Advertisment

திலகவதி - முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞரின் வாழ்க்கை பயணம்

பல எதிர்ப்புகளையும், எதிர்மறையான விஷயங்களையும் கடந்து தனக்கு பிடித்த ஒரு கலையில் திறமையை வளர்த்துக் கொண்டு அதில் முதல் பெண் கலைஞர் ஆனார் திலகவதி. அவரின் வாழ்க்கை பயணத்தை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
thilagavathi kattai koothu

Image of Thilagavathi

கட்டைக்கூத்து என்னும் கலையில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே நடித்து  வந்தனர். ஆண்களே பெண்ணாக வேடம் அணிந்து நடித்து வந்தனர். இப்படி இருக்க திலகவதி என்பவர் கட்டைக்கூத்து கலையில் நடிக்கும் முதல் பெண் ஆனார். பல தடைகளை தாண்டி, பாலின பாகுபாட்டை உடைத்து அவர் இந்த கலையில் நடித்து வருகிறார்.

Advertisment

திலகவதி காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த வளர்ந்துள்ளார். அவருடைய சித்தப்பா கட்டைக்கூத்து கலைஞர் என்பதால் அதை அந்த கிராமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கற்றுத் தந்து வந்தார். அப்பொழுது தான் திலகவதியும் அதில் சேர்ந்து அந்த கலையை கற்றுக் கொள்ள தொடங்கினார். அப்பொழுது ஒரு முறை 8 மணி நேரம் கட்டைக்கூத்து அவரின் குரு முன்னால் ஆடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. குருகுல பள்ளி ஒன்றை அவர் குருவான ராஜகோபாலன் மற்றும் அவரது மனைவி தொடங்கலாம் என நினைத்தனர். அந்த குருகுலத்தில் படிப்பு கற்று தருவது மட்டும் இல்லாமல் கட்டைக்கூத்து கலையையும் சேர்த்து கற்று தந்தனர்.

அதனால், திலகவதி அதில் சேர்ந்தார். ஆரம்பத்தில் நல்ல இடம், நல்ல சாப்பாடு கிடைக்கிறது மற்றும் அணிந்து கொள்ள நல்ல உடைகள் கிடைக்கிறது என்று அவர் சேர்ந்துள்ளார். சேர்ந்த பிறகு நடனம் மற்றும் பாடல்கள் பாடுவது போன்ற விஷயங்கள் அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இதற்காக அவர் குருகுலத்திற்கு சென்றாலும் பிறகு உண்மையாக இவருக்கு கட்டைக்கூத்து கலையில் ஆர்வம் வந்தது. பல ஆண்களுக்கு மத்தியில் மூன்று பெண்கள் மட்டுமே அந்த கலையை கற்றுக் கொண்டு வந்தனர்.

kattai koothu

Advertisment

பெரும்பாலும் அவரின் கிராமத்தில் பெண்கள் வயதுக்கு வந்த உடனே திருமணம் செய்து வைத்துவிடுவர். அப்படி இவருடன் அந்த கலையை கற்றுக் கொண்ட மற்ற பெண்கள் வயதிற்கு வந்தவுடன் அந்தக் கலையில் இருந்து அவர்களை நிறுத்திவிட்டனர். ஏனென்றால், பெண்கள் வயதிற்கு வந்த பிறகு மற்ற ஆண்கள் முன்பு மேடை ஏறி இது போன்று நடிப்பது அவர்களின் குணத்தை சந்தேகிக்கும் மற்றும் அவர்களுக்கு திருமணம் ஆவது கடினம் என்று பயந்து பெற்றோர்கள் அவர்களை நிறுத்திவிட்டனர்.

