Advertisment

Sugar Substitutes - சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைத்த பொக்கிஷம்!

பலவகை உணவு மாற்றங்களால் இன்று பிறக்கும் குழந்தைக்கு கூட Diabetes இன்னும் சர்க்கரை நோய் காணப்படுகிறது. அதற்கு காரணம் Genetics என்ற விவாதம் ஒரு பக்கமும் உணவு பழக்கம் தான் என்ற விவாதம் மறுபக்கமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கான தீர்வு?

author-image
Pava S Mano
New Update
Sugar Substitutes

Image is used for representational purpose only

மனிதர்கள் ஒரு விசேஷம் என்றாலே சரி, Sweet எடு, கொண்டாடு, என்று சந்தோஷமாக இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். இனிப்புகள் அதிகமாவதால் அவர்களின் உடல் சர்க்கரை அளவு அதிகமாகி சர்க்கரை நோய் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையில் அதிக கலோரிகள் இருப்பதால் அதையும் உட்கொள்ள முடியாமல் சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து வருகின்றனர். சர்க்கரை நோயாளிகள் என்றாலே அவர்கள் சர்க்கரையை உட்கொள்ளக் கூடாது என பல வதந்திகள் வலம் வருகிறது. ஆனால், அவர்களின் Glucose level ஐ பொறுத்து நீரழிவு நோய்க்கு ஏற்ற செயற்கை இணைப்புகள் சில வகைகள் இவ்வுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தேர்வு செய்யக்கூடிய Sugar Substitutes என்னவென்றால்,

Advertisment
  • சீனி துளசி

  • Monk Fruit

  • தேங்காய் பனைச் சர்க்கரை

  • டேட்ஸ் சர்க்கரை

  • Erythritol அல்லது Xylitol

இவைகள் "Sugar free" பொருட்கள் என்ற போலி விளம்பரங்களுக்கு சிக்காமல் இருக்கும் மாற்று சக்கரைகள் ஆகும்.

சீனி துளசி:

Advertisment

Stevia

ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் இந்த சீனி துளசி என்னும் மூலிகை பயிர் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வளர்க்கப்படுகிறது. சீனி துளசியில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரைக்கு கலோரிகள் கம்மி. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமமாக இருக்க சீனி துளசி உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சீனி துளசிக்கு நுண்ணுயிர்களை எதிர்க்கும் திறனும் உள்ளது. Vitamin C மற்றும் Vitamin A போன்ற சத்துக்கள் குறிப்பிட்ட அளவு காணப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் சீனி துளசியின் பொடியை தினமும் பகிரும் டீ காபி மற்றும் பழச்சாறு போன்றவற்றில் பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனி துளசி இலைகளை நீங்களே வீட்டில் வளர்த்தி சாப்பிடலாம்.

Monk Fruit:

Advertisment

 

Monk Fruit

மாங்க் Fruit இல் இருந்து ஒரு வகையான Sweetner தயார் செய்கின்றனர். அது கரும்பு சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பாக இருக்கிறது என்பதால் நாம் செய்யும் Cake மற்றும் Sweet இல் இதை சேர்த்து சாப்பிடலாம். பழமாக கூட சாப்பிடலாம். இதை "கடவுளின் கனி" என அழைக்கிறார்கள்.

Advertisment

Coconut Palm Sugar ( தேங்காய் பனைச் சர்க்கரை):

Coconut Palm Sugar

தேங்காய் சர்க்கரையில் இரும்பு பொட்டாசியம் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை உட்கொள்ளும் போது ஆரோக்கியத்திற்கு நல்ல விளைவுகளை கொடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக ஐந்து கிராம் சர்க்கரையில் 40 கலோரிகள் உள்ளன. அதே அளவு தேங்காய் சர்க்கரையில் 20 கலோரிகளே உள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்தச் சர்க்கரை ஒரு நல்ல மாற்றாக உதவும். தேங்காய் சர்க்கரை செரிமானத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் தேங்காய் சர்க்கரையை எந்தவித தயக்கமும் இன்றி தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 

Advertisment

Dates Sugar:

Dates Sugar

நீரழிவு நோயை கட்டுப்படுத்த நார்ச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. பேரிச்சம் பழத்தில் இருந்து எடுக்கப்படும் இந்த சர்க்கரையில் நார்ச்சத்து மிகுந்த அளவு காணப்படுவதால் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு இது நன்மையை தரும். 

Advertisment

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த உணவை சாப்பிடும் பொழுதும் அதற்கான அளவில் சாப்பிட்டால் எந்தவித நோய் வருவதற்கும் வாய்ப்பில்லை. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு சாப்பிட்டாலும் என்ன சாப்பிட்டாலும் அதற்கான உடற்பயிற்சியை செய்தால் உடலுக்கு எந்த தீங்கும் வராது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!"

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/healthy-snacks-for-weight-loss

Advertisment

https://tamil.shethepeople.tv/health/pcod-can-be-cured-easily

https://tamil.shethepeople.tv/health/self-examination-for-breast-cancer

https://tamil.shethepeople.tv/health/reasons-for-early-puberty

sugar Substitutes
Advertisment