இந்தியாவின் கலாச்சாரத்தை பொருத்தவரை, Single Mother ஆக இருந்தால், அவர்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் ஆயிரம். சமூகத்தில் தொடங்கி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வரை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கையாள திடமான மன தைரியம் வேண்டும். வளர்ந்து வரும் சமுதாயத்துடன் ஒற்றை தாயாக நின்று பிள்ளைகளை வளர்க்க கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றி அறிவோம்.
Single Mothers:
மாறிவரும் சமூகத்தில், பெண்கள் சமூகத்தின் அவதூறுகளையும் அவர்களின் இன்னல்கள் பற்றிய அவமான பேச்சையும் மீறி தங்கள் இலக்கை அடைய மிகவும் கடினமாக போராடி வருகின்றனர். விவாகரத்து, திருமணமாகாமல் குழந்தை, திருமணம் ஆகாத பெண்ணால் தத்தெடுப்பு, Queer Parents, Surrogate Mothers, IVF குழந்தை ஆகிய பல பரிணாமங்கள் Single Parentingக்கு வழிவகுக்கிறது. இத்தகைய தாய்மார்கள் சந்திக்கும் சவால்கள் எண்ணில் அடங்காதவை. சிலருக்கோ கசப்பான அனுபவங்களும் இருப்பதால், மனநல உதவியையும் நாடுகிறார்கள்.
உரிமைகள்:
சமூகத்தில் பெண்களுக்கென வகுக்கப்பட்டுள்ள வரைமுறை ஏராளம் உள்ளன. ஆனால் ஆண்களுக்கோ அப்படி எந்த வரைமுறையும் இல்லை. பெண்களுக்கு எப்பொழுதுமே பாகுபாடு காட்டும் இந்த சமூகத்தில், இந்திய சட்டங்கள் அவர்களுக்கான உரிமையை வழங்க முயற்சித்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது ஒற்றை தாய்களுக்கான சட்டம். கடந்த பத்து ஆண்டுகளில் பிறப்பு பதிவு அதிகாரிகளால் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் வாங்க முடியாமல் தவித்த ஒற்றை தாய்மார்களின் எண்ணிக்கை ஏராளம். இப்படி எந்த இன்னல்களையும் சந்திக்க தயாராக இருக்கும் Single Mother's கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் இதோ.
தனி உரிமைக்கான சட்டம்:
தந்தை இல்லாமல் தனிமையில் இருக்கும் தாய்மார்கள், குழந்தையின் தந்தை பெயரை வெளியிட விரும்பவில்லை என்றாலும் அவர்களுக்கான தனி உரிமை வழங்கப்படுகிறது. அந்த சட்டம் கூறுவது யாதெனில், "தனியுரிமைக்கான உரிமையானது 21 வது பிரிவின் மூலம் நாட்டின் குடிமக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையில் மறைமுகமாக உள்ளது. ஒரு குடிமகனுக்கு தனது வீடு, குடும்பம், திருமணம், இனப்பெருக்கம், தாய்மை, குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றின் தனி உடைமையை பாதுகாக்க உரிமை உண்டு". தந்தை தனது மனைவியையும் குழந்தையையும் மறுக்கும் பட்சத்தில் தாய் விரும்பினால் தந்தையின் பெயரை வெளியிடாமல் இருக்கலாம் என இந்து பராமரிப்பு மற்றும் பாதுகாவலர் சட்டம் 1956, Section 13 இல் கூறப்பட்டுள்ளது.
பாதுகாவலர் உரிமை:
குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை தாய் தான் இயற்கை காவலர். அதற்குப் பிறகு தந்தை தான் இயற்கை காவலர் ஆவார். ஆனால் தந்தையின் மரணத்திற்குப் பிறகு தாய்க்கு முழு பாதுகாவலர் உரிமை வழங்கப்படுகிறது. பாதுகாவலர் மற்றும் வார்டுகள் சட்டம் 1890 மற்றும் தி இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டம் 1956 (HMGA) ஆகியவை மிகவும் முக்கிய சட்டமாகும். HMGA Section 6 இல், திருமணமான தம்பதியினருக்கு தந்தை தான் இயற்கை காவலர் என்றும் அவருக்குப் பிறகு தாயின் உரிமை அங்கீகரிக்கப்படும் எனக் கூறுகிறது. திருமணமாகாமல் கருவுற்றால் தாய் தான் இயற்கை காவலராக மாறுகிறார்.
தாயின் குடும்ப பெயரை பயன்படுத்துவதற்கான உரிமை:
ஒவ்வொரு குழந்தைக்கும் தனது தாயின் குடும்ப பெயரை தனது குடும்ப பெயராக பயன்படுத்த உரிமை உண்டு. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தனது கணவரின் பெயரை வைக்காமல் அவரின் குடும்பப் பெயரை வைத்துக் கொள்ள உரிமை உண்டு.
ஒற்றைத் தாயாக இருந்தாலும், இரு பெற்றோரின் பொறுப்பையும் ஒருவரே நிறைவேற்ற வேண்டும். ஏற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சமூகத்தில், போக்குகளுக்கு ஏற்ப சட்டங்களும் மாறிக்கொண்டிருக்கிறது. ஒற்றை தாயாக இருந்தால் என்ன, நீங்களும் தந்தை தானே உங்கள் பிள்ளைகளுக்கு!
Suggested reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested reading: பெண்ணியம்(feminism) என்றால் என்ன? Abilashni(Kannammas Content)
Suggested reading: Working Women - க்கு கண்டிப்பாக உரிமை இருக்கிறது!
Suggested reading: விவாகரத்திற்கு(divorce) பிறகு காதல் என்பது எதைக் குறிக்கிறது