Advertisment

தமிழ் சினிமாவில் அழகாக எழுதப்பட்ட ஐந்து ஆண் கதாபாத்திரங்கள்

author-image
Devayani
New Update
male characters

தமிழ் சினிமாவை பொறுத்தவரை யார் ஹீரோ? ஒருவர் திடமான உடல் அமைப்பைக் கொண்டு, பார்ப்பதற்கு அழகு தோற்றம் கொண்டு, எதிரியையும், அடி ஆட்களையும் அடித்து, பெண்களை பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றுபவனே தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதாநாயகன். இந்த மாதிரியான அமைப்புகள் கடந்த சில ஆண்டுகளாக மாறி வந்து கொண்டிருக்கின்றது. நாம் மிகவும் அழகாக எழுதப்பட்ட கதாநாயகன் கதாபாத்திரத்தை பற்றி பார்ப்போம்.

Advertisment

இப்பொழுது தமிழ் சினிமாவில் இடம் பெற்ற ஐந்து ஆண் நடிகர்களின் கதாபாத்திரம் பற்றியும், அது கதாநாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து, மாற்றத்தை ஏற்படுத்திய கதாபாத்திரத்தை பற்றியும் நாம் பார்க்க போகிறோம்.

1. சூரரைப் போற்று - மாறன்:

sps
மாறன் பொம்மியை சந்தித்த முதல் சந்திப்பில் திருமணத்திற்கு முன்பு அவன் தனது கனவுக்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்று கூறுவாள். மாறன் அதை அவனுக்கான ஒரு ஊக்கமாக எடுத்துக்கொண்டு அவனின் கனவு திட்டத்தை செய்ய தொடங்குவான். பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு அவளின் கனவான பேக்கரி தொழிலையும் ஆரம்பிப்பாள். மாறனின் முயற்சியில் ஒரு பெரிய பின்னடைவு ஏற்படும். அப்பொழுது பொம்மைதான் வீட்டை பார்த்துக் கொள்வாள். 

Advertisment

ஒரு காட்சியில் கூட மாறன் பொம்மியிடம் பணம் கேட்பதற்காக தயங்குவான். அதற்கு பொம்மி சரியான பதில் கொடுத்து மனைவியிடம் பணம் கேட்பது ஆண்களுக்கு அசிங்கம் என்ற எண்ணத்தை அந்த வசனம் மாற்றி அமைக்கும். கடைசியில் அவனும் தனது கனவில் முன்னேறுவான். அதேபோல் பொம்மி அவரின் கனவுக்கு அளித்த ஆதரவை போலவே பொம்மியின் கனவுக்காக மாறனும் ஆரம்பத்திலிருந்து ஆதரவளித்திருப்பான்.

2. என்னை அறிந்தால் - சத்யதேவ்:

enaai arinthal
சத்யதேவ் விவாகரத்து பெற்ற, ஒரு மகளை உடைய பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவான். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிதான விஷயமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் ஒரு விவாகரத்து பெற்ற பெண்ணின் மீது காதல் கொண்டு, அவருடன் சேர்ந்து வாழ்க்கையை வாழ ஆசைப்படுவான். இது சமூகத்தில் பெண்களின் மதிப்பு கன்னித்தன்மையில் இருக்கிறது என்ற தவறான கருத்தை உடைத்துள்ளது. 

Advertisment

சத்யதேவ் ஹேமாணிக்காவை மணந்து, அவளின் மகள் ஈஷாவுக்கு தந்தையாக இருக்க விரும்புவான். மேலும் அவனுக்கென ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளும் எண்ணம் அவனிடம் இருக்காது. அது மட்டும் இன்றி திருமணத்திற்கு பிறகு இருவரும் வேலை செய்து, அவளின் மகளுக்கான பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறுவார். அதாவது திருமணம் ஆனாலும் இரண்டு பேரும் வேலைக்கு சென்று சம்பாதிப்பது அவசியம் என்ற கருத்தையும் இது கொடுக்கிறது. அதைப்போல் ஹேமாணிக்கா மரணம் அடைந்த பிறகு, ஒரு நல்ல தந்தையாக ஈஷாவை தனது சொந்த மகளாக நினைத்து வளர்த்து வருவார்.

