Advertisment

விவாகரத்து ஆன பிறகு Project Kintsugi ஆரம்பித்த Indu

ஒரு பெண் விவாகரத்து பெற்ற பிறகு நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். இந்து இதையெல்லாம் கடந்து அவரை போல் உள்ள மற்ற பெண்களுக்கும் தற்போது உதவி வருகிறார். அவரின் இந்த பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Project Kintsugi Indu

Images of Indu

இந்திய சமுதாயத்தில் குடும்ப வன்முறை என்பது சாதாரண ஒன்றாக கருதப்படுகிறது. பல பெண்களுக்கு எது வன்முறை என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சகித்துக் கொண்டு திருமண வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருந்த இந்து தன்னுடைய திருமண வாழ்க்கை நஞ்சு வாய்ந்தது என்பதை உணர்ந்து அதிலிருந்து வெளிவந்து தற்போது அவரைப் போல் இருக்கும் பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் Project Kintsugi நடத்தி வருகிறார்.

Advertisment

சிறுவயதில் இருந்து தன்னை மற்றவர்கள் தவறாக பேசக்கூடாது என்று எண்ணியே பல விஷயங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர் பிறரை மகிழ்விக்க வேண்டும் என்று செய்துள்ளார். சொல்லப்போனால் இப்படித்தான் நம்மில் பலர் இருக்கிறோம். நமக்கு பிடிக்காத ஒன்றை மற்றவர்கள் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று எண்ணி அதை நாம் செய்து வருகிறோம். அப்படித்தான் இந்துவும் சிறுவயதில் இருந்தார். 

இந்துவிற்கு 23 வயதில் திருமணம் ஆனது. அப்பொழுது மாப்பிள்ளை வீட்டில் இருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. அவற்றுள் பல ஆணாதிக்க சிந்தனைக்குள் அடங்கக்கூடியவை. அவரின் இந்த திருமண உறவு நஞ்சுவாய்ந்தது என்பது தெரியாமலேயே அவர் அந்த உறவில் இருந்தார்.

Indhu Gopalakrishnan Project Kintsugi

Advertisment

ஒரு உறவில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு அந்தப் பெண் தான் காரணம் என்று கூறும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு உறவு சரியாக இல்லை என்றால் அந்த பெண் தான் அனுசரித்து செல்லவில்லை என்றே இந்த சமூகம் நினைக்கிறது. ஒரு உறவில் எப்பொழுதும் ஒருவர் மட்டுமே அனைத்தையும் பொறுத்துக்கொள்ளவும், விட்டுக் கொடுக்கவும் கூடாது. ஒரு உறவில் இருக்கும் இருவரும் இப்படி நடந்து கொண்டால் மட்டுமே அந்த உறவு ஆரோக்கியமான மகிழ்ச்சியுள்ள உறவாக இருக்கும். 

இந்துவின் திருமண வாழ்க்கையில் அவர் உறவுகள் என்றால் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும் என்று அனுசரித்துக் கொண்டு இருந்தார். பிறகு இந்த உறவு மிகவும் நஞ்சு வாய்ந்து இருப்பதை உணர்ந்து 2016 இந்த உறவை முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். ஆனால் இரண்டு வருடத்திற்கு பிறகு தான் விவாகரத்து கிடைத்தது. 

விவாகரத்து என்பது சாதாரண விஷயம் அல்ல. அதில் நிறைய செயல்முறைகளும், வேலைகளும் இருக்கிறது. கோர்ட்டுக்கு செல்வது, காவல் நிலையத்திற்கு செல்வது, வழக்கறிஞரை சந்திப்பது என அனைத்தையும் இந்து தனி ஆளாக பெற்றோர்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று நினைத்து செய்துள்ளார்.

Advertisment

அதன் பிறகு தான் இந்த Project Kintsugi ஆரம்பித்துள்ளார். இது இன்ஸ்டாகிராம் மூலம் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இது வளர்ந்து தற்போது 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், சிகிச்சையாளர்கள், suicide helpline, domestic violence helpline கொண்ட ஒரு Web App ஆக வளர்ந்துள்ளது. இது கஷ்டப்படும் பெண்களுக்கு ஒரு ஆதரவை தருகிறது. புதிதாக theprojectkintsugi.com என்ற இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார் மற்றும் பெண்களுக்கு 1-1 கன்சல்டேஷன் செய்யும் முறை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இவரின் இந்த Project Kintsugi ஜாப்பனீஸ் வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டதாகும். உடைந்த பொருட்களை தங்கத்தை வைத்து ஒட்டும் ஒரு முறையின் பெயர் Kintsugi. அதாவது விரிசல் ஏற்பட்ட இடத்தை தங்கத்தின் மூலம் அலங்கரித்து அதை முன்பை விட இன்னும் அழகாக காட்டும். இவர் ஆரம்பித்த இந்த சேவைக்கு இது சரியான பெயர் என்று எண்ணி இதை வைத்துள்ளார்.

Indu Project Kintsugi

Advertisment

விவாகரத்து பெற்ற ஒரு பெண் அடுத்து என்ன செய்யப் போகிறாள், யார் அவளை திருமணம் செய்து கொள்வார் என்ற பல கருத்துக்களும், கேள்விகளும் இந்த சமூகத்திற்கு இருக்கும். இந்து தன்னை ஏற்றுக்கொள்ளும் ஒருவரை தனது 33 வயதில் திருமணம் செய்து கொண்டார். 2022 அவருக்கு திருமணமும் நடந்தது.

தற்போது இந்துவின் புகுந்த வீட்டினர் அனைவரும் இவர் நடத்தி வரும் இந்த ப்ராஜெக்ட்ற்கு மிகவும் ஆதரவாக இருக்கின்றனர். இவர் ஒரு சிறிய அங்கீகாரம் பெற்றாலும் அதற்காக குடும்பமே சேர்ந்து சந்தோஷப்படுகிறது. 

இந்து தற்போது ஒரு ஆரோக்கியமான உறவில் இருக்கிறார். மேலும் அவர் ஒரு நேர்காணலில் வயதாகி விட்டது என்பதற்காகவும், அப்பா, அம்மா சொல்வதற்காகவும், சமூகத்தின் எதிர்பார்ப்பிற்காகவும்  திருமணம் செய்யக்கூடாது என்றும் நமக்கு அது எப்பொழுது சரி என்று படுகிறதோ அப்பொழுது அதை செய்தால் போதும் என்றும் அறிவுரை கூறினார்.

Advertisment

Suggested Reading: ஆட்டோ ஓட்டுநர் ராஜி அக்காவின் வாழ்க்கை பயணம்(Raji Akka)

Suggested Reading: டிசைனர் சிந்துவின் (Designer Sindhu) வாழ்க்கை பயணம்

Suggested Reading: என் வாழ்வில் பிடிவாதம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது - Saritha Jo

Advertisment

Suggested Reading: முதல் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் - Karpagam Mayavan

inspiring story Project Kintsugi
Advertisment