இப்படித்தான் திலகவதிக்கும் ஆனது. ஆனால் அவருடைய குருவும் அவர் மனைவியும் இவருக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு இந்த கலையில் பெண்கள் யாருமே இல்லாதது வருத்தத்தை அளித்தது. இதை திலகவதியுடன் பகிர்ந்து கொண்டனர். ஆனால் திலகவதிக்கு தனது பெற்றோர்களையும், உறவினர்களையும் எதிர்த்து பேசுவதற்கான தைரியம் இல்லை. பிறகு அவரின் குருவும், மனைவியும் தந்த ஆதரவினால் தனது பெற்றோர்களிடம் பிடிவாதம் பிடித்து "உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும் விடுங்கள், இல்லை என்றால் விட வேண்டாம்" என்று கூறியுள்ளார். அப்பொழுது அவரின் பெற்றோர்கள் மற்றவர்களுக்காக பிள்ளையை சந்தேகப்பட கூடாது என்று எண்ணி அவர்களும் ஆதரவு அளிக்க தொடங்கினர்.

பிறகு அந்த குருகுலத்தில் இவர் நிறைய வேலைகளை குருவின் அசிஸ்டன்டாக இருந்து செய்து வந்தார். மேலும் அந்தக் கலையில் முழு ஈடுபாடுடன் இருந்தார். பல பெண்கள் இந்த கட்டைக்கூத்து கலைக்கு வர வேண்டும் என்று எண்ணினார். இவர் இந்த கலையில் முதல் பெண்ணாக வந்த பிறகு நிறைய பெண்கள் முன் வந்து கட்டைக்கூத்து கலையை கற்றுக் கொள்ள தொடங்கினர்.

Advertisment

kattai koothu makeup⁠⁠⁠⁠⁠⁠⁠

தற்போது வெளியிடங்களுக்கும் சென்று இவர் கட்டைக்கூத்து கலையை மற்றவர்களுக்கு கற்று தருகிறார். இந்த கலையின் மூலம் இவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் ஜோஷ் டாக்கில் பேசியபோது கூறியுள்ளார். கட்டைக்கூத்து கலையை பற்றிய workshops நடத்தி வருகிறார். கூத்துக்கள் அழிந்து வருகிறது என்று பலர் கூறுகின்றனர். ஆனால், கிராமங்களில் இன்னும் அவை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

கட்டைக்கூத்து மரங்களினால் செய்த ஆபரணங்களை அணிந்து கொண்டு தான் நடிக்க வேண்டும் என்பதால் பெண்களுக்கு அது கடினமாக இருக்கும் என்று எண்ணி பலர் அதில் வர யோசிப்பார்கள் அல்லது வீட்டில் பெற்றோர்கள் அவர்களை தடுக்கவும் செய்வார்கள். ஆனால், திலகவதி எந்த பாரபட்சமும் இல்லாமல் ஆண்களுக்கு இணையாக அதை அணிந்து கொண்டு இரவு முழுவதும் நடித்து வந்திருக்கிறார்.

Advertisment

பெண்கள் இந்த கலையில் இருப்பதால் மற்றொரு பிரச்சனையாக மக்கள் கருதுவது திருமணம். பெண்கள் பல ஆண்களுக்கு முன்பு மேடை ஏறி நடிப்பதையும், ஆண்கள் அதனை ரசித்துப் பார்ப்பதையும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர் என்று கூறுவார்கள். ஆனால், திலகவதி மற்ற கிராமங்களுக்கு செல்லும் பொழுது அவரை ஆண்கள்தான் பத்திரமாக பார்த்துக் கொண்டனர் என்றும் தனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு சகோதரியாக கருதி அதை செய்தனர் என்றும் ஜோஷ் டாக்கில் கூறியுள்ளார்.

மேலும், திலகவதி பெண்கள் அவர்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்றும் அப்படி ஒரு விஷயம் செய்வதனால் உங்களுக்கு மனதிருப்தி கிடைக்கும் என்றால் அதை செய்வதில் தவறில்லை என்றும் கூறியுள்ளார்.

 

Advertisment

Suggested Reading: என் வாழ்வில் பிடிவாதம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது - Saritha Jo
Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?
Suggested Reading: Nykaa நிறுவனத்தின் நிறுவனர் மாணவர்களுக்கு கூறும் ஆலோசனை
Suggested Reading: சுயமரியாதையை (self-esteem) அதிகரித்துக் கொள்வதற்கான ஐந்து பழக்கங்கள்

கட்டைக்கூத்து kattai koothu thilagavathi
Advertisment