PCOD இருப்பவர்கள் எந்த பயமும் இல்லாமல் நம்பிக்கையாக சத்தான உணவுகளை உட்கொண்டால் எந்தவித பக்க விளைவும் இன்றி இதில் இருந்து விடுபடலாம். தினமும் நம் உணவில் சேர்க்க வேண்டிய புரத சத்து மற்றும் நார் சத்தை தேவையான அளவு சேர்த்தாலே போதும், PCOD இல் இருந்து விரைவாக குணமடையலாம்.
வாரம் ஐந்து நாட்கள் இந்த டயட்டை follow செய்வதால், உடலுக்கு போதிய அளவு சத்துக்கள் கிடைத்து இன்சுலின் லெவலை சமமாக வைக்க உதவுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Diet chart ஓடு சேர்த்து, தினமும் காலை சூரிய நமஸ்காரம் அரை மணி நேரம் செய்வதால், PCOD கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
DAY 1:
7.00 AM- காலையில் 100ml Jeera கலந்த தண்ணீரை குளியுங்கள்.
7.30 AM- இரண்டு அத்தி பழம் சாப்பிடுங்கள்
8.30 AM - மிளகு மற்றும் மஞ்சள் கலந்த பால் குடியுங்கள்
9.30 AM - என்னை குறைவாக 2 தோசை மற்றும் புதினா சட்னி சாப்பிடுங்கள்
11.30 AM - ஒரு மாதுளம் பழத்தோடு பத்து ஊற வைத்த பாதாம் சாப்பிடுங்கள்
1.30 PM- தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து Salad எடுத்துக் கொள்ளுங்கள்
2.00 PM- ஒரு கப் தக்காளி சாதம், Vegetable Sabzi மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ளவும்
4.00 PM- முளைகட்டிய பாசிப்பயிறு எடுத்துக் கொள்ளுங்கள்
8.30 PM- சப்பாத்தி மற்றும் பாலக் பன்னீர் செய்து சாப்பிடுங்கள்சாப்பிடுங்கள்
DAY 2:
7.00 AM- காலையில் 100ml ஓமம் கலந்த தண்ணீரை குளியுங்கள்.
7.30 AM- இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்
8.30 AM - மிளகு மற்றும் மஞ்சள் கலந்த பால் குடியுங்கள்
9.30 AM - இரண்டு இட்லி மற்றும் வேர்க்கடலை சட்னி சாப்பிடுங்கள்
11.30 AM - ஒரு ஆரஞ்சு பழத்தோடு பத்து ஊற வைத்த பாதாம் சாப்பிடுங்கள்
1.30 PM- தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து Salad எடுத்துக் கொள்ளுங்கள்
2.00 PM- ஒரு கப் சாதத்தோடு, வெண்டைக்காய் சாம்பார் மற்றும் அவரக்காய் பொரியலை எடுத்துக் கொள்ளுங்கள்
4.00 PM- கேரட் மற்றும் வெள்ளரிக்காயால் ஆன Salad ஐ எடுத்துக்கொள்ளுங்கள்
8.30 PM- 2 இட்லி மற்றும் சென்னா மசாலா சாப்பிடுங்கள்
DAY 3:
7.00 AM- காலையில் 100ml ஓமம் கலந்த தண்ணீரை குளியுங்கள்.
7.30 AM- இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்
8.30 AM - மிளகு மற்றும் மஞ்சள் கலந்த பால் குடியுங்கள்
9.30 AM - வேர்க்கடலைகள் மற்றும் கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளால் ஆன கோதுமை உப்புமா எடுத்துக் கொள்ளுங்கள். அத்தோடு வெள்ளரிக்காய் மற்றும் முளைகட்டிய பயிறு Salad செய்து சாப்பிடுங்கள்.
11.30 AM - ஒரு கொய்யா பழத்தோடு பத்து ஊற வைத்த பாதாம் சாப்பிடுங்கள்
1.30 PM- தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து Salad எடுத்துக் கொள்ளுங்கள்
2.00 PM- ஒரு கப் சாதத்தோடு, பன்னீரும் பட்டாணியும் கலந்த Burji மற்றும் ரசம் சாப்பிடுங்கள்
4.00 PM- வேக வைத்த சுண்டலோ தாளிச்ச சுண்டலோ எடுத்துக் கொள்ளுங்கள்
8.30 PM- காய்கறி சாம்பாரோடு வெள்ளை உப்புமா சாப்பிடுங்கள்
DAY 4:
7.00 AM- காலையில் 100ml ஓமம் கலந்த தண்ணீரை குளியுங்கள்.
7.30 AM- இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்
8.30 AM - மிளகு மற்றும் மஞ்சள் கலந்த பால் குடியுங்கள்
9.30 AM - வேர்க்கடலை மற்றும் பட்டாணி கலந்த POHA மற்றும் அரை கப் தயிர் சாப்பிடுங்கள்
11.30 AM - ஒரு ஆரஞ்சு பழத்தோடு பத்து ஊற வைத்த பாதாம் சாப்பிடுங்கள்
1.30 PM- தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து Salad எடுத்துக் கொள்ளுங்கள்
2.00 PM- ஒரு கப் சாதத்தோடு, மோர் குழம்பும் முட்டைக்கோஸ் பொரியலும் எடுத்துக் கொள்ளுங்கள்
4.00 PM- வேக வைத்த சுண்டலோ தாளிச்ச சுண்டலோ எடுத்துக் கொள்ளுங்கள்
8.30 PM- இரண்டு இட்லி மற்றும் வெஜிடபிள் சாம்பார் எடுத்துக் கொள்ளுங்கள்
DAY 5:
7.00 AM- காலையில் 100ml JEERA கலந்த தண்ணீரை குளியுங்கள்.
7.30 AM- இரண்டு அத்தி பழம் சாப்பிடுங்கள்
8.30 AM - மிளகு மற்றும் மஞ்சள் கலந்த பால் குடியுங்கள்
9.30 AM - இரண்டு இடியாப்பம் மற்றும் கடலை கறி சேர்த்துக் கொள்ளுங்கள்
11.30 AM - ஒரு மாதுளம் பழத்தோடு பத்து ஊற வைத்த பாதாம் சாப்பிடுங்கள்
1.30 PM- தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து Salad எடுத்துக் கொள்ளுங்கள்
2.00 PM- 2 சப்பாத்தி யோடு பாலக் பன்னீர் மற்றும் அரை கப் தயிர் சாப்பிடுங்கள்
4.00 PM- முளைகட்டிய பயிரோடு வேக வைத்த சுண்டலையும் கலந்து சாப்பிடுங்கள்
8.30 PM- 2 சப்பாத்தி ஒரு காலிபிளவர் மற்றும் பட்டாணி CURRY செய்து சாப்பிடுங்கள்
காய்கறி மற்றும் பயிர் வகைகளை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. இதோடு உடற்பயிற்சியும் சேர்ந்து செய்தால் நிஜமாகவே PCOD க்கு goodbye சொல்லிடுவீங்க!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/sugar-substitutes-for-diabetic-patients
https://tamil.shethepeople.tv/health/healthy-snacks-for-weight-loss
https://tamil.shethepeople.tv/health/pcod-can-be-cured-easily
https://tamil.shethepeople.tv/health/self-examination-for-breast-cancer