Advertisment

குடும்பத்திற்காக பணம் சம்பாதிப்பது ஆணுக்கான வேலையா?

author-image
Devayani
New Update
men earning

குடும்ப வரவு செலவுகளை கையாளுவது சுலபமான விஷயம் அல்ல அது மட்டும் இன்றி தனிமனிதரால் சுலபமாக செய்யக்கூடிய வேலையும் அல்ல. ஆனாலும், நம் சமூகம் குடும்பத்தில் உள்ள ஆண் தனியாக வரவு செலவுகளை கையாள முடியும் என்று கருதுகிறது. ஆண்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆண்கள் மேல் இந்த மாதிரியான சுமைகளை திணிப்பது சரியா? ஏன் இந்த சமூகம் ஆண், பெண் சமமாக சம்பாதிப்பதை ஊக்குவிப்பதில்லை?

Advertisment

குடும்ப செலவுகளை கையாள ஒருவருக்கு மேல் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அது மிக சுலபமாக ஒன்றாக இருக்கும். சில கூட்டுக்குடும்பங்களில் பல ஆண்கள் இருப்பதால் அவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்று குடும்ப செலவுக்காக பணம் சம்பாதிப்பதை ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஏன் பெண்கள் வேலைக்கு செல்வதையும், குடும்ப செலவுக்காக பணம் சம்பாதிப்பதையும் இயல்பான ஒரு விஷயமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது?

பெரும்பாலானோர் தற்போது தனி குடும்பங்களாக வாழ்வதால் குடும்பத்தில் அனைத்து பண தேவையும் ஒரே ஆணின் மேல் திணிக்கின்றனர். குடும்ப தேவைக்காகவும், சமூக மரியாதைக்காகவும் வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஒரு முழு குடும்பமும் ஒரு ஆண் மகனையே சார்ந்து இருந்தால் அந்த ஆணின் சுதந்திரமும் குறைகிறது. எவ்வாறு என்றால், அந்த ஆணால் பணத்தை சேமிக்க முடியாது, அவருக்காக முதலீடு செய்ய முடியாது, செய்யும் வேலை பிடிக்கவில்லை என்றாலும் அதை மாற்ற முடியாத ஒரு நிலையில் வாழ்கின்றனர். 

இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும் குடும்பத்தில் அந்தப் பெண்ணும் வேலைக்கு சென்றால் அந்த குடும்பத்தின் நிலையும், ஆணின் நிலையம் முன்பை விட நன்றாகவே இருக்கும். ஒரு பெண் வேலைக்கு சென்று அந்த ஆணின் பணச்சுமையில் இருந்து பங்கு எடுத்துக் கொண்டால் குடும்ப சுமயம் குறையும், அந்த ஆணும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க முடியும். 

Advertisment

அது மட்டும் இன்றி அவள் வேலைக்கு செல்வதால் வீட்டில் அவள் கருத்துகளுக்கும் மதிப்பு இருக்கும். குடும்பத்தினர் அவள் திறமையை கண்டறிவது மட்டும் இன்றி அவள் கருத்துக்களையும், முடிவுகளையும் மதிப்பர். 

பெண்களை பணம் சம்பாதிக்க ஊக்கவிப்பதால், பாலியல் ரீதியான சமூக கருத்துகளை மாற்ற முடியும். அதுமட்டுமின்றி, பெண்கள் சம்பாத்தியத்தை வைத்து குடும்பம் நடத்தினால் அந்த குடும்பத்தையும் அந்த குடும்பத்தில் இருக்கும் ஆண்களையும் இந்த சமூகம் அவமதிக்கும் என்ற சமூக விதியை முறியடிக்க இந்த நிகழ்வு உதவும்.

பெண்கள், குடும்ப வருமானம் மற்றும் செலவுகளில் பங்களிப்பதை இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டால், அவள் வேலையையும், ஊதியத்தையும் மதிப்பு மிக்க ஒன்றாக இந்த சமூகம் கருத தொடங்கும். 

ஒரு பெண் குடும்ப செலவு பொறுப்புகளில் பங்கு கொள்வதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதால் நம்மால் பாலியல் பாகுபாடுகளில் இருந்து வெளியேற முடியும். “பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கு தான் லாக்கி” என்ற எண்ணம் கொண்டவர்களை இந்த நிகழ்வு மாற்றாதா? பெண்கள் எப்படியும் சம்பளம் இல்லாத ஒரு உழைப்பாளியாக தான் வீட்டு வேலையை செய்கின்றனர். அதற்கு, அவர்கள் சம்பளம் பெறும் ஒரு தொழிலாளியாக இருந்து வரவு செலவுகளில் பங்களிப்பதில் இந்த சமூகத்திற்கு என்ன பிரச்சனையோ? 

குடும்ப செலவு
Advertisment