Advertisment

மக்கள் விரும்பும் கன்டென்டுகளை பதிவிடும் ஸ்ரீநிதி(Style with Srinidhi)

ஸ்டைல் வித் ஸ்ரீநிதி(Style with Srinidhi) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஸ்டைலிங் உடன் சேர்த்து சமூகத்தில் நடக்கும் பாகுபாடுகளையும் பதிவிட்டு வருகிறார். ஸ்ரீநிதி வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
style with srinidhi

Images are used from Srinidhi's Instagram handle.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தற்போது நிறைய மக்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். அதேபோல் தற்பொழுது அனைவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். எனவே, இன்புளுவன்சர்(influencer) மார்க்கெட்டிங் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆன்லைனில் ஆடைகள் வாங்குவது அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் ஆடைகளுக்கான இன்புளுவன்சராக இருப்பது மட்டுமில்லாமல் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீநிதி.

Advertisment

தேனியில் வளர்ந்த ஸ்ரீநிதி, கல்லூரி படிப்பை முடித்த பிறகு சென்னையில் வேலை செய்துள்ளார். 2018இல் திருமணமாகி, 2019இல் அவருக்கு குழந்தை பிறந்தது.  அதன் பிறகு 2021 ஸ்டைல் வித் ஸ்ரீநிதி(Style with Srinidhi) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் இந்த பக்கத்தில் அவர் ஸ்டைலிங் டிப்ஸ்களை(Styling tips) வழங்கி வந்தார். ஆரம்பித்த மூன்று மாதங்களுக்கு பெரும்பாலான பார்வையாளர்கள் கிடைக்கவில்லை. பிறகு அவர் வீடியோக்கள் பதிவிடுவதையே விட்டு விட்டார்.

tamil fashion instagram influncer

ஒருமுறை அவரின் தோழி அவரின் வீடியோவை பற்றி நேர்மறையான கருத்துக்களை கூறிய பிறகு மீண்டும் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்துள்ளார். அப்பொழுது வெறும் ஸ்டைலிங் பற்றி மட்டும் சொல்லாமல் கன்டென்ட் உடன் உடைய ஒரு ரீல்சை பதிவிட்டார். திருமணம் செய்து கொள்வதற்கு சரியான வயது எது? என்ற அவரின் ரில்ஸ் ஒரு வாரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அப்பொழுதுதான் அவர் ஸ்டைலிங் மட்டும் இல்லாமல் கன்டென்ட் ரில்ஸையும் சேர்த்து பதிவிட்டால் மக்களிடமிருந்து நிறைய வரவேற்பு கிடைக்கிறது என்பதை புரிந்து கொண்டு தொடர்ந்து இது போன்றே பதிவிட்டு வருகிறார்.

Advertisment

அவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து மக்களுக்கு தொடர்பு கொள்ள முடிகிற விஷயங்களை பதிவிடுகிறார். நம் சமூகத்தில் அன்றாட பெண்கள் சந்திக்கும் பாகுபாடுகளை பற்றி தனது வீடியோவில் பதிவிட்டு வருகிறார். மேலும் கர்ப்ப காலத்தில் மற்றும் குழந்தை பெற்ற பிறகு பெண்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அழகாக தனது ரில்சுகளின் மூலம் பதிவிட்டு வருகிறார். 

ஒரு நேர்காணலில் கூட இது போன்று பாகுபாட்டிற்காக எதிர்த்து குரல் கொடுப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும், தான் உருப்படியாக ஏதோ ஒன்று செய்வது போல் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இவர் ஆரம்பித்த காலத்தில் தான் ரீல்சும் வளர தொடங்கியது. எனவே, அதை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு எது பிடிக்கிறது என்று தெரிந்து கொண்டு அதன் மூலம் சமூகத்தில் நல்ல விஷயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீநிதி.

Advertisment

srinidhi fashion influencer⁠⁠⁠⁠⁠⁠⁠

இவர் ஸ்டைலிங் உடன் இது போன்ற கன்டென்டுகளையும் சேர்த்து பதிவிடுவதால் மக்கள் இரண்டையும் ரசிக்கின்றனர். முன்பு கூறியது போலவே இன்ஸ்டாகிராமில் இன்புளுவன்சர் மார்க்கெட்டிங் அதிகரிப்பதால் இவரும் அதை செய்து வருகிறார். இன்புளுவன்சர் மார்க்கெட்டிங் மக்களுக்கு பெரிய அளவில் சென்றடைகிறது என்பதால் அதில் கவனமாக இருக்க வேண்டும். நாம் என்ன பொருட்களை பரிந்துரைக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஸ்ரீநிதி ஒரு நேர்காணலில் உணவுப் பொருட்கள், விளையாடும் செயலிகள் மற்றும் தான் பயன்படுத்தாத பொருட்களை மக்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்‌. மேலும் ஆரம்பத்தில் NO என்று சொல்வதற்கு கடினமாக இருந்தாலும் பிறகு தான் ஒரு பொறுப்பில் இருப்பதை நினைத்து அவர் பயன்படுத்தாத பொருள்களுக்கும், மக்களை நல்வழி படுத்தாத பொருட்களுக்கும் அவர் ஆதரவு தருவதில்லை.

இவர் புது விதமாக ஸ்டைலிங்கையும், மக்களின் வாழ்க்கையில் தினம் தோறும் நடக்கும் விஷயங்களையும் சேர்த்து பதிவிடுவதால் அது மக்களை பெரிய அளவில் கவர்ந்து உள்ளது. தற்போது அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேலான பாலோவர்ஸ்(followers) இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Suggested Reading: இன்னைக்கு என்ன சமையல் (Innaiku Enna Samayal) சுனிதாவின் பயணம்

Suggested Reading: RJ Ananthi - The Book Showவின் பயணம்

Suggested Reading: தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)

Suggested Reading: Home Cooking Show வெற்றியின் காரணம்- Hema Subramanian

style with srinidhi tamil influencer fashion influencer
Advertisment