Vitamin C Foods

வைட்டமின் சி சத்து நிறைந்த சிறந்த 10 உணவுகள்! இந்த நீரில் கரையக்கூடிய திரவத்தன்மையுள்ள ஊட்டச்சத்து தனக்குள் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. வைட்டமின் சி யில் அதிகமான ஆன்டிஆக்ஸிடண்டுகள் உள்ளன.

author-image
Nandhini
New Update
vitamin c foods.jpg

Image is used for representation purposes only.

உங்கள் வெள்ளையணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அன்றாட உணவு முறையில் வைட்டமின் சி-யை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இதய நலன் ஆரோக்கியமாக இருக்கும். பொதுவானநோய்கள் பல அண்டாமலும் உங்களை எனெர்ஜியாக வைத்துக் கொள்ளும். மேலும் ஒரு நாளைக்கு 100மிகி வைட்டமின் சி-யை எடுத்துக் கொள்பவர்களுக்கு கேன்சர் உருவாகும் அபாயம் குறைவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

vitamin c rich vegetables and fruits | Vitamin C Foods

Advertisment

நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலேயே வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. ஆனால், அது தெரியாமல் பெரும்பாலும் அந்த உணவுகளை நாம் தவிர்த்து வருகிறோம்.

பச்சை மிளகாய்

அனுதினமும் ஏதாவது ஒரு வகையில் இந்த பச்சைமிளகாய் நமது உணவில் கலந்து விடுகிறது. ஆனால், அதன் உரைப்புத் தன்மையால் அதை தவிர்த்து விடுகிறோம்.ஒரு பச்சை மிளகாயில் 109மிகி வைட்டமின் சி உள்ளது. அதே போல், ஒரு சிவப்பு மிளகாயில் 65மிகி வைட்டமின் சி உள்ளது.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் பல்வேறு ஊட்டச்சத்து நலன்களை கொண்டது. இதில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட் இசோப்பேன் உள்ளது. மேலும் இதை தொடர்ந்து உண்பதால் உங்களின் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும். ஒரு கொய்யாப்பழத்தில் 145 மிகி வைட்டமின் சி உள்ளது.

மஞ்சள் குடைமிளகாய்

Advertisment

வைட்டமின் சி அதிகமாக எடுத்துக் கொள்வது கண்களுக்கு நல்லது. ஏனெனில், வைட்டமின் சி சத்து குறையும்போது உங்கள் கண்களில் புரை விழுவது, பார்வை மங்குவது போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே, வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். ஒரு முழு மஞ்சள் குடைமிளகாயில் 342மிகி வைட்டமின் சி அடங்கியுள்ளது.

ஆரஞ்சு பழம்

எல்லாரும் விரும்பி உண்ணும் சிட்ரஸ் பழமான ஆரஞ்சு ஒன்றை சாப்பிட்டால் 83மிகி வைட்டமின் சி கிடைக்கும். ஆரஞ்சு போலவே இருக்கும் கிரேப்ப்ரூட்டிலும் 46மிகி வைட்டமின் சி கிடைக்கும்.

ஸ்ட்ராபெரி

பொதுவாக ஸ்ட்ராபெரியை பணக்கார பழம் என்று சொல்லுவார்கல். ஆனால், தற்போது மிக சுலபமாகவும், மலிவாகவும் இந்த பழம் கிடைக்கிறது. 166 கிராம் ஸ்ட்ராபெரி சாப்பிட்டீர்கள் என்றால் 97மிகி வைட்டமின் சி கிடைக்கும்.

பப்பாளி

Advertisment

மறதி நோய் இருப்பவர்களுக்கு பப்பாளி நல்லது. மேலும் இது உங்களது நியாபக சக்தியை கூர்மையாக்கும்.145 கிராம் பப்பாளி சாப்பிட்டால் 88 மிகி வைட்டமின் சி கிடைக்கும்.

​லெமன்

எலுமிச்சை பழமும் தன்னுள் பலவிதமான சக்திகளை அடக்கி வைத்துள்ளது. எலுமிச்சை சாறில் உள்ள கூறுகள் ஆன்டிஆக்ஸிடண்டுகளாக பணிபுரிகின்றன. ஒரு முழு எலுமிச்சை பழத்தில் 45மிகி வைட்டமின் சி சத்து உள்ளது.

ப்ரோக்கோலி

இதில் புற்றுநோய்க்கு எதிராக போராடும் பண்புகள் உள்ளன. மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்ல பலனை தருகிறது.அரை கப் வேகா வைத்த ப்ரோக்கோலியில் 51 மிகி வைட்டமின் சி உள்ளது.

கிவி பழம்

Advertisment

ஒரு கிவி பழத்தில் 56மிகி வைட்டமின் சி அடங்கியுள்ளது. இதன் பண்புகளின் சிறப்பு என்னவென்றால் இது ரத்தப்போக்கு மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். வெள்ளையணுக்களின் இயக்கத்தை அதிகரிக்கும்.

கொத்தமல்லி

8 கிராம் கொத்தமல்லியில் 10மிகி வைட்டமின் சி உள்ளது. மேலும் கொத்தமல்லியில் வைட்டமின் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடண்டுகளும் உள்ளன.

இந்த கட்டுரையை நமக்காக நம் சகோதரி இந்து பிரியா சக்திவேல் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

Advertisment

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/menopause-shame-and-stigma-2023087

Suggested Reading:  https://tamil.shethepeople.tv/health/some-reasons-to-pay-attention-to-womens-health-2023076

Suggested Reading:  https://tamil.shethepeople.tv/health/are-glutathione-injections-a-fad-2023062

Advertisment

Suggested Reading: https://tamil.shethepeople.tv/society/breastfeeding-positions-2023042

Vitamin C Foods