Rafflesia Illustration மூலம் பிரியதர்ஷினி இணையத்தை கலக்கி வருகிறார்!

Devayani
28 Jan 2023
Rafflesia Illustration மூலம் பிரியதர்ஷினி இணையத்தை கலக்கி வருகிறார்!

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நம்மால் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வெளி காட்டவும் முடிகிறது. அப்படி சமூக வலைதளத்தை பயன்படுத்தி தனது திறமையினால் மக்களை கவர்ந்து வருகிறார் பிரியதர்ஷினி. இவர் Rafflesia Illustration என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தனது Illustrationகளை பதிவிட்டு வருகிறார்.

இவரின் தனித்துவம் என்னவென்றால் இவர் உருவாக்கும் கேரக்டர்களில் வெஸ்டர்ன்(western) மற்றும் ட்ரெடிஷன்(tradition) இணைந்து இருக்கும். இதன் மூலம் அவர் புதிதாக ஒரு ட்ரெண்டையே உருவாக்கி வருகிறார். பிரியதர்ஷினி SheThePeople தமிழுக்காக அளித்த நேர்காணல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. இந்த ஐந்து வருட இன்ஸ்டாகிராம் பயணம் எப்படி இருக்கு? 
நான் இதை ஆரம்பித்தபோது இதை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளவும், இதை முழு நேரமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. நான் பின் தொடர்ந்த எல்லா illustratorகளை பார்த்து ஊக்கமடைந்தேன். அதன் பிறகு தான் இன்ஸ்டாகிராமில் எனது ஆர்ட் வொர்க்கை(Artwork) பதிவிடலாம் என முடிவு செய்தேன். இது இவ்வளவு தூரம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 

tamil couple illustation and karagatakari

2. ஃபுல் டைம் ஆர்ட்டிஸ்டா(full time artist) இருக்க வீட்ல எப்படி கன்வின்ஸ் பண்ணுங்க?
நான் இதை தொடங்கும் போது இதை முழு நேரமாக பண்ண வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் ஒரு ஆர்க்கிடெக்ட், அந்த துறையில் ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். வேலை முடிந்து வந்ததும் மாலை நேரங்களில் வரைவேன், அதையே இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டேன். சிறு வயதிலிருந்து எனக்கு வரைவது மிகவும் பிடிக்கும். இன்ஸ்டாகிராமில் பிறர் அவர்களின் ஆர்ட் வொர்க்களை(artwork) பதிவிட்டதை பார்த்து நானும் பதிவிட தொடங்கினேன்.

நான் இதை தொடங்கிய போது எனது ஸ்கில்லும்(skill) மிகவும் நன்றாக இல்லை. ஆரம்பத்தில் எனக்கு லோகோ டிசைனிங்(Logo Designing), போஸ்டர் டிசைனிங்(Poster Designing) போன்ற சிறிய ஆர்டர்கள் வந்தது. அப்பொழுதுதான் நான் தமிழில் இது போன்ற illustration இல்லை என்பதை உணர்ந்தேன். நான் தமிழில் illustration செய்ய தொடங்கிய பிறகு தான் எனக்கு நிறைய ஆர்டர்கள் வந்தது. அப்பொழுதுதான் இதில் என்னால் ஒரு தொழிலை உருவாக்க முடியும் என்பதை புரிந்து கொண்டேன்.

tamil women illustration rafflesia illustration

நான் வேலை செய்து கொண்டிருந்த பொழுது பணத்தை சேர்த்து வைத்திருந்தேன். அதனால் இதில் ஒரு முயற்சி செய்யலாம் என நினைத்தேன். ஒருவேளை இது எனக்கு செட்(set) ஆகவில்லை என்றால் திரும்பி ஆர்க்கிடெக்ட் வேலைக்கு சென்றுவிடலாம் என்று நினைத்து தான் ஆரம்பித்தேன்.

3. தமிழில் எப்படி illustration செய்ய ஆரம்பித்தீர்கள்?
நான் இதை தொடங்கிய போது பல வெளிநாட்டு illustratorகளை தான் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்தேன். அவர்கள் அவர்களின் வெஸ்டர்ன் கலாச்சாரத்திற்கு ஏற்ப illustration செய்தனர். நானும் ஆரம்பத்தில் அது மாதிரி தான் செய்து கொண்டிருந்தேன். பிறகு எனது illustration உடன் என்னால் என்னை இணைத்து பார்க்க முடியவில்லை. அதன் பிறகு நிறைய ஆராய்ச்சி செய்தேன், அப்பொழுதுதான் எனக்கு கேரக்டர் டிசைனிங்(character designing) செய்ய மிகவும் பிடித்திருந்ததை நான் அறிந்து கொண்டேன். 

முதலில் ஒரு பெண் புடவை அணிந்து கொண்டு, ஷூஸ்(shoes) அணிந்து கொண்டு இருப்பது போல வெஸ்டன் மற்றும் ட்ரெடிஷனை ஒன்று சேர்த்து ஒரு தமிழ் பெண்ணை வரைந்தேன். அதற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அதை போல் நிறைய செய்ய ஆரம்பித்தேன்.

character illustration of rafflesia illustration

4. தொழில் ஆரம்பிக்கும் போது பணத்தட்டுப்பாடு ஏற்படும் அதை எப்படி சமாளித்தீர்கள்?
பினான்சியல் டிசிப்ளின்(financial discipline) மெயின்டைன் செய்ய வேண்டும். நான் முன்பு வேலை செய்து கொண்டிருந்த போது பணத்தை சேமித்து வைத்திருந்தேன். இப்போது நான் சம்பாதிக்கும் பணத்தையும் நான் சேமித்து வைக்கிறேன். அதே மாதிரி நான் பெரிய அளவில் செலவுகள் செய்ய மாட்டேன். முன்பு நான் வேலை செய்து கொண்டிருந்தபோது லாக்டவுனில் வீட்டில் இருந்ததால் பெரிய அளவில் எனக்கு செலவு எதுவும் ஏற்படவில்லை. அதனால் என்னால் போதுமான அளவு சேமிக்க முடிந்தது.

5. தாழ்வு மனப்பான்மையை விட்டு எப்படி வெளிவருவது?
ஒரு கட்டத்தில் வெளியே வந்து தான் ஆக வேண்டும். நமது திறமை என்பது மிகவும் பெரிது. ஆனால், இந்த பயம் ஒரு சிறிய விஷயம். நாம் பெரிய விஷயங்களை சாதிக்க வேண்டும் எனில் இது போன்ற சிறிய தடைகளை நாம் தாண்டி தான் வர வேண்டும். நாம் எங்காவது ஒரு இடத்தில் தொடங்கி தான் ஆக வேண்டும். எனவே, உடல் வடிவம், நிறம் போன்றவற்றை பற்றி கவலை கொள்ளாமல் பிடித்ததை செய்ய ஆரம்பியுங்கள்.

tamil women mindvoice illustration rafflesia illustration

பிரியதர்ஷினி உடன் நடந்த நேர்காணல் Thuglife Thalaivi  என்ற பாட்காஸ்டில்(podcast) நீங்கள் கேட்கலாம். அவர் illustrationனில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பல பயனுள்ள குறிப்புகளையும் வழங்கியுள்ளார். எனவே. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதைக் கேட்டு பயன்பெறுங்கள்.

Click here: Thuglife Thalaivi - Priyadharshini - Rafflesia Illustration


அடுத்த கட்டுரை