Advertisment

Working Women - க்கு கண்டிப்பாக உரிமை இருக்கிறது!

இந்த சமூகத்தில் ஒரு பெண் வேலைக்கு செல்வது என்பது மிகவும் போராட்டமான விஷயம். அவளுக்கு வேலை கிடைத்து, அதை குடும்பத்தினர் அனுமதித்து, அவள் வெளியே வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. அப்படி அலுவலகப் பணிக்கு செல்லும் பொழுது அவளுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும். அதை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வகுக்கப்பட்ட உரிமைகள் இதோ.

author-image
Pava S Mano
New Update
Working Women

Image is used for representational purpose only

எத்தனை மகளிர் தினம் கொண்டாடப்பட்டாலும், பணியிடங்களில் பெண்களுக்கான உரிமை என்பது இன்றும் கனவாகவே இருக்கிறது. World economic forum, 2022இல் வெளியிட்ட அறிக்கையில், global gender gap இல், 146 நாடுகளில் இந்தியா 135 வது இடத்தில் இருக்கிறது. இதில் உலகளாவிய பாலின இடைவெளி மீள்வதற்கு இன்னும் 132 ஆண்டுகள் ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலின சமத்துவமின்மை (Gender inequality) பல அரசியல் மற்றும் சமூக காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டாலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சென்று பணியிடும் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. அவர்களில் பல பெண்கள் மேல் பதவியிலும் அமர்ந்து இந்த உலகை ஆச்சரியப்பட வைக்கிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள், குறிப்பாக தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

Advertisment

1. சம ஊதியம் மற்றும் வாய்ப்புகளுக்கான உரிமை: (Right to equal remuneration and opportunities)  

சம ஊதிய சட்டம் 1976, சமமான ஊதியத்தை ஒரே மாதிரியான வேலைக்கு பாலின சமத்துவம் (Gender inequality) இல்லாமல் வழங்குகிறது. பெண் பணியாளர்களுக்கு எந்த வித பாகுபாடும் ஏற்படாதவாறு இந்த சட்டம்  செயலாற்றுகிறது. 
Rights

2. துன்புறுத்தல் இல்லாத பணி சூழலுக்கான உரிமை: (Right to harassment free work environment)

Advertisment

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013, பணியிடத்தில் பெண் பணியாளர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்க இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் நடந்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதும், பாலியல் துன்புறுத்தல் புகார்களை பெறுவதும், நேர கட்டுப்பாடு மற்றும் ரகசியமான முறையில் தீர்வு காணவும் அந்த நிறுவனத்தின் முதலாளி ஒரு குழுவினை அமைக்க இச்சட்டம் வழி வகுக்கிறது. இது சம்பந்தமான பயிற்சிகளை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என முதலாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

3. மகப்பேறு நன்மை மற்றும் வேலை வாய்ப்பு பாதுகாப்பு:(Maternity benefit and protection of Employment)  

மகப்பேறு நன்மை சட்டம் 1961, பெண் ஊழியர்களுக்கு 27 வாரம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கிறது. இது உலகின் சிறந்த மகப்பேறு சட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சட்டம் Surrogate Mothers களுக்கும், மூன்று மாதங்களுக்கும் குறைவான குழந்தையை தத்தெடுக்கும் பெண்களுக்கும், 12 வாரம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை அனுமதிக்கிறது. அது மட்டுமல்லாமல் கர்ப்பமாக இருப்பதால் வரும் உடல் உபாதைகள், Premature Birth, Miscarriage போன்றவற்றால் எடுக்கும் விடுப்புகளுக்கு ஊதிய தகுதியை இச்சட்டம் கொடுக்கிறது. பெண் பணியாளர்கள் மகப்பேறு காலத்திற்குப் பிறகு வேலைக்கு திரும்புவதற்கான சலுகைகள் மற்றும் வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில் பணியின் தன்மையை மாற்றி அமைக்கவும் உரிமை எந்த நிறுவனத்திற்கும் உண்டு என்று இச்சட்டம் தெரிவிக்கிறது. 

Pregnant woman

Advertisment

4. உடல்நலம் மற்றும் பாதுகாப்பு:(Health and Safety)

தொழிற்சாலைகள் சட்டம் 1948, பெண் ஊழியர்களுக்கு தேவையான சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நலன் புரி நடவடிக்கைகளை எடுக்க முதலாளிகளுக்கு உரிமை அளிக்கப்படுகிறது. தனியான கழிப்பறை, Dress Changing Room மற்றும் லாக்கர்கள் வழங்குதல் போன்ற உரிமைகளை உள்ளடக்கியுள்ளது இச்சட்டம். இரவு நேர பாதுகாப்பிற்கான அனைத்து நெறிமுறைகளும் இச்சட்டத்தில் அடங்கும்.

பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும். பல்வேறு சட்டங்களை கடைபிடிப்பது அதிக பணியாளர் திருப்தி மற்றும் அவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும். பெண்களின் பாதுகாப்பே ஒரு நிறுவனத்தின் வெற்றி!

Advertisment

 

Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)

Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி

Advertisment

Suggested Reading: இதான் எங்கள் வாழ்க்கை - தள்ளுவண்டி கடை அக்காக்களின் நேர்காணல்

Suggested Reading: ஆசைகளுக்கு வயது வரம்பு இல்லை

working women working mom workingwife womenrights
Advertisment