Content creatorsகளால் பலவிதங்களில் மக்களை influence செய்ய முடியும். அது அவர்கள் கூறும் பொருட்களை வாங்குவதற்கு influence செய்யலாம், அவர்களின் வாழ்க்கையை பார்த்தும், அவர்களை பார்த்தும் நேர்மறையான விஷயங்களை கற்றுக்கொண்டு வாழவும் ஊக்கமளிக்கலாம். அப்படி பல பெண்களுக்கு ஊக்கமாக இருந்து வருகிறார் சுபலட்சுமி(Subhalaxmi). சுபலட்சுமி என்று அவர் பெயரை விட அவரின் YouTube சேனலின் பெயர்(The Cheeky DNA) மூலமாகவே அறியப்படுகிறார். அப்படி மக்களின் மனதில் தனது வீடியோக்களின் மூலம் இடம் பெற்றுள்ளார்.
YouTube சேனல் தொடங்கப்பட்ட கதை:
Subhalaxmi கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே பல வெளிநாட்டு Youtubersகளை பார்த்து இன்ஸ்பயர்(inspire) ஆகியுள்ளார். மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எப்பொழுதுமே இருந்தது. எனவே, வீட்டில் இதைப் பற்றி கூறிய போது அவர்களும் சரி என்று கூறிவிட்டனர். அப்பொழுதுதான் The Cheeky DNA என்ற சேனலை ஆரம்பித்து அதில் நகைச்சுவையான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
அவர் ஆரம்பித்த காலத்தில் தான் தமிழ் மக்களுக்கு YouTube பற்றி நிறைய தெரிய வந்தது மற்றும் YouTubeல் தமிழில் கன்டென்ட் உருவாக்குபவர்களும் அதிகரித்துக் கொண்டிருந்தனர். எனவே இவர் தனது The Cheeky DNA என்ற சேனலை ஆரம்பித்த நேரம் மிகவும் சரியான நேரமாக அமைந்தது.
தற்போது The Cheeky DNA என்ற YouTube சேனலில் பல வேடங்கள் இட்டு நகைச்சுவையான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல் Cheeky Vlogs என்ற மற்றொரு YouTube சேனலின் மூலம் தனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை பற்றியும், லைஃப் ஸ்டைல்(lifestyle), ஃபேஷன்(fashion) போன்ற விஷயங்களையும் பதிவிட்டு வருகிறார்.
எதிர்மறையான கருத்துக்களை எப்படி கையாளுகிறார்:
இவர் வீடியோ பதிவிட்ட ஆரம்ப கட்டத்தில் பலர் இவரை உருவ கேலி செய்துள்ளனர். உருவ கேலி என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கிற ஒன்று. ஆனால் சமூக வலைத்தளங்களில் கன்டென்ட் கிரியேட் செய்பவர்களுக்கு அது சாதாரண மனிதர்களை விட அதிகமாக உள்ளது.
இவர் YouTube தொடங்குவதற்கு முன்பே YouTubeயில் சேனல் தொடங்கியவர்களின் அனுபவத்தை கூறும் வீடியோக்களை பார்த்து ஒரு ஆராய்ச்சி செய்துள்ளார். எனவே, அவருக்கு இதுபோன்று விஷயங்கள் நடக்கும் என முன்பே தெரிந்திருந்ததால் இதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அவரின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரித்ததால் இதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மேலும் ஒரு நேர்காணலில் கூட அவர் இந்த சமூகம் அழகு என்று வரையறுக்கப்பட்டுள்ள விஷயங்களுக்குள் பொருந்துபவர்களை மக்கள் நிறைய பார்த்துள்ளனர். ஆனால் அப்படி பொருந்தாமல் இருக்கும் என்னை பார்க்கும் போது என்னை போல் உள்ள பல பெண்களுக்கு அது ஒரு ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன் என்றும் தனது வீடியோவை பார்த்து பல பெண்கள் நேர்மறையான கருத்துக்களை பதிவிடுகின்றனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறியிருப்பார்.
தற்போது ஒரு புதிய முயற்சியாக The Cheeky DNA என்ற பெயரில் ஒரு லைப் ஸ்டைல் பிராண்டை(lifestyle brand) தொடங்கியுள்ளார். 2020இல் தனது காதலனான விக்னேஷ் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் பொழுது அவை விலை உயர்ந்ததாகவும், எதிர்பார்க்கும் படி அழகாகவும் இல்லாததால் தானே அழகான வீட்டு அலங்கார பொருட்களை உருவாக்கலாம் என்று நினைத்து அதை மக்கள் வாங்கும் அளவிற்கு நியாயமான விலையில் விற்கலாம் என முடிவெடுத்துள்ளார். இது தான் இவர் இந்த பிராண்டை தொடங்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
2023 புத்தாண்டை முன்னிட்டு அவர்களின் முதல் பொருளான காலெண்டர்களை(calender) லான்ச்(launch) செய்துள்ளனர் மற்றும் அவரின் பிராண்டை விரிவடைய செய்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
The Cheeky DNA என்ற YouTube சேனலின் மூலம் மக்களால் அவர்களின் வாழ்க்கையில் ஒப்பிட்டுக் கொள்ள முடிகின்ற கன்டென்டுகளை உருவாக்கி இவர் பதிவிடும் நகைச்சுவையான வீடியோக்கள் மக்களை மகிழ்விப்பது மட்டுமில்லாமல் பல விதங்களின் மக்களுக்கு ஒரு ஊக்கமாகவும் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Suggested Reading: Simply Sruthi YouTube சேனலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
Suggested Reading: Jenni MJ மற்றும் Jenni's Hacks மூலம் மக்களை மகிழ்விக்கிறார் ஜெனிபர்
Suggested Reading: Anupama's Vriksham பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!