முதல் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் - Karpagam Mayavan

முதல் மாற்றுத்திறனாளி வழக்கறிஞரான கற்பகம் மாயவனின் வாழ்க்கை கதை பலரை நிச்சயமாக ஊக்கவிக்கும். அவரின் வாழ்க்கை கதையை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

Devayani
10 Mar 2023
முதல் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் - Karpagam Mayavan

Image of Karpagam Mayavan

பெண்கள் திமிராகவும், உறுதியாகவும் இருந்தால் இந்த சமூகத்தில் இருந்து அவர்கள் பல வகையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், கற்பகம் மாயவன் என்பவர் சிறு வயதிலிருந்தே தனக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்காக குரல் கொடுத்துள்ளார் மற்றும் அதை தட்டி கேட்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். கற்பகத்திற்கு congenital glaucoma என்று டிசேபிலிட்டி இருக்கிறது.

இவர் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் சேரலாம் என சென்றுள்ளார். அப்பொழுது இவரிடம் தான் டிசேபில்ட்(disabled) என்ற சான்றிதழ் இல்லாததால் அதனை வாங்கி வருமாறு கூறியுள்ளனர். அப்பொழுது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இவர் அந்த சான்றிதழ் வாங்குவதற்காக சென்ற பொழுது ஒரு மருத்துவர் "நீங்களாம் படிச்சு என்ன ஆகப் போறீங்க? உங்களுக்கு பிரச்சனை இருக்கு, உங்களால எப்படி என்ஜினியர் ஆக முடியும்? என கேட்டுள்ளார். அதற்கு கற்பகம் என்னாலயும் முடியும், நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறேன் என்று கூறியும் அந்த மருத்துவர் சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டார்.  இது அவரை மிகவும் கஷ்டப்படுத்தியது. அந்த மருத்துவர் இவரை மட்டும் இல்லாமல் அங்கு வந்திருந்த அனைவரையும் இப்படி தான் நடத்தினார் என்று அவர் ஜோஸ் டாக்கில் கூறியுள்ளார். 

அதன் பிறகு வேறொரு மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கி, இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். இது போன்ற வாழ்க்கையில் பலமுறை, பலர் இவரால் முடியாது என்று கூறியதை தன்னால் நிச்சயமாக முடியும் என்று கூறி அதனை செய்தும் காட்டி இருக்கிறார்.

advocate karpagam

சிறுவயதில் ஆசிரியர்கள் இவரை ஸ்பெஷல் ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்ற பொழுது, இவர் மற்ற மாணவர்களைப் போலவே தன்னாலும் படிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். இன்ஜினியரிங் படிப்பில் முதல் ரேங்க் மற்றும் கோல்ட் மெடலை பெற்றுள்ளார். பிறகு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக சட்டம் படித்துள்ளார். தற்போது ஒரு வழக்கறிஞராகவும் ஹை கோர்ட்டில் பணிபுரிந்து வருகிறார்.

டிசேபிலிட்டி ஒரு போதும் ஒரு தடையல்ல என்று கூறும் இவர் சிறு வயதிலிருந்தே இவருக்கு நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்டுள்ளார். ஆசிரியர்கள் பாகுபாடு காட்டும் பொழுது தலைமை ஆசிரியரிடம் சென்று கூறியுள்ளார். மேலும் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நிறுவனம் தவறான மருந்தை இவருக்கு பரிந்துரைத்ததால் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார். தற்போது காவல்துறை மற்றும் மற்ற அதிகாரிகள் ஏதாவது பாகுபாடு காட்டினால் மேல் அதிகாரிகளுக்கு இவர் செய்தி அனுப்புகிறார்.

advocate karpagam mayavan

பிறகு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தினால் Voice of the Voiceless Indian People Foundation என்ற ஒரு ரெஸ்ட்டையும் இவர் திறந்து உள்ளார். இதில் டிசேபிலிட்டி உடன் இருக்கும் மக்களும் அதிகாரத்துடன் இருக்க வேண்டும் என்பதே முதல் கடமை. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதிலும் கவனம் செலுத்துகிறார். அதற்காக சென்னையில் முதல் சையின் லாங்குவேஜ் உணவகத்தையும் திறந்துள்ளார். ‌ இந்த ட்ரெஸ்டின் மூலம் டிசேபில்ட் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது மட்டுமின்றி UPSCயில் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பும் டிசேபில்ட் மாணவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் பயிற்சிகளை அளித்து வருகிறார். 

சிறுவயதில் இருந்து பெற்றோர்கள் இவருக்கு இந்த டிசேபில் சரியாக வேண்டும் என்று பல கோவில்களுக்கு சென்று வேண்டியுள்ளனர். மேலும் வெள்ளி, தங்கம் என காணிகைகளும் அளித்துள்ளனர். இருப்பினும் இது மாற்ற முடியாத ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். இது தனக்கு ஒரு அடையாளம் என்று நினைத்து சவால்கள் மற்றும் நிராகரிப்புகளை ஏற்றுக் கொள்ள தொடங்கிய இவரின் பயணம் தற்போது பலருக்கு ஒரு ஊக்கமாக இருந்து வருகிறது. 

தற்போது சமூக வலைத்தளங்களில் சட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறார். மேலும், இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது.

அடுத்த கட்டுரை