Advertisment

பெண் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு! Early Puberty இன் காரணங்கள்

பெண் குழந்தைகள் வயதிற்கு முன்னரே பருவமடைதல் என்பது இப்பொழுது மிகவும் Common ஆன விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அது அவர்கள் உடல் நிலையை வருங்காலத்தில் எவ்வாறு பாதிக்கும் என்பது யாருக்கும் புரிவதில்லை. "Early Puberty" இன் காரணங்களை அறிவது முக்கியம்.

author-image
Pava S Mano
New Update
Periods

Image is used for representational purpose only

பெண் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு!

Advertisment

இந்த 21 ஆம் நூற்றாண்டில், பல வகையான உணவு பழக்கங்கள் வந்து கொண்டிருக்கிறது. Foodies என்ற பெயரில் நாம் செய்யும் அலப்பறைகள் இவ்வளவுதான் என்று இல்லை. அதற்கேற்ப குழந்தைகளையும் தயார் செய்து கொண்டிருக்கிறோம். அவர்களை கவரும் வகையிலேயே, அனைத்து தின்பண்டங்களும் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யப்பட்டுள்ளது. பெற்றோரும் குழந்தைகளின் ஆசையை நிறைவு செய்ய அவர்கள் கேட்கும் அனைத்து பண்டங்களையும் வாங்கி கொடுக்கிறார்கள். தெருக்களில் விற்கும் பாணி பூரி முதல் வெளிநாட்டு Food Chain Brand ஆன KFC வரை அனைத்தையும் இந்த காலக் குழந்தைகள் ஆசையாக சாப்பிடுகிறார்கள். இதன் விளைவு அவர்கள் வளர வளர தான் உடம்பில் தெரிகிறது. இதில் மிகவும் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகளே. 

உணவு பழக்கத்தால் மாறும் பருவமடைதல் வயது:

அந்த காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எனவே பிரத்தியேகமாக பல விளையாட்டுகள் இருந்தது. பல்லாங்குழி முதல் நொண்டி வரை அனைத்தும் ஒவ்வொரு பெண் உறுப்புகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். அந்த விளையாட்டுகள் இப்பொழுது செல்போனில் Ludo ஆக மாறி அவர்களின் Activeness ஐ குறைத்து, பல உடல் உபாதைகளை உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் உணவு பழக்கத்திலும் பல்வேறு மாற்றங்கள் வருவதால், பெண் குழந்தைகள் இப்பொழுது எட்டு வயதில் எல்லாம் பருவம் அடைந்து விடுகிறார்கள்.

Advertisment

Puberty

Early Puberty இன் காரணங்கள்:

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள், சிறு காயமோ சிறு வலியோ ஏற்பட்டாலோ அதனை சரி செய்ய உட்கொள்ளும் மருந்துகள், Junk Food, இவை அனைத்தும் முன்கூட்டியே பருவமடைதலை தூண்டும். இந்த நிலையில் சிறு வயதான குழந்தைகளுக்கு அவர்கள் உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களுக்கு தயார் செய்து கொள்வது கடினமாக இருக்கிறது. சில குழந்தைகளுக்கு Early Puberty கான காரணம் Genetics எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். Plastic ஆள் அடைக்கப்பட்ட உணவு பண்டங்களை உட்கொள்வதாலும், சிறு வயதிலேயே Beauty Products உபயோகிப்பதால், அதிலிருந்து வரும் ரசாயனம் கூட ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே குழந்தைகளின் உணவு மற்றும் அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களிலும், பெற்றோர்களுக்கு கவனம் தேவை. ஊட்டச்சத்து நிறைந்த உணவை அளிப்பது மிகவும் முக்கியமாகும். உடலில் பாலியல் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளுக்கு இப்பொழுது  Homeowrk மற்றும் பள்ளிக்கூடத்தில் ஏற்படும் சில கசப்பான அனுபவத்தினால் மன அழுத்தம் உண்டாக வாய்ப்புள்ளதாகவும், இதுவும் Early Puberty க்கு ஒரு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Advertisment

Early Puberty ஆல் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்:

மிக சிறிய வயதில் பருவமடையும் பெண்களுக்கு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இவர்கள் உயரம் குறைவானவர்களாக இருப்பார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதனால் பிற்காலத்தில் பல ஆரோக்கிய குறைபாடுகளை சந்திக்க நேரிடும். உடல் பருமன் கூடவும் வாய்ப்புள்ளது. மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கை கையாள மிகவும் சிரமமாக இருக்கும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். இவை அனைத்தையும் தடுக்க ஒரே வழி குழந்தைகளை சில மணி நேரம் உடற்பயிற்சியும் அல்லது யோகா போன்ற உடலுக்கு ஆரோக்கியமான விஷயங்களை செய்ய வைக்க வேண்டும். 

Activeness

Advertisment

Preventive measures:

Early Puberty ஐ தூண்டும் ஹார்மோன்களை தடுக்க முடியும். இவை உணவு முறையிலேயே கட்டுக்கு கொண்டு வர முடியும். உடலில் கொழுப்பு சேராமல் இருக்க, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் செல்போன்களை கொடுக்காமல் குழந்தைகளை ஓடி விளையாட விடுங்கள். அவர்களை ஏதோ ஒரு விளையாட்டு துறையில் சிறந்த நபராக விளங்க உதவியாக இருங்கள். துரித உணவுகளை வாங்கிக் கொடுக்காமல் வீட்டிலேயே ஊட்டச்சத்து நிறைந்த உணவினை கொடுங்கள். பெண் குழந்தைகளின் பெற்றோர் கவனம் செலுத்தினால் இதை தடுக்க முடியும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் உங்கள் கையில் தான் உள்ளது!

Suggested reading: 

Advertisment

https://tamil.shethepeople.tv/health/self-examination-for-breast-cancer

https://tamil.shethepeople.tv/health/pcod-can-be-cured-easily

https://tamil.shethepeople.tv/society/things-single-mothers-should-know

Advertisment

https://tamil.shethepeople.tv/interview/me-time-after-babies-is-a-boon-or-bane



early Puberty
Advertisment