சண்முக பிரியா Unique Threads Sarees தொடங்கிய கதை

புடவை தொழில் ஆரம்பித்து தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சண்முகப்பிரியா. அவரின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
shanmuga priya unique threads sarees

Image of Shanmuga Priya

2014இல் 70,000 சம்பளத்திற்கு HR ஆக பணியாற்றிக் கொண்டிருந்த சண்முக பிரியா சில காரணங்களுக்காக வேலையை விட்டு வீட்டில் குழந்தையையும், மாமியாரையும் பார்த்துக் கொள்ள தொடங்கினார். அவருடைய கணவருக்கு வேறொரு இடத்தில் வேலை கிடைத்ததால் அவர் வேலை காரணமாக சென்றிருந்தார். வேலையை விட்ட சில நாட்களுக்கு பிறகு திரும்பவும் வேலைக்கு செல்வதற்கு பல பெண்களுக்கு தயக்கமாகவே இருக்கும். அது மட்டும் இன்றி அவர்களின் வளர்ச்சி குறித்த சந்தேகங்கள் ஏற்படும். 

Advertisment

இதுபோன்ற எண்ணங்களால் சண்முக பிரியாவும் மனசோர்வடைந்து இருந்தார். அவருடைய கணவரும் வேறு இடத்தில் இருப்பதால் இருவரும் அடிக்கடி தொலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது தனது கணவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் தனது மாமியார் புடவை வியாபாரம் செய்ததை போலவே தாமும் செய்யலாம் என்ற எண்ணத்தை கூறியதற்கு அவருடைய கணவரும் முழு ஆதரவை அளித்தார்.

Unique Threads Sarees Shanmuga priya

பாரிஸ் கார்னரில் இருபது ஆயிரம் ரூபாயை முதலீடாக கொண்டு புடவைகளை வாங்க சென்றிருந்தார்‌. ஹோல்சேலில் புடவை வாங்குவதற்கு இது மிகவும் குறைந்த விலையாக இருக்கிறது என்று பல கடைகளில் நிராகரித்துள்ளனர். பிறகு ஓர் இரண்டு கடையில் ஒப்புக்கொண்டு இவருக்கு புடவை வழங்கியுள்ளனர். இருபது ஆயிரம் ரூபாய்க்கு புடவையை வாங்கிய பிறகு தனக்கு தெரிந்தவர்களிடம் இதைப் பற்றி கூறினார். தெரிந்தவர்களும் இவரிடம் இருக்கும் புடவைகளை பார்ப்பதற்காக வந்தனர்.

குழந்தையையும் கவனித்துக் கொண்டு வாடிக்கையாளர்களையும் கவனித்துக் கொள்வது சிறிது கடினமாகவே இருந்தது. அப்பொழுது எல்லாம் இவருக்கு எதிர்மறையாக எண்ணங்கள் வந்து இந்த தொழிலை விட்டு விடலாம் என்றும் யோசித்தார். ஒரு சிலர் மட்டுமே புடவை வாங்குவதால் வியாபாரமும் நன்றாக செல்லவில்லை. அதனால் ஒரு நாள் அவர் தோழியிடம் இதைப் பற்றி கூறிய போது அவர் தோழி "நீ புடவைகளை வாட்ஸ் அப் மூலம் போட்டோ எடுத்து எனக்கு அனுப்பு, எனக்கு வேண்டிய புடவைகளை நான் வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார்.

Advertisment

சண்முக பிரியாவும் தன்னிடம் உள்ள புடவைகளை புகைப்படம் எடுத்து WhatsAppஇல் அனுப்பி வைத்தார். அவரின் தோழி அவருக்கு வேண்டிய நான்கு, ஐந்து புடவைகளை எடுத்துக் கொண்டு மீதமுள்ள புகைப்படங்களை அவருக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பினார். இப்படி ஒரு சில புடவைகள் விற்ற பிறகு சண்முக பிரியாவிற்கு இந்த மாதிரி WhatsApp மூலமாக புகைப்படங்களை அனுப்பி விற்கலாம் என்ற எண்ணம் வந்தது.

Unique threads saree product

அதனால் ஒரு WhatsApp குரூப் ஆரம்பித்து அதில் விற்கத் தொடங்கிய பிறகு வியாபாரம் வளர தொடங்கியது. பிறகு சமூக வலைதளங்களை பயன்படுத்தி Unique Threads Sarees என்ற பெயரின் மூலம் தனது தொழிலை வளர்த்துக் கொண்டார். பல பெண்கள் முன்வந்து இவரின் பொருட்களை ரீசெல் செய்ய ஒப்புக்கொண்டனர். வீட்டில் இருந்தபடியே பெண்கள் செய்வதற்கு இது ஒரு நல்ல தொழிலாக இருந்தது. 

சண்முக பிரியா ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு முன்னால் நம்பிக்கை வேண்டும் என்றும் அந்த தொழிலை பற்றிய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்றும் ஜோஷ் டாக்கில் கூறியுள்ளார். இவரும் இந்த தொழில் ஆரம்பிப்பதற்கு முன்பு துணிகளை பற்றி எதுவும் தெரியாதவராக இருந்தார். பின்பு இந்த தொழில் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு நிறைய இடங்களுக்கு சென்று இதைப் பற்றின அறிவை வளர்த்துக் கொண்டார்.

Advertisment

Unique threads sarees

ஒரே தொழிலை நிறைய பேர் செய்யக்கூடும், ஆனால் மக்கள் நம்மிடமிருந்து வாங்குவதற்கு ஏதாவது ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். அப்படி சண்முகப்பிரியா மற்ற கடைகளைவிடவும், இதுபோன்ற தொழில் வைத்து இருப்பவர்களிடமிருந்தும் தனித்து விளங்க அவரது புடவைகளின் வண்ணம் மற்றும் டிசைன்களை புடவை தயாரிக்கும் இடத்திற்கே சென்று கஸ்டமைஸ் செய்து வருவார்.

ஆன்லைன் மூலம் உலகம் எங்கும் நம் பொருளை நம்மால் விற்க முடியும். அப்படி வெளிநாடுகளிலும் இவரின் புடவைகளை விற்க ரீசெல்லர்ஸ் உள்ளனர். அவர்களை WhatsApp பிசினஸ் மூலமாக அனைத்திற்கும் தனித்தனி குரூப்புகள் வைத்து வழிநடத்தி வருகிறார். 

அதேபோல் ஒருவருக்கு கனவு இருந்தால் முதலில் அதற்கான முதல் அடியை எடுத்து வைத்து சிறிதான ஒரு இன்வெஸ்ட்மென்ட் மூலமாகவே ஆரம்பிக்கலாம் என்றும் கூறுகிறார். மேலும், ஆரம்பிக்கும் பொழுது நிறைய எதிர்மறையான விஷயங்களை கேட்கக்கூடும் என்றும் அதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் என்றும் ஆலோசனை கூறுகிறார்.

Advertisment

Suggested Reading: Life Coach Priya Thahir பெண்களுக்கு கூறும் ஆலோசனை

Suggested Reading: உடலுறவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் டாக்டர் நிவேதிதா

Suggested Reading: Celebrity Designer Abarnaவின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: சாதிக்க வேண்டும் என்ற வெறி சுகிதாவின்(sugitha) வாழ்க்கையை மாற்றியது

inspiring story saree business Unique Threads Sarees