பல திருப்பங்களோட இருக்குறது தான் வாழ்க்கை. அடுத்து என்ன நடக்க போகுதுன்னு தெரியாம தான் நாம் எல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம். அப்படி RJ ஆனந்தி வாழ்க்கையில் நடந்த ஒரு எதிர்பாராத விபத்து தான் அவருடைய வாழ்க்கையையே மாற்றி இருக்கு. இந்த விபத்து நடந்த பிறகு முகத்தில் நான்கு பிராக்சர்(fracture) ஆனதால் முக அமைப்பு மாறி அவருடைய குரலிலும் சிறிது மாற்றங்கள் ஏற்பட்டது என்பதை ஜோஸ் டாக்கில்(Josh Talk) அவர் கூறியிருப்பார்.
இந்த விபத்திற்கு பிறகு தான் வாழ்க்கை பற்றி தெரிந்ததாகவும், பிடித்ததை செய்ய வேண்டும் என்பதையும் முடிவெடுத்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தோழிகளுடன் RJ ஆடிஷனுக்கு(audition) சென்று தேர்ச்சி பெற்றார். அதிலிருந்து அவரின் RJ பயணம் தொடங்கியது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு RJ, VJ மற்றும் திரையுலகிலும் தனது திறமையின் மூலம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
RJ Ananthi - The Book Show எப்படி ஆரம்பித்தது:
RJ வேலையை விட்ட பிறகு அடுத்து என்ன செய்யணும் என்று யோசித்தார். அப்பொழுது YouTubeஇல் சில சேனல்களில் அவர் நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருந்தார் மற்றும் ஃப்ரீலான்சராக(freelancer) வலம் வந்தார். அவர் அப்பொழுது செய்து கொண்டிருந்த வேலை அவருக்கானதில்லை என்பதை உணர்ந்த பிறகு, என்ன செய்யலாம் என்பதை யோசித்தார். அப்பொழுது பரிதாபங்கள் சுதாகர் உனக்கு புக் படிக்க பிடிக்கும் அப்போ அதையே பண்ணு என்று கூறினார். அதன் பிறகு பரிதாபங்களில் The Book Show என்று மூன்று எபிசோடுகள் வெளியானது.
பரிதாபங்களில் ஆடியன்ஸ்(audience) மற்றும் புத்தகம் படிப்பவர்களின் ஆடியன்ஸ் வேறுபட்டது என்பதால் தனியாக The Book Show என்ற YouTube சேனல் தொடங்கப்பட்டது. RJ ஆனந்தி அவர்களுக்கு புத்தகம் படிக்க பிடிக்கும், நன்றாக பேசவும் வரும் என்பதால் இது இரண்டும் The Book Show என்ற சேனலுக்கு அடித்தளமாக இருந்தது.
The Book Show மக்களிடம் எப்படி வரவேற்பை பெற்றது:
The Book Show மக்களிடையே வரவேற்பை பெற்றதற்கான ஒரு முக்கிய காரணம் அவர் பேசும் விதமும், எளிமையாக எல்லா மக்களுக்கும் புரியும் வகையில் புத்தகத்தை பற்றி கூறியதும் மற்றும் இயல்பாக அதைப்பற்றி விளக்கியதும் தான். ஒரு புத்தகத்தைப் பற்றி பேசும்போது ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் அதே எனர்ஜியுடன்(energy) மக்களுக்கு கேட்க ஆர்வத்தை தருவது போல இருப்பதே இவருடைய வீடியோக்களின் தனித்துவம்.
Fiction, non-fiction, self help, உளவியல், தத்துவம் என எல்லா வகையான புத்தகங்களை பற்றியும் அவர் படித்து புக் ரிவ்யூ(review) செய்து வருகிறார். படிக்க பிடிக்காதவர்களுக்கு கூட இவரின் வீடியோக்களை பார்த்தால் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விடும்.
புத்தகம் படிக்க நேரம் எப்படி கிடைக்கிறது?
ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு புத்தகங்களை பற்றி அவர் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவ்வளவு புத்தகங்கள் படிக்க அவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்டதற்கு, பலருக்கு புத்தகம் படிக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான நேரம் அவர்களுக்கு இருக்காது. சிலருக்கு வேலை மற்றும் குடும்பத்தில் சில பொறுப்புகள் இருப்பதால் அவர்களுக்கு புத்தகம் படிக்க நேரம் கிடைக்காது. ஆனால் அவருக்கு இதுதான் வேலை என்பதால் பெரும்பாலான நேரத்தை புத்தகம் படிப்பதிலேயே செலவிடுகிறார். தற்போது மாதத்திற்கு 8 புத்தகங்கள் வரை படித்து முடிக்கிறார்.
அவருக்கு டெலிவிஷன் நிகழ்ச்சிகள் மற்றும் இவென்டுகளை(events) தொகுத்து வழங்க வாய்ப்புகள் வந்தாலும் பல சமயங்களில், பல விஷயங்களுக்கு அவர் NO என்று சொல்ல வேண்டி உள்ளது. அப்பொழுதுதான் அவர் இந்த YouTube சேனலில் கண்சிஸ்டெண்சியை(consistency) தொடர முடியும்.
மற்ற விஷயங்களுடன் ஒப்பிடும்போது புத்தகத்திற்காக ஒரு YouTube சேனல் என்பது மிகவும் குறைவாக உள்ளது. அதுவும் தமிழில் எடுத்துக் கொண்டால் அது அதைவிட குறைவாக இருக்கும். அப்படி இருக்க புத்தகம் படிக்க விரும்புவர்களுக்கு இந்த YouTube சேனல் ஒரு வரப் பிரசாதமாக இருக்கிறது. இதில் புத்தகம் படிப்பவர்கள் மட்டுமின்றி இவர் பேசுவதை கேட்பதற்காகவும், சிறிய நேரத்திற்குள் புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களை தெரிந்து கொள்வதற்காகவும் இந்த YouTube சேனலை மக்கள் பார்த்து வருகின்றனர்.
இன்னொரு தனித்துவமான விஷயம் என்னவென்றால் இவர் வீடியோக்களுக்காக தேர்ந்தெடுக்கும் இடங்கள் பார்பதற்கு அழகாக இருக்கும். ஒவ்வொரு வீடியோவிற்கும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று அவர் வீடியோக்களை எடுத்து வருகிறார்.
தற்போது The Book Showவிற்காக ஒரு குழுவே வேலை செய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி சமூகத்தில் சமத்துவத்தை பரப்புவதற்காகவும், பெண்களுக்கு ஆதரவாகவும் அவ்வப்போது அவர் குரல் எழுப்பி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Suggested Reading: தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)
Suggested Reading: Home Cooking Show வெற்றியின் காரணம் - Hema Subramanian
Suggested Reading: RJ Sindhu சிரிக்கவும் வைக்கிறார், சிந்திக்கவும் வைக்கிறார்!