ஒவ்வொரு கடைகளில் ஒவ்வொரு உணவு சிறப்பாக இருக்கும். அதை தெரிந்து கொண்டு அந்த பகுதி மக்களோ அல்ல இதை அறிந்து கொண்டு வேற பகுதி மக்களும் வந்து அந்த மாலை நேரத்தில் கூட்டம் அலைமோதும்.
ஒரு வீட்டில் எப்படி அண்ணனோ அல்ல அக்காவோ உரிமை எடுத்து, என்ன வேண்டும், இன்னும் சிறிது போட்டுக்கொள், நன்றாக இருக்கும், உடம்புக்கு நல்லது என்று உரிமை எடுத்து பரிமாறுவதுண்டு. அதே உரிமை உடன் ஊரு பேரு தெரியாத நபர்களுக்கும் சாப்பாடு பரிமாறுவதே இவர்களது தனித்தன்மை. வீதியில் தள்ளுவண்டி கடை நடத்தும் பத்து பெண்களை நேர்காணல் மூலம் நடத்திய கணக்கெடுப்பின் படி எழுதிய பதிவு. இதில் இருக்கும் கருத்துக்கள் முழுக்க அவர்களது பதில்கள் மூலம் கட்டுரையாகி உள்ளது.
காலையில் 6 மணி முதல் இரவு ஏறக்குறைய 11 மணி வரை நடுவில் நிறைய இடைவேளை இருக்கும் இந்த வேலையில் அப்படி என்ன கடினம் இருக்கபோகிறது என்னும் நபர்களுக்கு இந்த கட்டுரை. எளிதாக இருக்கும் என்று எண்ணும் நபர்களே, அவர்களது மறுபக்கம் பார்த்ததால் தான் தெரியும் அந்த எளிதாக இருக்கும் வேலையில் என்ன மாதிரியான கஷ்டங்கள் அவர்கள் மேற்கொள்கிறார்கள் என இந்த கட்டுரையில் காணலாம்.
உங்களது வேலை அட்டவணை (schedule)
காலை சுமார் 4:30 முதல் 5 மணிக்குள் எழுத்தால் தான் அன்று வேலை எல்லாம் நினைத்த படி முடிக்க முடியும். நாங்கள் எழுந்து வீட்டில் பிள்ளைகளுக்கும், கணவருக்கும் காலை உணவு மற்றும் பிள்ளைகளுக்கு மத்திய உணவு கட்டிக்குடுக்கும் பொது, கணவர்கள் அன்று தேவை படும் காய்கறிகளை சந்தையில் இருந்து வாங்கி வருவார்.
பிள்ளைகளை பள்ளிக்கு தயார் படுத்திய படி, கடைக்கு வந்து காலை உணவுக்கு காய்கறிகளை அறிய தொடங்குவோம். காலை ஒரு 6 மணி முதல் மதியம் 11 மணி வரை எங்கள் கால்களில் ரங்க ராட்டினம் தான் இருக்கும். இந்த பக்கம் இட்லி வேக, ஒரு பக்கம் சாம்பார் இந்த பக்கம் சட்னி, என சுழற்றதுலையே இருப்போம்.
என்னதான் கூட்டமாக இருந்தாலும், யாரு என்ன சாப்பிட்டார்கள் அதற்கு எவ்வளவு பணம் என்று சரியாக சொல்வோம்.
அப்படியே 11 மணி போல் வீட்டுக்கு சென்று அங்கையே சமைத்து முடித்து கடைக்கு கொண்டு வருவோம். இங்கு வந்து அதை சுட வைத்து வரும் வாடிக்கையார்களுக்கு கொடுப்போம். பின்னர் ஒரு 5 அல்லது 6 மணிக்கு இரவுக்கு தேவையானதை செய்ய தொடங்குவோம். காலையில் என்ன ஓட்டம் ஓடினோமோ அதே ஓட்டம் இரவும் இருக்கும்.
