PCOD - குணப்படுத்தலாம் சுலபமாக! பயம் வேண்டாம்

அலுவலக வேலை வீட்டு வேலை என சக்கரமாய் சுழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள நேரம் இருப்பதில்லை. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள் ஏராளம். அதில் ஒன்று தான் PCOD. அதை சீக்கிரமாகவே விரட்டி அடிக்கலாம் இதை செய்தால்.

author-image
Pava S Mano
New Update
Pcod

Images are used for representational purpose only

ஐந்தில் ஒரு பெண்ணுக்கு PCOD என்னும் ஹார்மோனல்(Hormonal) பிரச்சனை காணப்படுகிறது. ஆனால் அதனை சரியான நேரத்தில் ஆராய்ந்து சரி செய்யவில்லை என்றால் diabetes, blood pressure, போன்ற உடல் உபாதைகள் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். PCOD-ஐ நினைத்து பயப்பட வேண்டாம். ஏனென்றால் சிறந்த வாழ்க்கை முறையே இதற்கான ஒரே தீர்வாகும்.

Advertisment

Lifestyle மாற்றங்கள்:

சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இருந்தால் PCODக்கு சிறந்த பலன் தரும். உடலில் உண்டாகும் தேவையற்ற கொழுப்பை குறைக்க தினசரி உடற்பயிற்சி மற்றும் சீரான மனநிலையை மேம்படுத்த யோகா உதவும். ஒரு நாளைக்கு நாம் செய்யும் அனைத்து வீட்டு வேலைகளும் இதில் அடங்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடலை stretch செய்வது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இரவு ஆழ்ந்த உறக்கம் தான் உடலில் தரமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. எனவே, PCOD உள்ள பெண்களுக்கு தூக்கம் மிகவும் அவசியம். இதுவே நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலை சீராக வைக்கிறது. சிறந்த தூக்கமே மன நிம்மதியையும் தரும்.

சத்தான diet வழிமுறைகள்:

Diet food

PCOD உள்ளவர்கள் என்ன சாப்பிடுவது, எப்படி சாப்பிடுவது என பல முறைகள் இருக்கிறது. ஆரோக்கியமான தாவரம் மற்றும் நீர் நிறைந்த உணவுகளை வீட்டிலேயே சமைத்த சாப்பிடுவது முக்கியம். இத்தோடு புரதசத்து(protein) உள்ள உணவுகளை உட்கொள்வதால் ஆரோக்கியமும் ஓங்கும். மேலும், சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். Fast food, packaged food போன்ற உடலுக்கு ஆகாத மற்றும் carbohydrates அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. நார் சத்துள்ள காய்கறிகள், முளைகட்டிய பயிறு வகைகள், Nuts வகைகளை சாப்பிடுவதால் இன்சுலின் எதிர்ப்பு அதிகரித்து உடலில் செரிமானத்தை தூண்டுகிறது. சத்தான உணவுகளை சரியான அளவில் சரியான நேரத்தில் சாப்பிடுவதால் PCOS-ஐ தவிர்க்கலாம்.

Exercise மட்டுமே ஒரே தீர்வு:

Surya namaskar

PCOD இருக்கும் பெண்கள் குறைந்தது 15 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். Abs workout அதிகம் செய்தால் இடுப்பில் இருக்கும் கொழுப்பு குறைந்து மாதவிடாய் சரியாக உதவுகிறது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் சுறுசுறுப்பாகி செரிமானத்தை கூட்டி வியர்வை மூலமாக calories ஐ குறைக்க உதவுகிறது. PCODஆல் பாதிப்படைந்த பெண்களுக்கு சூரிய நமஸ்காரம் நல்ல தீர்வை தருகிறது. இது தவிர பிராணயாம பயிற்சியால், சுவாச கவனம் செலுத்துவதால், சரியான அளவு ஆக்சிஜனை, ஹார்மோன் சுரப்பிகளுக்கு அனுப்புகிறது. இதனால் சீரான hormonal balance கிடைக்கிறது.

Advertisment

இது அனைத்தையும் மேற்கொள்ள திடமான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். PCOD பிரச்சனையை நினைத்து கவலைப்படாமல், அதை எப்படி சமாளிப்பது என ஒரு schedule செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தோடு, மனதையும் நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். Lifestyle change, ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, மற்றும் யோகா இதை செய்தாலே PCOD-இல் இருந்து நீங்கள் வெளியே வரலாம். எதுவும் சாத்தியமே நீங்கள் முயன்றால்!

Suggested Reading: Breast cancer- சுய பரிசோதனை செய்வது எப்படி?

Suggested Reading: பெண்களுக்கு தேவையான பத்து வைட்டமின்கள்(vitamins)

Suggested Reading: மாதவிடாய் சமயத்தில் உங்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஐந்து குறிப்புகள்

Suggested Reading: Menopause சமயத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்

Hormonal balance PCOD