Advertisment

Dhee பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

author-image
Devayani
New Update
dhee singer

தமிழ் திரை உலகில் வித்தியாசமான குரலை கொண்டு, அவரின் பாடல்கள் மூலம் மக்களை ஈர்த்து வருகிறார், தீ (Dheekshitha). இவர் ஜூன் 26, 1998இல் பிறந்தவர். இவரின் தாய் மீனாட்சி ஐயர் இலங்கையை சேர்ந்தவர் மற்றும் அவரொரு கர்னாடிக் சிங்கர். Dheeயின் தந்தையுடன் விவாகரத்தை பெற்ற பிறகு மீனாட்சி, சந்தோஷ் நாராயணனை திருமணம் செய்து கொண்டார். தீயும், சந்தோஷ் நாராயணனும் ஒரு அழகிய நட்பு நிறைந்த தந்தை மகள் உறவை கொண்டுள்ளனர். 

Advertisment

தீ(Dhee) எப்படி பாடகர் ஆனார்?

சிறுவயதில் இருந்து அவருக்கு இசையின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால் ஒரு பாடகராக வேண்டும் என்று அவருக்கு எண்ணம் இல்லை. இசையின் மீது இருந்த ஆர்வத்தால் அதில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். “யார் வேண்டுமானாலும் எந்த வயதிலும் பாடலாம், ஆனால் எனக்கு சிறுவயதிலேயே எனது திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தது” என்று ஒரு நேர்காணலில் அவர் கூறினார்.

முதல் முறையாக பீட்சா 2: வில்லா என்ற திரைப்படத்திற்காக 'டிஸ்கோ உமன்' என்ற பாடலை பாடினார். இந்த படத்திற்கு அவரின் தந்தை இசையமைத்துள்ளார். இந்த பாடலை பாடும்போது அவருக்கு 14 வயது. ஒரு நாள் அவரின் தாய் அவர் பாடியதை பேஸ்புக்கில் பதிவிட்டார். அதை பார்த்த பிறகு தான் அவருக்கு இந்தப் பாடலை பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த பாடல் பாடும்போது அவருக்கு எந்த பயமும் இல்லை என்றும் சிறுவயது என்பதால் அதை ஜாலியாக அவர் பாடியதாக கூறுகிறார்.

Advertisment

dhee

இவர் ஒரு பாடகியாக பல நிகழ்ச்சிகளில் பல மக்களுக்கு முன் பாடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுபோன்று மக்களுக்கு முன் பாடுவதற்காக செல்லும்போது அவருக்கு பயமாக இருக்கும் என்றும் ஆனால் மேடை ஏறி பாட ஆரம்பித்த பிறகு அந்த பயம் தானாக மறைந்து விடும் என்றும் கூறினார். அதே போல் எப்போதுமே பயமாக இருக்கிறது என்பதற்காக அவர் ஒன்றிலிருந்து விலகியதில்லை. அப்படி பயமாக இருந்தாலும் அதை செய்து முடித்து விடுவேன் என்றும் அவர் கூறினார்.

இவர் இறுதிச்சுற்றுக்காக "ஏய் சண்டக்காரா" மற்றும் "உசுரு நரம்புல" என இரண்டு பாடல்களை பாடியுள்ளார். இந்த இரண்டு பாடல்களுக்கு பிறகு மக்கள் அவரை ஒரு நல்ல பாடகராக அடையாளம் கண்டு கொண்டனர். பிறகு இறைவி, கபாலி, மேயாத மான், வடசென்னை போன்ற படங்களுக்கும் அவர் பாடல்கள் பாடியுள்ளார். 

2018ஆம் ஆண்டு வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் 'ரவுடி பேபி' என்ற பாடலை இவர் பாடினார். இந்த பாடலின் மூலம் இவர் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். மேலும் இந்த பாடல் YouTubeயில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இந்த பாடலுக்காக அவர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

enjoy enjami

இன்டிபேன்டென்ட் மியூசிக்(Independent Music) என்பது தென்னிந்தியாவில் பிரபலமான ஒன்று அல்ல. அவ்வப்போது ஒரு சில இன்டிபேன்டென்ட் பாடல்கள் பிரபலமாகும். ஆனால் அறிவு மற்றும் தீ பாடிய 'என்ஜாய் என்சாமி' பாடல் உலகம் எங்கும் எதிர்பாராத அளவு வரவேற்பை பெற்றது. தமிழில் இப்படி வித்தியாசமாக ஒரு இசையை அமைக்க முடியுமா என்று அனைவரையும் வியக்க வைத்து. இந்த பாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இது Maajja என்று ஏ.ஆர் ரகுமான் தொடங்கிய மியூசிக் சேனலின் முதல் பாடலாகும். இந்த முதல் பாடலே பயங்கர வைரலானது. மேலும் இந்த பாடலுக்கு பிறகு முன்பை விட இவருக்கு நிறைய வரவேற்பு கிடைத்தது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த பாடலை பாடிக்கொண்டிருந்தனர். இந்த பாடல் வெளியான போது எங்கு திரும்பினாலும் இந்த பாடல் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. மேலும் தற்போது இந்த பாடல் 453 மில்லியன் பார்வையாளர்களையும், 4.8 மில்லியன் லைக்குகளையும் பெற்றது. 

Advertisment

அதன் பிறகு சூரரைப் போற்று என்ற திரைப்படத்திற்காக 'காட்டுப் பயலே' மற்றும் ஜகமே தந்திரத்தில் 'ரகிட ரகிட ரகிட' என இவர் பாடிய பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

"தெற்காசிய கலைஞர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது கனவு. வியக்க வைக்கும் திறமைகள் இங்கு உள்ளன" என்று கூறி, இவருக்கு என்ஜாய் என்சாமி பாடலுக்காக கிடைத்த வரவேற்பு போலவே மற்ற இன்டிபேன்டென்ட் மியூசிக் செய்பவர்களுக்கும் மக்கள் தங்கள் ஆதரவை தர வேண்டும் என்று அவர் கூறினார்.

Suggested Reading: தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)

Suggested Reading: Home Cooking Show வெற்றியின் காரணம் - Hema Subramanian

Dhee tamil singer enjoy enjaami
Advertisment