ஒரு பெண்ணும் பையனும், relationship ல இருக்கப்போ நிறைய சந்தோஷங்களும் இருக்கும் பிரச்சனைகளும் இருக்கும். சந்தோஷமா இருக்கப்போ வாழ்க்கையே அழகா தெரியும், அதே சண்டை வரப்போ ஏண்டா இந்த ரிலேஷன்ஷிப் உள்ள வந்தோம்னு இருக்கும். இந்த மாதிரி நடக்கிறது ரொம்ப காமனான விஷயம்தான்.
நம்மள சிலருக்கு ரிலேஷன்ஷிப் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனையா தான் இருக்கும். அதுக்கான காரணம் யாரோ ஒருத்தர் மேல தான் இருக்கும். நம்மளுக்கு அவங்கள பிடிக்கும்னு ஒரே காரணத்துக்காக மட்டுமே அவங்க செய்ற எல்லா விஷயத்தையும் டாலரேட் பண்ணிட்டு இருப்போம். அதுதான் Toxic Relationship stage-அ உருவாக்குது.
நம்ம இருக்கிறதே ஒரு டாக்ஸிக்கான ரிலேஷன்ஷிப் தான்னு தெரிஞ்சும் ஏன் அதை தொடர்ந்து செய்கிறோம்? ஏன் அதுல இருந்து வெளியில் வர பயப்படுறோம்? அப்படியே வந்தாலும் ஏன் Guilt ஆ feel பண்றோம்?அதுக்கான Reason அ பார்க்கலாம் வாங்க.
Self Value விற்கான முக்கியத்துவம்:
பார்த்தவுடனே லவ் வரப்போ, அவங்க காட்ற அதிகமான காதல், அளவில்லா அன்பு இதெல்லாம் பார்த்து நம்மளுக்கு தெரியாம அவங்க தான் நம்ம உலகம் என்று நினைக்கிறோம். இதைவிட Special Moments இருக்காது, இவர்களைத் தவிர யாரும் நம்மளை Special ஆ Treat பண்ண மாட்டார்கள் என்று நினைத்து நம்மளே ஒரு வட்டத்தை உருவாக்குகிறோம். அப்பொழுது அவர்கள் என்ன செய்தாலும் அதை பொறுத்துக் கொண்டு அவர்களை சார்ந்தே இருக்கிறபோது நமது "Self-Value" வை இழக்கிறோம். அதனைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் Toxicity ஐ நம்மிடம் காட்டும் பொழுது தான், Toxic Relationship ஆ மாறுகிறது. என்னதான் காதலர்களாக இருந்தாலும் கணவன் மனைவியாக இருந்தாலும், நம்ம "Self-Value" வை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். ஒருத்தர் இப்படித்தான் என்று Accept பண்ணிக்கொண்டு புரிந்து வாழ்கிறது வேறு, அவர்கள் செய்யும் தப்பை எல்லாம் Tolerate பண்ணிக்கொண்டு வாழ்கிறது வேறு.
மாற்றம் அவர்களின் சுய விருப்பம்:
Relationship இல் இருக்கும் பொழுது அவர்கள் நம்மிடம் கடிந்து நடக்கும் பொழுதும், மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்கும் பொழுதும், Ignore செய்யும்பொழுதும், அவர்கள் இப்படித்தான் என்று நம்மளை நாமே சமாதானம் செய்கிறோம். அவர்களைப் புரிந்து நடந்து கொள்ளும் நம்மளுக்கு நாம் எப்படி என்று புரிந்து நடக்க முடிவதில்லை. அவர்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், நம்மளும் அத்தகைய பிரச்சனைகளை சந்தித்து வந்திருக்கிறோம் என்பதை மறக்கிறோம். இரண்டு கையும் சேர்ந்தால்தான் ஓசை வரும், அவ்வாறே இரண்டு பேரும் Equal Importance கொடுத்தால்தான் Relationship அழகாக அமையும். இல்லை என்றால், Change is Our Choice.
உடனே Breakup பண்ணுங்க:
அழுகை, சண்டை, பொறாமை, பதட்டம், பயம் என பல வருடமாக ஒருவர் கூடவே இருந்த நமக்கு அதை விட்டு வர ஒரு தயக்கம் இருக்கும். ஏனென்றால் நாம் அதற்கு பழகி இருப்போம். அது ஒரு வருட உறவாக இருந்தாலும் சரி 25 வருட உறவாக இருந்தாலும் சரி. சந்தோஷமும் சுயமரியாதையும் இல்லாத உறவு, வாழ்க்கைக்கான அர்த்தத்தை இழக்கும். ஆதலால், உங்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழ, Toxic Relationship ல இருந்து Breakup பண்ணுங்க.
Self-respect, self value, self-esteem என இவை அனைத்தையும் சமமாக புரிந்து கொள்ளும் ஒருவராக நீங்களும் மாற வேண்டும், அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். Breakup எப்பயுமே ஒரு Negative விஷயம் கிடையாது. அது வாழ்க்கைக்கு தேவையான ஒரு Experience தான். சிலருக்கு Breakup செய்த பிறகு ஒரு வகையான நிம்மதி இருக்கும், இனி நாம் நம் வாழ்க்கையை வாழலாம் என்று தோணும். நாம் நினைப்பதை விட Better ஆ நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறது நம் கையில் தான் இருக்கிறது. Choice உம் நம்மளுடையது, Happiness உம் நம்மளுடையதுதான். அதனால் உங்களுக்கான Choice ஐ நீங்க தேர்ந்தெடுத்ததுக்காக பெருமைப்படுங்கள்!
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: குழந்தை பெற்ற பெண்ணிடம்(new mom) சொல்லக்கூடாத மூன்று விஷயங்கள்
Suggested Reading: மற்றவர்கள் செய்வதற்காக இந்த நான்கு விஷயங்களை செய்யாதீர்கள்
Suggested Reading: காதல் உறவின் நான்கு சிவப்பு கொடிகள் - Relationship counsellor