3. கண்டேன் காதலை - சக்தி:

kandean kathalai
சக்தி கதாபாத்திரம் உண்மையான பிரச்சனைகளை கொண்டு ஒரு உண்மையான மனிதன். தமிழ் சினிமாக்களில் வரும் ஹீரோக்களைப் போல அவன் இல்லாமல் கண்ணாடி அணிந்து கொண்டு, மென்மையான முகத்துடன் தோற்றம் அளிக்கிறான். அவன் அஞ்சலி தனியாக பயணிப்பதையும், மற்ற அன்னியர்களிடம் நட்பாக பேசுவதையும் பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை. மாறாக அவன் அவளை புறக்கணிக்கிறான். 
அஞ்சலி அவளது ரயிலை தவற விட்டதற்கு அவன் தான் காரணம் என்று மேலும் மேலும் கூறும்போது ஒரு சாதாரண மனிதன் செய்வது போல அவளை வீட்டிற்கு அழைத்து செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். அவன் உதவிக்காக அஞ்சலியிடம் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. மாறாக அவளை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு தனது வாழ்க்கையை திரும்பி ஆரம்பிக்க முயற்சிக்கிறான். 

Advertisment

பல சமயங்களில் அவர்கள் இருவரும் தனியாக இருந்தபோது எந்த ஒரு சூழ்நிலையையும் அவன் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவனுக்கு அவளை பிடித்திருந்தாலும் அவள் காதலன் அவளை விட்டு சென்ற போது, அவளை நன்றாக பழைய நிலைமைக்கு மாற உதவி செய்தானே தவிர, அந்த நேரத்தை அவன் பயன்படுத்திக் கொண்டு தன் காதலை நிலை நிறுத்த முயற்சிக்கவில்லை.

4. அனல் மேலே பனித்துளி - சரண்:

ampt
சரணுக்கு திரையில் குறைந்த நேரம் தரப்பட்டாலும், அந்த கதாபாத்திரம் மிகவும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது. மதியின் வருங்கால கணவனான சரண், "மதி எனக்கு என்ன தோணுதோ, அதை எப்படி வெளிப்படுத்துறதுனு தெரியல. ஆனால் எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் உன் கூட இருப்பேன்" என்று அவளுக்கு ஆதரவளிப்பார். ஹீரோக்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தடைகளை உடைத்து, எந்த ஒரு ஹீரோயிசமும் காட்டாமல் சாதாரணமாக ஒரு மனிதன் எப்படி இருப்பானோ அப்படியே இந்த கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. 

Advertisment

மற்றொரு காட்சியில் குற்றவாளிகள் மதியம் நிர்வாண வீடியோவை ஆன்லைனில் பதிவேற்றிய பிறகு நிச்சயதார்த்தத்தை நிறுத்துமாறு அவரது குடும்பத்தினர் அறிவுறுத்துவார்கள். இந்த காட்சியில் சரண் தனது குடும்பத்தை விட்டு வெளியே வராமல், அவர்களிடம் எந்த ஒரு நச்சுத்தன்மையையும் வெளிப்படுத்தாமல் இருப்பார். அவர் தனது குடும்பத்தினரிடம் சரியான விஷயங்களை எடுத்துக் கூறி அவர்கள் எவ்வளவு குறுகிய மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்பதையும் உணர வைக்கிறார்.

5. ஜெய் பீம் - சந்துரு:

jai bheem⁠⁠⁠⁠⁠⁠⁠
சந்துரு ஆண்களுக்கு சரியான ஒரு எடுத்துக்காட்டு. அவர் செங்கனியின் பிரச்சனைகளை கேட்டு அனுதாபம் கொள்கிறார் மற்றும் அவள் சார்பாக வழக்கறிஞராக போராடுகிறார். செங்கனியை ஆதரிப்பதும், அவளுக்கு நீதி கிடைக்க உதவுவது மட்டுமே அவரது எண்ணம். ஒரு வழக்கறிஞராக இருந்து அவளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். மேலும் அவர் ஒருபோதும் காட்சியில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. செங்கனிக்கு மற்றும் அவர்களது மக்களுக்கு இருக்கும் பிரச்சினையை புரிந்து கொண்டு ஒரு வழக்கறிஞராக மட்டுமே அவர்களை ஆதரிக்கிறார். 

Advertisment

எந்த காட்சியிலும் சந்துரு வீரத்தையும், நச்சுத்தன்மையுள்ள ஆண்மையையும் வெளிப்படுத்துவதில்லை. சந்துருவின் கதாபாத்திரமும், இந்த கதைக்களமும் நிஜ வாழ்க்கை சம்பவங்களில் இருந்து ஈர்க்கப்பட்டு இருப்பதால், ஜெய் பீம்க்கு முன்பு நம் மக்கள் பலருக்கு சந்துருவை பற்றி தெரியாது. இந்த திரைப்படத்தின் வழியாக நிஜ வாழ்க்கையில் ஆண்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் எப்படி இனி இருக்க வேண்டும் என்பதையும் காண்பித்துள்ளது.

tamil cinema தமிழ் சினிமா
Advertisment