காதல் உறவின் நான்கு சிவப்பு கொடிகள் - Relationship counsellor

Relationship counsellor டாக்டர் மார்த்தா காதல் உறவில் நீங்கள் கவனிக்க வேண்டிய நான்கு சிவப்பு கொடிகளை பற்றிய விளக்கத்தை அளித்துள்ளார். அந்த நான்கு சிவப்பு கொடிகளை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
Jul 29, 2023 23:08 IST
red flag in relationship

Image is used for representational purpose only

காதல் உறவில் இருக்கும்பொழுது நமக்கு நிறைய குழப்பங்கள் ஏற்படக்கூடும். சிறுவயதில் இருந்து இது போன்ற விஷயங்களை யாரும் நம்மிடம் பேசி இருக்க மாட்டார்கள் என்பதால் அதை எப்படி கையாள்வது என்று நமக்கு தெரியாமல் போகிறது. மேலும், இன்று இருக்கும் காலகட்டத்தில் நிறைய பேர் நஞ்சு வாய்ந்த காதல் உறவுகளிலும் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர்.

Advertisment

ஒரு நபரை பிடித்ததால் தான் அவர்களுடன் காதல் உறவில் இருப்பதற்காக நாம் சம்மதிக்கிறோம். ஆனால், பலர் தெரியாமல் நஞ்சு வாய்ந்த காதல் உறவுகளில் மாட்டிக் கொள்கின்றனர். மருத்துவர் மார்த்தா என்பவர் காதல் உறவில் இருக்கக்கூடிய நான்கு சிவப்பு கொடிகளை பற்றி கூறிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. அவர்கள் சொல்வதை செய்கிறார்கள் என்பதை பாருங்கள்:

அவர்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் மார்த்தா கூறுகிறார். பெரும்பாலும் காதல் உறவுகளில் நாம் வார்த்தைகளை தான் நம்புவோம். ஆனால், அந்த வார்த்தைகளை மற்றும் அவர்கள் கூறும் விஷயங்களை அவர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். வார்த்தைகளை விட அவர்களின் செயல்கள் தான் உங்களுக்கு அவர்களைப் பற்றின முழு புரிதலை ஏற்படுத்தும். 

Advertisment

red flag

மேலும், மார்த்தா ஒரு காதல் உறவு தொடங்கும் பொழுது எல்லோரும் அவர்களின் நல்ல பக்கங்களை மட்டுமே வெளிப்படுத்துவர். ஆனால், நாட்கள் போக போக அவர்கள் காதல் உறவில் விருப்பமில்லாதது போல நடந்து கொண்டால் அதுவே ஒரு சிவப்பு கொடி தான் என்று கூறுகிறார்.

2. மற்றவர்களை எப்படி நடத்துகிறார்கள்:

Advertisment

எப்பொழுதும் ஒரு நபர் மற்றவர்களை எப்படி நடத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும். சில சமயம் இதுபோன்ற சிறிய விஷயங்களை நாம் கவனிக்காமல் விட்டு விடுவோம். ஆனால் இது அவர்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது.

3. அவர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள்:

அவர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை கவனிப்பது அவர்கள் வருங்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள உதவும். அவர்கள் உங்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கிறார்களா, உங்களை புரிந்து கொள்கிறார்களா, உங்கள் கனவுகளை ஆதரிக்கிறார்களா, உங்களை சமமாக பார்க்கிறார்களா போன்ற கேள்விகளை நீங்கள் உங்களிடமே கேட்டுக் கொள்ள வேண்டும். 

Advertisment

toxic red flag

உங்களை மதித்து உங்கள் விருப்பங்களையும் ஆதரிப்பவர் ஆக இருப்பது மிகவும் முக்கியமானது என்று மருத்துவர் மார்த்தா கூறுகிறார். அதேபோல் அவர்கள் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஆனால், அவர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கிறார்களா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இந்த இடத்தில் தான் நீங்களும் அவர்களை எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறீர்கள் என்பது வெளிப்படும்.

4. வன்முறை:

Advertisment

வன்முறை என்பது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. பல முறை உடல் ரீதியாக நடக்கும் வன்முறைகளை நம்மால் எளிதாக கண்டறிய முடியும். ஆனால், மனரீதியாக, உணர்ச்சிரீதியாகவும் நடக்கும் வன்முறைகளை நாம் கண்டுபிடிக்க தவறுகிறோம். அவர்கள் உங்களை பிளாக்மெயில் செய்யலாம், இதை செய் இல்லை என்றால் நான் இதை செய்து விடுவேன் என்று மிரட்டலாம். இது போன்ற விஷயங்கள் நடந்தால் அது காதல் உறவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிவப்பு கொடி என்று மருத்துவர் மார்த்தா கூறுகிறார்.

ஒரு உறவில் இருக்கும் பொழுது உங்களுக்கு நிம்மதி இல்லை என்றால் அந்த உறவில் இருப்பதற்கான அர்த்தம் என்ன. பலமுறை அவர்கள் உங்களை தாழ்த்தி பேசினால், உங்களை சமமாக மதிக்கவில்லை என்றால், அனைத்திற்கும் உங்களை குறை கூறினால் அந்த உறவிலிருந்து வெளிவருவது அவசியம் ஆகிறது.

verbal abuse

Advertisment

நாம் அனைவரும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருப்பதற்கு தகுதியானவர்கள். அதனால் ஒரு காதல் உறவில் இருக்கும் பொழுது இது போன்ற சிவப்பு கொடிகளை நீங்கள் பார்த்தால் அதை தொடர்வது எந்த விதத்திலும் உங்களுக்கு நன்மை அளிக்க போவதில்லை. ஒருவேளை அந்த உறவை நீங்கள் நீடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒரு couple counseling அல்லது marriage therapist இடம் சென்று கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார் டாக்டர் மார்த்தா.

ஒருவேளை உங்கள் துணை அவர்களின் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் இருந்தால், அதற்காக வருந்தாமல் இருந்தால், அவர்கள் சொல்வது தான் எப்பொழுதும் சரி போன்ற எண்ணங்களை கொண்டிருந்தால் அது நல்ல உறவுக்கான அறிகுறிகளாக தெரியவில்லை. ஒரு நஞ்சு வாய்ந்த உறவில் இருப்பதை உணர்ந்து நாம் வெளிவருவது அவசியமாகும். அப்பொழுதுதான் உங்களால் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.

 

Advertisment

Suggested Reading: இந்த மூன்று விஷயங்களுக்காக காதல் உறவை முடித்துக் கொள்ளாதீர்கள்

Suggested Reading: காதல் உறவில் உள்ள ஐந்து அபாயங்கள்

Suggested Reading: ஏன் உங்கள் காதல் உறவை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது?

Suggested Reading: Toxic relationshipஇல் இருந்து முழுமையாக வெளிவர செய்ய வேண்டிய 7 விஷயங்கள்

#red flags #relationship tips