Advertisment

யார் இந்த fitsio_max சுமையா நாஸ்(Sumaiya Naaz)?

சுமையா நாஸ் தனது சமூக வலைத்தளங்களில் பிட்னஸ் டிப்ஸை அளித்துக் கொண்டிருந்தார். தற்பொழுது அண்ணா நகரில் ஒரு physio சென்டர் ஆரம்பித்துள்ளார். அவரின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sumaiya Naaz photos

உங்ககிட்ட ஒரு மொபைலையும் அதுக்கான Wi-Fi கனெக்ஷனும் கொடுத்தா நீங்க என்ன பண்ணுவீங்க? நிறைய பேர் படம் பாப்பிங்க, ரீல்(reel) பாப்பீங்க இல்ல ஏதாவது சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இருப்பீங்கனு நினைச்சு இருக்கலாம். ஆனால் சுமையா நாஸ் என்ற ஒரு பெண் வெறும் மொபைலையும், Wi-Fi கனெக்ஷனையும் வைத்து மட்டுமே ஆரம்பிச்ச ஒரு விஷயம் இப்போ இரண்டு லட்சம் பாலோவர்ஸ்க்கு(followers) மேல வந்திருக்கு.

Advertisment

சுமையாக நாஸ் அவங்களோட fitsio_max என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் physiotherapy மற்றும் fitness  டிப்ஸை கொடுத்துட்டு வராங்க. ஆனா, அவங்க இத ஆரம்பிச்ச காலத்துல பல தடைகளை தாண்டி ஆரம்பிச்சிருக்காங்க.

சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுமையா பல முறை அவருடைய உறவினர்களால் அதிர்ஷ்டம் அற்றவள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். ஏனென்றால், இவர் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு ஒரு கல்லூரியில் சேர்ந்து உள்ளார். பிறகு அதிலிருந்து வெளிவந்து MBBS சேர்ந்துள்ளார். இதில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு சில காரணங்களால் அதிலிருந்து வெளிவரும் நிலைமை ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அனைவரும் இவருக்கும் படிப்பிற்கும் ராசி இல்லை என்று அவ்வப்போது அவரை தாழ்த்தியுள்ளனர்.

Sumaiya Naaz

Advertisment

அந்த இரண்டு வருடத்திற்கு பிறகு கவுன்சிலிங் மூலம் பிசியோதெரபி(Physiotherapy) சேர்ந்துள்ளார். பிசியோதெரப்பில் சேர்ந்த போது இவருக்கு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று எந்த முடிவும், இலக்கும் இல்லை. இருப்பினும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. எனவே, படிப்பில் மிகவும் கவனமாக இருந்தார். 

இந்த சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை என்றாலே கல்லூரி படிப்பை முடித்த உடன் வேலைக்கு செல்கிறார்களோ இல்லையோ அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அப்படித்தான் இவரும் படிப்பை முடித்தவுடன் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரின் வீட்டில் கட்டாயப்படுத்தியுள்ளனர். அப்பொழுது லாக்டவுன்(lockdown) வந்த காரணத்தினால் அவரால் வெளியே வேலைக்கும் செல்ல முடியவில்லை.

இது அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அப்பொழுது அவரிடம் ஒரு செல்போனும், Wi-Fi கனெக்ஷனும் மட்டுமே இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த இரண்டையும் பயன்படுத்தி ஆன்லைனில் பிசியோ(physio) கற்று தரலாம் என முடிவெடுத்தார். இதற்கான காரணம் அவ்வப்போது அவரின் நண்பர்கள் அவர்களின் உடல் பிரச்சினையை கூறி அதற்கான தீர்வை சுமையாவிடம் கேட்பர். அப்படி ஆரம்பத்தில் இரண்டு மூன்று நபர்களை வைத்து ஆரம்பித்த இந்த வேலை தற்போது ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இவர் ஆன்லைனில் மூலம் உடல் பிரச்சினைகளுக்கு தீர்வு அளித்துள்ளார்.

Advertisment

fitsio max sumaiya naaz

ஒரு அறையை மட்டும் பயன்படுத்தி செல்போன், Wi-Fi கனெக்ஷனை சரியாக பயன்படுத்தி அவர் யாருக்கும் தெரியாமல் இதை செய்து கொண்டு இருந்தார். அவர் வீட்டில் கூட அவர் செய்து கொண்டு இருந்த இந்த வேலை ஆறு மாதத்திற்கு பிறகு தான் அவரின் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. பின்பு இதைப் பற்றி வீட்டில் இருப்பவர்கள் அறிந்து கொண்ட பிறகு அனைவரும் அவரின் உழைப்பை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவளிக்க தொடங்கினர்.

ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வீடியோக்களை பதிவிட்டிருந்தாலும் அது பெரும்பாலான பார்வையாளர்களை ஈர்க்கவில்லை. அதன் பிறகு தான் தமிழில் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்தி மக்களை ஈர்க்கும் வகையில் நகைச்சுவையான பேச்சுக்களுடன் இணைந்து fitness டிப்ஸையும் சேர்த்து அவர் வீடியோவை பதிவிட்ட தொடங்கினர். அதன் பிறகு பெரும்பாலான மக்கள் இவரின் வீடியோக்களை பார்க்க தொடங்கிவிட்டனர்.

Advertisment

Sumaiya Nazz Awards

இவரின் தனித்துவமும் இதுவே ஆகும். இது மக்களுக்கு பிடித்திருந்தால் அவருக்கு பெரிய அளவில் ஆதரவை அளித்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் physio கற்று தர முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால் இவர் ஆன்லைனின் மூலம் physio கற்று தர முடியும் என்பதை நிரூபித்துள்ளார். 

தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருப்பது மட்டுமில்லாமல் பல சேனல்களுக்கு நேர்காணலும் அளித்து வருகிறார். தற்போது அண்ணா நகரில் Fitsio Max என்ற பெயரில் ஒரு சென்டர் ஆரம்பித்து மக்களுக்கு நேரடியாக ஃபிட்னஸ் மற்றும் பிசியோ கன்சல்டேஷன் செய்து வருகிறார். இவரின் இந்த கடின உழைப்பிற்கான வெற்றியாக பல விருதுகளையும் இவர் வென்றுள்ளார். மன அழுத்தத்திலிருந்த ஒரு பெண், தன்னிடம் இருந்த விஷயங்களை மட்டும் வைத்து தற்பொழுது இந்த நிலைமைக்கு வளர்ந்திருப்பது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Suggested Reading: Anupama's Vriksham பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

Suggested Reading: RJ Ananthi - The Book Showவின் பயணம்

Sumaiya Naaz fitsiomax physiotherapist chennai physiotherapist
Advertisment