Advertisment

Breast cancer- சுய பரிசோதனை செய்வது எப்படி?

Breast Cancer பெண்களை குறி வைக்கும் பிரத்தியேக நோயால் உலகில் வளம் வந்து கொண்டிருக்கிறது. Prevention is better than cure என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப எந்த நோயையும் முன்னரே தெரிந்து கொள்வதன் மூலம், அதன் விளைவையும், தாக்கத்தையும் எளிதாக குணப்படுத்த முடியும்.

author-image
Pava S Mano
New Update
Cancer

Images are used for representational purpose only

புற்றுநோய் என்றாலே மிகவும் ஆபத்தான நோயாகும். இது அசாதாரண உயிரணு பிரிவால் வகைப்படுத்தப்படும் மோசமான நோய். உலகில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் 10.4% மார்பக புற்று நோயால் ஏற்படுகிறது என புள்ளி விவரம் காட்டுகிறது. இதன் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

சுயபரிசோதனை: (Selfexamination)

மாதம் ஒரு முறையாவது பெண்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டோர் வருடத்திற்கு ஒரு முறையாவது மெமோகிராபி (Mammography) மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கட்டிகளை கண்டறியலாம்.

Breast cancer

Advertisment

எப்படி செய்வது:

ஆரம்பத்தில் சுய பரிசோதனை சரியாக செய்கிறோமா என்ற சந்தேகம் வரலாம். ஆனால், தொடர்ந்து பரிசோதனை செய்யும் பொழுது மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் விரைவில் சிகிச்சை மேற்கொள்ள முடியும். மாதம் ஒருமுறை மாதவிடாய் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு செய்ய வேண்டும்.

சுயபரிசோதனையின்-5 Steps:

Advertisment

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த 5 Steps சுயபரிசோதனை மார்பக புற்றுநோயை முன்னரே கண்டறிய உதவும்.

Step 1: 

கண்ணாடியின் முன் தோள்பட்டையை நேராக வைத்துக் கொண்டு கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். மார்பகத்தின் அளவு, வடிவு, நிறத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா அல்லது வீக்கம் இருக்கிறதா என்று கவனியுங்கள். மார்பகத்தில் தோல் பகுதியில் சுருக்கமோ, வீக்கமோ அல்லது முளைக்காம்பு(nipple) உள்நோக்கி இருக்கிறதா என்று பரிசோதிங்கள். பின் மார்பகங்களில் புண், வலி, சிகப்பு நிற தடிப்பு இருக்கிறதா என்று பாருங்கள்.

Advertisment

Step 2:

இரு கைகளையும் உயர்த்தி மேற் சொன்ன அனைத்தையும் மீண்டும் கவனியுங்கள்.

Step 3:

Advertisment

கண்ணாடி முன் நின்று கொண்டு முளைக்காம்புகளில் ரத்தமோ, நீரோ அல்லது மஞ்சள் நிற திரவியம் ஏதும் வெளிப்படுகிறது என்று பாருங்கள்.

Step 4:

படுத்துக் கொள்ளுங்கள். விரல்களை சேர்த்து வைத்துக் கொண்டு, தோள்பட்டை எலும்பிலிருந்து மேல் வயிறு வரை, அக்குள்களில் இருந்து நெஞ்சு பகுதி வரை, விரல் நுனிகளில் அழுத்தமாகவும், மென்மையாகவும், மார்பகத்தை அழுத்திப் பாருங்கள். வலது கையினால் இடது மார்பையும் இடது கையினால் வலது மார்பையும் பரிசோதிங்கள்.

Advertisment

Step 5:

நின்று கொண்டு அமர்ந்து கொண்டோ மார்பை அழுத்தி தடவி பார்க்கவும். குளிக்கும் போது பரிசோதித்தால் இன்னும் எளிதாக இருக்கும்.

40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இந்த பரிசோதனை முறையை மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம். ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

Advertisment

மார்பகபுற்றுநோயை தடுக்க சிறந்த வழிமுறைகள்:

Cancer

மார்பகபுற்றுநோயை தடுக்க சிறந்த வழி மருத்துவ ஆலோசனையும், சுய பரிசோதனையும் ஆகும். மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதிகப்படியான Junk food-ஐ தவிர்ப்பது நல்லது. உடல் பருமனாலும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். எந்தவித சிறிய மாற்றத்தை உங்கள் உடலில் பார்த்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். தாய்ப்பால் கொடுப்போருக்கு புற்றுநோய் தாக்கும் சதவீதம் குறைவு என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. எனவே, பிரசவத்திற்குப் பிறகு ஒரு வருட காலமாவது தாய்ப்பால் கொடுங்கள். Antioxidants அதிகம் உள்ள ஆரோக்கியமான உணவை உட்கொள்வது சிறப்பாகும். மது உட்கொள்ளும் பழக்கத்தை குறைத்துக் கொள்வது நல்லதாகும். மார்பக புற்றுநோய் பற்றிய awareness அனைவருக்கும் தேவை.

எந்தவித நோயையும் தவிர்க்க, lifestyle change முக்கியம். பெண்கள் குடும்பத்திற்கான நேரத்தை செலவிடுவதை தவிர்த்து அவர்களுக்கும் சில நேரம் ஒதுக்கி ஆரோக்கியத்தை பேணலாம்!

 

Suggested Reading: சம சீரற்ற மார்பகங்கள்(uneven breasts) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Suggested Reading: எச்சரிக்கை பெண்களே: மாதவிடாயின் அதிக இரத்தப்போக்கு ஆபத்தானது

Suggested Reading: பெண்களுக்கு தேவையான பத்து வைட்டமின்கள்(vitamins)

Suggested Reading: பெண்களின் மன அழுத்தத்திற்கான(depression) தீர்வுகள்

 

awareness selfexamination breast cancer
Advertisment