/stp-tamil/media/media_files/taIIYvZzoJhUnKvGkTQi.png)
Image of Muthamizh
முத்தமிழ் அயனாவரத்தில் ஒரு Slumஇல் பிறந்தார். 12ஆம் வகுப்பு முடித்த பிறகு ஸ்கவுட் கோட்டாவில் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு வழங்கிய ராஷ்ட்ரபதி விருதை அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுள்ளார். பள்ளி படிப்பை முடித்த பிறகு Bachelor of Social Work படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ரயில்வே ரெக்ரூட்மெண்டில் இருந்து வேலை கிடைத்தது. அரசாங்க வேலை என்பதால் வீட்டில் அனைவரும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல வலியுறுத்தினார்கள்.
அதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். அங்கு பாத்திரம் கழுவுவது, சாலைகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை மூன்று வருடத்திற்கு செய்து வந்தார். ஆனால் படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் இந்த வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே B.Sc சைக்காலஜியை Corresஇல் முடித்துவிட்டு லொயோலாவில் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் பற்றியும் படித்துள்ளார்.
பிறகு வாழ்க்கை ஒரு கட்டத்துக்குள்ளேயே இருக்கிறது என்பதை உணர தொடர்ந்தார். தனது நண்பர்கள் மூலமாக மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்(Tata Institute of Social Science) பற்றி அவருக்கு தெரிய வந்தது. கடினமாக படித்து நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் மத்திய அரசு வேலையை விட்டு அங்கு சென்று படிப்பதற்கு வீட்டில் நிறைய தடைகள் ஏற்பட்டது. இருப்பினும் இந்த தடைகளை எல்லாம் எதிர்த்து மும்பைக்கு சென்று மாஸ்டர் ஆஃப் சோசியல் வோர்க் சேர்ந்தார்.
மும்பை புதிதான ஒரு இடம் என்பதால் அங்கு மொழி வேற்றுமைகள் இருந்தது. இதனை விட்டு திரும்பி சென்று விடலாம் என்றும் அவர் யோசித்தார். ஆனால் வீட்டை எதிர்த்து வெளியே படிக்க வந்த ஒரு பெண் திரும்பிப் போனால் அடுத்து வர தலைமுறைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது என்றும் சமூகத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து அங்கு படித்தார். கஷ்டப்பட்டு படித்து ஒரு வெற்றிகரமான மாணவராக இருந்தார். அங்கு நடந்த மாணவர்களின் தேர்தலில் கலந்து கொண்டு முதல் தலித் பெண் பிரசிடெண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அங்கு ஒரு டாப்பர் ஆகவே இருந்தார்.
அங்கு படித்து முடித்த பிறகு ஆஸ்திரேலியாவில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆஸ்திரேலியா சென்று இரண்டு வருடங்கள் அங்கு வேலை பார்த்தார். அதன் பிறகு நிறைய குழந்தைகளுக்கு திறமை இருக்கிறது ஆனால் அதை வெளிக்கொண்டு வர வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதை எண்ணி, சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால், ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்து மீண்டும் இந்தியா வர முடிவெடுத்தார்.
இந்த முறையும் மீண்டும் வேலையை விட்டு வருவதற்கு நிறைய தடைகள் ஏற்பட்டது. அனைவரும் இவரை விமர்சிக்க ஆரம்பித்தனர். அன்று அரசு வேலையை விட்டு படிக்க சென்ற போதும், இன்று ஆஸ்திரேலியாவில் வேலையை விட்டு மீண்டும் இந்தியாவிற்கு வருவதும் தெரிந்தவர்களிடமிருந்து நிறைய விமர்சனங்களை பெற வைத்தது. இருப்பினும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி தன்னை போல் உள்ளவர்களிடம் இதனை பற்றி கூறி 2014ல் சென்னை வந்து நீலம் என்ற ஒரு ஆர்கனைசேஷனை தொடங்கினார்.
சாதி, மதம் என வேற்றுமை இல்லாமல் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே முதல் கடமையாக வைத்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களின் உரிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அடக்குமுறைகளற்ற, அநீதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறார். இதனால் பல ஸ்லம்களுக்கு சென்று இதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
2015இல் 5 வயதை உடைய ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து அந்த குழந்தைக்கு தாயாக மாறினார். இளம் வயதில் திருமணம் ஆகாத ஒரு பெண் ஒரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்றால் இந்த சமூகத்தில் இருந்து நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க தத்தெடுத்து குழந்தை வளர்ப்பது தவறில்லை என்று கூறுகிறார்.
முத்தமிழின் அறிவுரை:
யார் என்ன சொன்னாலும், நமக்கு பிடித்ததை தைரியமாக செய்ய வேண்டும் என்றும் நமது வளர்ச்சியை எது தடை செய்கிறதோ அதை புறக்கணித்து நம் உரிமை பற்றி தெரிந்து கொண்டு, நம் வாழ்க்கை முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்.