மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய 7 குறிப்புகள்

Devayani
27 Dec 2022
மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய 7 குறிப்புகள்

பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சிலர் மாதவிடாய் காலத்தில் எரிச்சல் போன்றவற்றை உணரலாம், சிலருக்கு படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு வலியும் ஏற்படலாம். அந்த காலங்களில் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றியும், சுகாதாரம் பற்றியும் விழிப்புணர்வு இல்லாததால் நிறைய பெண்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளானார். இன்றும் பல பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி தெரிவதில்லை காரணம் சமூகத்தில் மாதவிடாய் பற்றி பேச நிறைய தடைகள் உள்ளன. எனவே, உங்களுக்காக மாதவிடாய் ஆரோக்கியம் பற்றியும் மாதவிடாய் காலத்தில் நம்மை எப்படி பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. நாப்கின்(pads) மற்றும் டேம்பான்களை(tampon) சரியான நேரத்தில் மாற்றவும்:
நீண்ட நேரம் ஒரே நாப்கினை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அரிப்பு மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கின்களை மாற்ற வேண்டும். ஒரு டேம்பானை 8 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது. நீங்கள் நாப்கின்களை ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் மாற்றும் அளவிற்கு மாதவிடாய் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

2. மாதவிடாய் வலி:
அடிவயிறு, முதுகு போன்ற இடங்களில் லேசான வலி ஏற்பட்டால் ஹீட்டிங் பேக்(heating bag) அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் பாட்டிலை அந்த இடத்தில் வைக்கலாம். சூடான தண்ணீரில் குளிப்பதும் சில சமயங்களில் உதவியாக இருக்கும். வலி தாங்க முடியாத அளவிற்கு அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

3. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்:
மாதவிடாய் காலத்தில் உடலில் இருந்து அதிக அளவு இரத்த இழப்பு ஏற்படுகிறது. உங்கள் உடலில் இரும்புச் சத்து, நீர் அளவுகள் குறைவதால் நீங்கள் பலவீனம், காய்ச்சல், தலைவலி போன்றவற்றை உணரலாம். இதை தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

  • நிறைய தண்ணீர் குடியுங்கள்.
  • நீர் சத்து அதிகம் உள்ள பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் கிரேவிங்ஸை(cravings) நிறுத்த ஜங்க் ஃபுட்க்கு(food) பதிலாக டார்க் சாக்லேட்(dark chocolate) எடுத்துக் கொள்ளலாம்.
  • உப்பு, சக்கரை, காபி மற்றும் ஆல்கஹால் போன்ற உணவுகளை தவிர்க்கவும். ஏனெனில், அவை வேறு மாதவிடாய் பிரச்சனைகளையும் தருவதற்கான வாய்ப்பு உள்ளது.

4. சுற்றுச்சூழலை பாதிக்காதீர்கள்:
ஒரு நாப்கினில் ஒன்று முதல் மூன்று பிளாஸ்டிக் பைகளின் சம அளவு பிளாஸ்டிக் இருப்பது உங்களுக்கு தெரியுமா? இவை சுற்றுச்சூழலுக்கு மட்டும் கேடு விளைவிக்காமல் நமது உடலிலும் ராஷஸ்(rashes) போன்ற பிரச்சனைகளை தருகிறது. உங்களுக்கு நாப்கின் பயன்படுத்துவது வசதியாக இருந்தால் ரீயூசபில் நாக்கினை (reusable pad) பயன்படுத்தலாம் அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களால் ஆன menstrual cup அல்லது பிரியட் பேண்டிஸ்(period panties) பயன்படுத்தலாம்.

5. உங்கள் பட்டைகளை சரியாக அப்புறப்படுத்துங்கள்:
பேட்களை முறையற்ற முறையில் அகற்றுவது, வடிகால் அடைப்பு, பாக்டீரியா தொற்று மற்றும் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கும். மாதவிடாயை அசுத்தமாக நினைக்கும் வீடுகளில் உள்ள சில பெண்கள், மற்ற குப்பைகளுடன் சேர்த்து தங்கள் பேட்களை அப்புறப்படுத்துவார்கள். ​​​​மற்றவர்கள் அதை வடிகால் வழியாக வெளியேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த இரண்டுமே சுகாதாரமற்றதாகவும், சிரமமானதாகவும் உள்ளது.  உங்கள் பட்டைகளை அப்புறப்படுத்த சிறந்த மற்றும் எளிதான வழி இன்சினீரேஷன் ஆகும்.  உயிர்-மருத்துவக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள், 1998, இரத்தம் அல்லது உடல் திரவங்களால் அசுத்தமான கழிவுப் பொருட்களை எரிக்க வேண்டும், ஆட்டோகிளேவ் அல்லது மைக்ரோவேவ் மூலம் நோய்க்கிருமிகளைக் கொல்ல வேண்டும் என்று கூறுகிறது. 

6. வெஜைனா(vagina)  கவனிப்பு:
வெஜைனா தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் ஆற்றலை கொண்டது. மாதவிடாய் காலங்களில் வெதுவெதுப்பான தண்ணீரில் வெஜைனா கழுவ வேண்டும். முக்கியமாக சோப்பு மற்றும் வெஜைனல் வாஷ்(vaginal  wash) பயன்படுத்தக்கூடாது. மாதவிடாயின் போது வெஜைனாவில் இருந்து லேசான வாசனை வருவது போல் இருக்கும். அது அமில சமநிலையை பராமரிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் ஏற்படுகிறது. அது வெஜைனாவை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. உங்கள் வெஜைனாவில் இருந்து கடுமையான துர்நாற்றம் வருகிறது என்றால் மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.

7. தேவையான அளவு ஓய்வு எடுங்கள்: 
மாதவிடாய் காலத்தில் நம் உடம்பிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுவதால் நீங்கள் சோர்வாகவும், பலவீனமாகவும் உணரலாம். சில வேலை இடங்களில் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் விடுப்பு கொடுக்கவும் தொடங்கிவிட்டனர். எனவே, உங்களுக்கு ஓய்வு வேண்டுமெனில் அதனை எடுத்துக் கொள்ளுங்கள். மாதவிடாய் பற்றி மறைப்பது இன்னும் அதை சுற்றி சமூகத்தில் உள்ள தடைகளை அதிகப்படுத்துகிறது. எனவே, உங்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்லது மாதவிடாய் சமயத்தில் ஓய்வு வேண்டுமெனில் அதனை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

Read The Next Article