Advertisment

4500 முதலீட்டில் ஆரம்பித்து, தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை மாத லாபம்

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
She Calm

She Calm இந்தியாவின் நிறுவனர் ஆஸ்தா‌ நேகி Shethepeopleக்கு  அளித்த நேர்காணலில் இந்திய பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவது தனது நோக்கம் என்றும் அதனை அடைய அவர் எடுத்திருக்கும் முயற்சிகள் பற்றியும் கூறினார். 

Advertisment

"நான் 15 வயதில் இருக்கும் பொழுது, எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அக்கா மாதவிடாயின் போது பருத்தி துணியை பயன்படுத்துவதை தெரிந்து கொண்டேன். அப்பொழுது அவர் "நாப்கின் வாங்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை" என்று கூறினார். நான் அதைக் கேட்டபோது அதிர்ச்சியடைந்தேன். என் தாயிடம் சென்று இதைப் பற்றி கூறினேன், அவர் அதற்கு "இன்னும் மாதவிடாய் பற்றி பேச பல பெண்கள் தயங்குகின்றனர் அது மட்டும் இன்றி அதைப் பற்றி பேசுவது அசுத்தம் என நினைக்கின்றனர்" என்று கூறினார்.

இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதனால் அதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு எடுத்தேன். எனது 22வது வயதில் She Calm இந்தியா என்ற உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரக்கூடிய ஆர்கானிக் சானிட்டரி பேட்களை(organic sanitary pad) உருவாக்கினேன்.

எனது சொந்தக்காரர்களுக்கும், நண்பர்களுக்கும் அதை அனுப்பினேன். அவர்கள் அதை பயன்படுத்தி விட்டு "நீ ரொம்ப நல்ல வேலை பண்ணிட்டு இருக்க" என்று அவர்கள் ஊக்கம் அளித்தார்கள். அது என்னை இன்னும் கடுமையாக வேலை பார்க்க வைத்தது. வாய் வழி சொற்களால் எனது வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினர். நான் என்னுடன் பல பெண்களை வேலைக்கு சேர்த்துக் கொண்டேன். அவர்கள் பேக்கேஜிங், புதிய கண்டுபிடிப்பு, நெட்வொர்க்கிங் மற்றும் விற்பனையை என்னுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டனர்.
படிப்படியாக, ஆர்கானிக் பேய்களுக்கு (organic pad) மாற வேண்டிய அவசியத்தை பற்றி கருத்தரங்குகள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ஐந்தாரம் பெண்களை சென்றடைய வைத்தேன்.

Advertisment

பத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நான் தொடர்பு கொண்டு இளைஞர்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை தர வேண்டும் என்ற நோக்கத்தையும் அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். எனது பணியைப் பற்றி பேச பல புகழ்பெற்ற நிறுவனங்கள், PR நிறுவனங்கள் மற்றும் சக பணிபுரியும் இடங்களுக்கு நான் விருந்தினர் பேச்சாளராக அழைக்கப்பட்டேன்.

எனது பயணத்தைத் தொடங்க சிறிய தொகையான ரூ 4500/- முதலீடு செய்தேன்.  நான் தயாரிக்கும் பேட்களின் தரத்தை சோதிக்க பணம் பயன்படுத்தப்பட்டது.  நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு, நான் அதிக முதலீடு செய்யத் தொடங்கினேன். தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை மாதலாபம் வருகிறது. அதில் இருந்து எனது ஊழியர்களுக்கு சம்பளம், மாதவிடாய் சுகாதாரம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் முதலீடு செய்தல் ஆகியவற்றிற்காக அந்த ஒரு லட்சம் வருவாய் செலவிடப்படுகிறது.

என்னைப் பொறுத்தவரை, தொழில்முனைவு என்பது ஒருபோதும் எனது குறிக்கோளாக இருந்ததில்லை. சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த எனது அறிவையும், திறமையையும் பயன்படுத்த நினைத்தேன். நம்பிக்கை, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் நேர மேலாண்மை ஆகியவை நாம் எதன் மீது உறுதியாக இருக்கிறோமோ அதில் வெற்றிபெற உதவும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

Advertisment

Suggested Reading: Nykaa நிறுவனத்தின் நிறுவனர் மாணவர்களுக்கு கூறும் ஆலோசனை

Suggested reading: யார் இந்த Byju's இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத்?

organic pad women entrepreneur
Advertisment