அனைத்து பெண்களும் Skin Care Routine ஐ follow செய்யாமலேயே விலை உயர்ந்த பொருட்களை உபயோகிக்காமலேயே Skin ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். என்றும் இளமையுடனும் ஆரோக்கியமுடனும் வாழவே நினைக்கும் பெண்களுக்கு இந்த 6 யோகா மிகவும் உபயோகமாக இருக்கும். மாசுபட்ட சூழல், மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் அசாதாரண உணவு பழக்கம் போன்ற பல காரணங்களால் நம் Skin damage ஆகிறது. அதில் இருந்து காக்க இந்த யோகாசனங்களை செய்தால் நம் மூளையின் ரத்த ஓட்டம் சீராக செயல்பட்டு முகம் பிரகாசிக்கும்.
Bhujangasana (Cobra Pose):
-
இந்த யோகா செய்யும் பொழுது நமது இடுப்பு மற்றும் தோல் பகுதியில் உள்ள விரைப்பு தளர்ந்து நல்ல மனநிலையை ஏற்படுத்தும். மேலும் Skin smooth ஆகும்.
-
புஜங்காசனம் செய்வதால் சருமம் ஆரோக்கியமாகவும் மற்றும் சீக்கிரம் ஏற்படும் சரும முதிர்வை கட்டுக்குள் வைத்திருக்கும்.
Matsyasana ( Fish Pose):
-
இந்த ஆசனம் ஆனது உடம்பில் ஏற்படும் Hormonal balance ஐ சீராக வைக்க உதவுகிறது.
-
மற்றும் தசைகளை தளர்த்து முகத்திற்கு தேவையான நிலையான ரத்த ஓட்டத்தை கொடுக்கிறது.
-
இந்த ஆசனமானது தைராய்டு சுரப்பியை சரியாக வேலை செய்ய தூண்டுகிறது. எனவே, ஹார்மோன் சமமாக சுரக்க வழி வகுக்கிறது.
Halasana (Plow Pose):
-
Halasana முகத்திற்கும் தலைக்கும் ஏற்ற ரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்தை பல பலவென வைக்க உதவுகிறது.
-
இந்த யோகா நம் மன அமைதியையும் செரிமானத்தையும் சீராக வைத்திருக்க உதவுவதால் நம் சருமத்திற்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என ஆய்வுகள் சொல்கிறது.
Sarvangasana ( Shoulder Stand Pose):
-
இந்த ஆசனம் முகத்தில் ஏற்படும் Dullness ஐ போக்கி, Acne மற்றும் Pimples இல் இருந்து விடுபட உதவுகிறது.
-
ரத்த ஓட்டத்தை அதிகரிக்க சர்வங்காசனம் மிகவும் துணையாக இருக்கிறது
-
இந்த ஆசனம் செய்வதால் முடி உதிர்வு சரியாகி முடி நன்றாக வளரும்.
Trikonasana (Triangle Pose):
-
இந்த யோகாவை செய்யும்பொழுது தலைக்கும் முகத்திற்கும் தேவையான ஆக்ஸிஜனை அதிகரித்து முகம் ஜொலி ஜொலிப்பை மேலும் அதிகரிக்கிறது.
-
இந்த ஆசனம் செய்யும்பொழுது இதயம் மற்றும் நுரையீரல் விரிவடைகிறது. எனவே சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை இது சப்ளை செய்கிறது. இதனால் சருமத்தில் இருக்கும் கெட்டவை வெளியே வந்து சர்ம ஜொளி ஜொலிப்பு ஓங்கும்.
Shishuasana (Child Pose):
-
நம் மனதில் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை போக்க இந்த ஆசனம் மிகவும் உபயோகமாக இருக்கிறது.
-
இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது
Pranayama:
-
பிராணாயாமா செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் Acne ஐ கட்டுக்குள் வைத்திருக்கிறது.
இது தவிர நாம் தினமும் தண்ணீர் உட்கொண்டால் சருமம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தினமும் உடற்பயிற்சி செய்யும் பொழுது நம் உடம்பில் இருந்து வரும் வியர்வையால் கெட்ட கொழுப்புகள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்
வைட்டமின் சி அதிகமாக இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதால் Dark spots, Scars மற்றும் Tans போன்றவற்றை தவிர்க்கலாம்.
தினமும் எட்டு மணி நேர தூக்கம் அவசியமானது. எப்பொழுதும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருங்கள் அதுவே நம் அழகை மேலும் கூட்டும்.
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/cooking-tips-and-tricks-for-beginners
https://tamil.shethepeople.tv/health/foods-to-eat-during-menstruation
https://tamil.shethepeople.tv/health/foods-to-strengthen-your-bones
https://tamil.shethepeople.tv/health/say-goodbye-to-pcod-with-this-5-days-complete-diet-plan