouTubeயில் தனது வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பிறகு அந்த வேலை மன அழுத்தத்தை தருகிறது என்று அதனை விட்டு முழு நேரமாக YouTubeயில் கன்டென்டுகளை பதிவிட ஆரம்பித்தார்.

Jeni Hacks

Advertisment

ஜெனிபர் Jenni MJ என்ற YouTube சேனலை தொடங்குவதற்கு முன்பு Jenni's Hacks என்ற YouTube சேனலை தொடங்கினார். Jenni Hacks என்ற YouTube சேனலில் பல வகையான hacksகளை பரிசோதித்துப் பார்த்து பதிவிட்டு வந்தார். பிறகு நிறைய வேடங்கள் இட்டு நகைச்சுவையாக கன்டென்ட் கிரியேட் செய்து அதையும் YouTubeயில் பதிவிடலாம் என எண்ணி Jeni MJ என்ற சேனலை தொடங்கியுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக Jeni MJ என்ற சேனலுக்கு Jeni Hacks பார்வையாளர்களை விட நிறைய வரவேற்பு கிடைத்தது.

சமூக வலைத்தளங்களில் நாம் ஏதாவது பதிவிடுகிறோம் என்றாலேயே அதற்கு நேர்மறையான கருத்துகளும் வரும், எதிர்மறையான கருத்துக்களும் வரும். எதிர்மறையான கருத்துக்களை ஜெனிபர் எப்படி கையாள்கிறார்?

ஆரம்பத்தில் அவருக்கு இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்கள் வருத்தம் அளித்ததாகவும், அதற்காக அவர் அழுததாகவும் ஒரு நேர்காணலில் கூறினார். பிறகு சமூக வலைத்தளம் என்றால் அப்படித்தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு எதிர்மறையான கருத்துக்களை இக்னோர்(ignore) செய்துவிட்டார். எதிர்மறையான கருத்துக்களை கண்டு வருந்தாமல், நேர்மறையான கருத்துக்களை ஒரு ஊக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

Jenni MJ character shorts

Advertisment

எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டே இவர் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது 1.1 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பெற்றுள்ளது. எதிர்மறையான விஷயத்தைக் கூட தனக்கு சாதகமாக மாற்றி உள்ளார் ஜெனிபர்.

ஜெனியின் ஆதரவாளர்கள்:

ஜெனிபர் தனது IT வேலையை விட்டு முழு நேரமாக YouTubeயில் கன்டென்ட் கிரியேட் செய்ய போகிறேன் என்று கூறிய போது அவரின் பெற்றோர்கள் அவருக்கு ஆதரவை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் வீடியோக்களை எடுப்பதற்கு அவர் வீட்டில் உள்ளவர்கள் பெரிய அளவில் அவருக்கு உதவி வருகின்றனர். அவரின் தம்பி தான் வீடியோக்களை எடிட்(edit) செய்கிறார் என்றும் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். எனவே, இதில் ஜெனிபரின் உழைப்பு மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தில் உள்ளவர்களின் உழைப்பும் இந்த வெற்றிக்கு ஒரு காரணமாகும்.

அதேபோல் அவருக்கு வரும் நல்ல கருத்துக்கள் அவருக்கு ஒரு ஊக்கமாக இருக்கிறது. அதுதான் எதிர்மறையான கருத்துக்களை நிராகரிக்க உதவி செய்து, தொடர்ந்து அவரை வீடியோக்களை பதிவிட வைத்திறது.

Advertisment

Jenni MJ characters in youtube shorts

ஜெனிபர் எப்படி வீடியோக்களுக்கான ஸ்கிரிப்ட்(script) எழுதுகிறார்?

பெரும்பாலும் மக்களால் அவர்களின் வாழ்க்கையில் ஒப்பிட்டுக் கொள்ள முடிகின்ற விஷயத்தையே அவர் தனது வீடியோக்களில் பதிவிட்டு வருகிறார். அவருக்கு சிறிதாக ஒரு யோசனை தோன்றினாலும் அதை தனது வீடியோவிற்கு ஒரு ஸ்கிரிப்ட் ஆக எழுதி விடுகிறார். அதுமட்டுமின்றி பள்ளிகளில், கல்லூரிகளில் நடந்த விஷயத்தை வைத்து இவர் பதிவிடும் வீடியோக்கள் பலரால் அவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கொள்ள முடிகிறது. 

இவர் ஒரு தனி ஆளாக அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் என அனைத்து கதாபாத்திரங்களிலும் இவரே நடிக்கிறார். மக்களை சிரிக்க வைப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், ஜெனிபர் அதை மிக நன்றாக செய்து வருகிறார். 

Advertisment

Jeni MJ

வீடியோக்களை எடுத்து பதிவிடுவது சுலபமான காரியம் என பலர் நினைக்கின்றனர். ஆனால், அதன் பின்னால் உள்ள உழைப்பு பலருக்கு புரிவதில்லை. ஜெனிபரின் கடின உழைப்புக்கு வெற்றியாக தற்போது Jeni MJ சேனலுக்கு 1M+(ஒரு மில்லியன்) subscribers உள்ளனர். அதேபோல் Jeni Hacks சேனலும் தற்போது 9.9 லட்சம் Subscribersகளை கடந்துள்ளது. இவரை Meta Creators Day event, YouTube Creators Meet-up போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்து அவரது உழைப்பையும், திறமையும் அங்கீகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggested Reading: தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)

Advertisment

Suggested Reading: Rafflesia Illustration மூலம் பிரியதர்ஷினி இணையத்தை கலக்கி வருகிறார்!

Suggested Reading: யார் இந்த fitsio_max சுமையா நாஸ்(Sumaiya Naaz)?

Suggested Reading: Anupama's Vriksham பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

Jenni MJ Jenni's Hacks Jennifer
Advertisment