Advertisment

மாதவிடாய் சமயத்தில் உங்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஐந்து குறிப்புகள்

மாதவிடாய் சமயத்தில் உங்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஐந்து குறிப்புகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுவது மாதவிடாயின் போது நீங்கள் அசௌகரியத்தை உணராமல் இருக்க உதவும்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
period hygiene

Image is used for representational purpose only

மாதவிடாய் ஒரு இயற்கையான செயலாகும். அதை அனுபவிக்கும் பெண்கள் பெரும்பாலும் பல காரணங்களுக்காக அதை வெறுத்திருப்பர். இருப்பினும் பெண்கள் அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். மாதவிடாய் சமயத்தில் நாம் நம்மை ஒழுங்காக பராமரித்துக் கொள்வது அசௌகரியத்தை குறைக்க உதவுகிறது. அதற்கான குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

1. சரியான மாதவிடாய் பொருட்களை தேர்ந்தெடுப்பது:

மாதவிடாயின் பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய நாப்கின்கள் எந்தவித இரசாயனங்களும் இல்லாத, பிளாஸ்டிக் பயன்படுத்தாத நாப்கின்னாக தேர்ந்தெடுக்க வேண்டும்‌. அப்பொழுதுதான் rashes போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். அது மாதவிடாய் இரத்தத்தையும் நன்றாக ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதனால் சரியான மாதவிடாய் நாப்கினை தேர்ந்தெடுங்கள். நாப்கின்களை 4 அல்லது 6 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

தற்பொழுது menstrual cupகளையும் பலர் பயன்படுத்துகின்றனர். பலர் அது சௌகரியமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளனர். அதை சரியான விதத்தில் பயன்படுத்தினால் அது சௌகரியமாக இருக்கும். மேலும் அது மாதவிடாய் இரத்தம் வெளியில் கசியாமலும் பார்த்துக் கொள்வதோடு நீங்கள் நாப்கின்களை விட இன்னும் சிறிது நேரம் அணிந்திருக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.

Advertisment

2. சௌகரியமான விஷயங்களை செய்யுங்கள்:

மாதவிடாயின் பொழுது ஏற்படக்கூடிய வலியை குறைப்பதற்கு heating pads உதவுகிறது. அதை வயிற்று அடிப்பகுதியில் வைத்தால் மாதவிடாய் வலியில் இருந்தும் அசௌகரியத்தில் இருந்தும் விடுப்பு கிடைக்கும். மேலும், சௌகரியமான துணிகளை உடுத்த வேண்டும். மாதவிடாய் சமயத்தில் காற்றோட்டமாக இருக்கக்கூடிய துணிகளையும், உள்ளாடைகளையும் பயன்படுத்தினால் நமக்கு எரிச்சல் இல்லாமல் இருக்க உதவும்.

period hygiene

Advertisment

3. நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது:

மாதவிடாயின் பொழுது நிறைய தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. அது உங்களின் உடலை பல விஷயங்களில் இருந்து பாதுகாக்கிறது. அதை போல் சத்தான பழங்கள், காய்கறிகள் போன்ற விஷயங்களை சாப்பிடுவது உங்களை வலுவடைய செய்வதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். அதேபோல் பதப்படுத்தப்பட்ட உணவுகள், caffeine, அதிகமான உப்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

4. சுத்தமாக இருப்பது:

Advertisment

மாதவிடாயின் பொழுது குளித்தால் அதுவே பாதி சோர்வை தீர்த்து விடும். சாதாரணமாகவே குளிப்பதும், சுத்தமாக இருப்பதும் சோர்வு இல்லாமல் நம்மை பார்த்துக் கொள்ளும். சுத்தமாக இருப்பது நமது மனநிலையையும் அமைதிப்படுத்தும். மேலும் வெஜைனா பகுதியை சுத்தம் செய்வது அசௌகரியம், துர்நாற்றம் போன்ற விஷயங்களை இருந்து உங்களை பாதுகாக்கும்.

5. தேவையான ஓய்வு எடுப்பது:

இந்த மாதிரியான சமயத்தில் ஓய்வு எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஒழுங்காக தூங்காமல் இருப்பது கூட சில சமயத்தில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அதேபோல் தூங்கும் பொழுது வசதியான உடைகளை அணிந்து தூங்குங்கள். ஹீட்டிங் பேட் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் பாட்டிலை வயிற்றில் அடிப்பகுதியில் வைத்திருப்பது வலியை குறைத்து நீங்கள் சீக்கிரமாக தூங்குவதற்கு உதவுகிறது.

Advertisment

மேலும் நீங்கள் விழித்திருக்கும் போது உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தால் உங்கள் சிந்தனைகளை திசை திருப்ப உதவியாக இருக்கும். அல்லது உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் நீங்கள் மாதவிடாய் சமயத்தில் எப்படி உணருகிறீர்கள் என்பதை பகிர்ந்து கொள்வதும் உங்களுக்கு ஒரு ஆதரவை தரும்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் அனுபவம் வேறுபடுகிறது என்பதால் உங்களுக்கு எந்த மாதிரியான விஷயங்கள், அனுபவங்கள் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுங்கள். 

 

Advertisment

Suggested Reading: சம சீரற்ற மார்பகங்கள்(uneven breasts) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Suggested Reading: பெண்களுக்கு தேவையான பத்து வைட்டமின்கள்(vitamins)

Suggested Reading: எச்சரிக்கை பெண்களே: மாதவிடாயின் அதிக இரத்தப்போக்கு ஆபத்தானது

Advertisment

Suggested Reading: பெண்களின் மன அழுத்தத்திற்கான(depression) தீர்வுகள்

மாதவிடாய் period hygiene
Advertisment