இரவு கடையெல்லாம் சுத்தம் செய்து வீட்டுக்கு பொய் சாப்பிட்டு தூங்க 11:20 -12 மணி ஆகி விடும். சற்றென்று விடிந்து விடும். காலையில் அதே வழக்கமான வேலைகள் தொடரும்.
கடினமாக இல்லையா ?
"மொத்தமாகவே எங்கள் உலகம் இதற்குள் இருக்கிறதே என்று என்ன வேண்டாம். நாங்களும் திரைப்படத்திற்கு, கடற்கரை இது போன்ற இடங்களுக்கும் செல்வோம். ஆனால் இதெல்லாம் என்றாவது ஒரு நாள் தான். ஒரு நாள் கடையை மூடினால் எங்களது குடும்ப நிதியில் துண்டு விழுந்து விடும். அதனால் பெரும்பாலும் செல்ல மாட்டோம்"
"இருக்கிறது தான். என்ன செய்வது குடும்ப நலன் கருதி , வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்றால் இந்த மாதிரியான கஷ்டங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது"
"மழை, பந்த் போன்ற நாட்களில் மிகவும் கடினமாக இருக்கும். ஒரு நாள் பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்க முடியாமல், ஒரு நாள் வருமானம் இல்லாமல் போய்விட்டதே அதை எப்படி சரி செய்வது என்பதே எண்ணமாக இருக்கும்"
ஒரு சிலர் மனைவி, கணவர் இருவரும் சேர்ந்து கடை நடந்துகிறார்கள், ஒரு சிலரின் கணவர் இந்த வாட்ச்மேன் ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள். அதனால் மனைவி மற்றும் அவரது தம்பி சேர்த்து நடத்தி வருகிறார்கள்.
வருத்தத்தை தரக் கூடிய ஒன்று
எல்லாம் மன்னித்து விட முடியும். ஆனால், ஒரு சில ஆட்கள் செய்யும் ஏமாற்றுத்தனம் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கும். நாங்கள் பணம் மற்றும் கணக்கு விஷயங்களில் சரியாக இருப்போம், ஆனால் இந்த gpay, phonepe மூலம் வரும் பணத்தை தான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று கூறி ஒரு சிலர் அய்யயோ என்று சிரித்து கொண்டே பதறினார்கள். விசாரித்ததில் நிறைய நபர்கள் gpay செய்து விட்டோம், உங்களுக்கு நெட் சரியாக இல்லை போல சிறிது நேரம் கழித்து பாருங்கள், இல்லையென்றால் நான் இந்த பகுதி தான் நாளை தருகிறேன் என்று சாப்பிட்டு பணம் தராமல் சென்றதுண்டு. என்ன செய்வது சாப்பிட்டு போகட்டும் என்று விட்டுவிடுவோம்.
கணக்கெடுப்பின் வழி தெரிந்து கொண்டது
ஒரு நாளைக்கு என்னதான் 1000, 2000 சம்பாதித்தாலும், மாத கடைசியில் அவர்கள் கையில் இருப்பது என்னமோ 2000 தான். விற்கும் விலைவாசியில் எப்படி பார்த்தாலும் கடன் வாங்கி தான் அவர்களது காலத்தை கடக்க வேண்டிய சூழல். ஏமாற்றாமல் அவர்களுக்கு சேர வேண்டிய தொகை கொடுப்பதே நம்மால் அவர்களுக்கு செய்ய கூடிய உதவி. மற்றத்தை அந்த தாய்மார்களே பார்த்து கொள்வார்கள். இருக்கின்ற வரை மன தைரியத்தோடு செயல் படுவோம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
Suggested Reading: ஆட்டோ ஓட்டுநர் ராஜி அக்காவின் வாழ்க்கை பயணம்(Raji Akka)
Suggested Reading: ஆசைகளுக்கு வயது வரம்பு இல்லை
Suggested Reading: Arranged marriage செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
Suggested Reading: Toxic Relationship -ஆ! No சொல்லுங்க.. Guilt இல்லாமல்!