ஏன் உங்கள் காதல் உறவை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது?

நம்மில் பல பேர் மற்றவர்களின் வாழ்க்கையோடு நமது வாழ்க்கையை ஒப்பிட்டு கொள்கிறோம். குறிப்பாக மற்ற காதலர்களின் வாழ்க்கையுடன் நமது காதல் உறவை ஒப்பிட்டுக் கொள்கிறோம். அவ்வாறு செய்யக் கூடாது என்பதற்கான சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
kadhalil sothapuvathu eppadi

Image is used for representational purpose only

இணையதளத்தின் வளர்ச்சியினாலும், சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியினாலும் இன்று நாம் பலருடைய வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் காதலர்கள் அல்லது திருமணமானவர்கள் பதிவிடும் couple வீடியோக்களுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், மக்கள் அவர்களின் காதல் உறவை சமூக வலைத்தளத்தில் பார்க்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் ஒப்பிட்டுக் கொள்ள வாய்ப்பு உள்ளதால், அவர்களின் காதல் உறவில் நிறைய பிரச்சனைகள் வரக்கூடும்.

Advertisment

ஏன் நாம் சமூக வலைத்தளங்களில் பார்க்கும் couple வீடியோக்களுடன் நமது காதல் வாழ்க்கையை ஒப்பிடக் கூடாது என்பதற்கான சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்:

சமூக வலைத்தளங்கள் பெரிதாக மக்களை என்டர்டைன்(entertain) செய்கிறது. அதனால் பெரும்பாலான கிரியேட்டர்ஸ் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதையும், மக்களை சந்தோஷப்படுத்த கூடிய விஷயங்களையும் பதிவிடுகின்றனர். அப்படித்தான் பெரும்பாலான couple vloggers அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல விஷயங்களை மட்டும் பதிவிடுகிறார்கள். இதனால் அவர்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது அர்த்தமில்லை. எல்லோரைப் போலவும் அவர்களுக்கும் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். பெரும்பாலும் அவர்கள் படும் கஷ்டத்தை யாரும் வீடியோவாக பதிவிட விரும்புவதில்லை.

Romeo Juliet

அவர்கள் காதலன் அல்லாத காதலிக்கு நிறைய விலை உயர்ந்த பொருட்களை வாங்கி தருகிறார்கள்:

Advertisment

அதேபோல் சமூக வலைத்தளங்களில் couple vloggers சாதித்த விஷயங்களையும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதையும் காண்பிக்கிறார்கள். உதாரணத்திற்கு அதிக பணம் உடைய பிறந்தநாள் பரிசு, விலை உயர்ந்த பொருள் வாங்குவது போன்ற விஷயங்களை காண்பிக்கிறார்கள். இதை பார்த்து நாமும் நமது காதல் உறவை இதுபோன்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு தாழ்மையாக நினைக்கிறோம் அல்லது நமது வாழ்க்கையில் மட்டும் நல்லது எதுவுமே நடப்பதில்லை என்று எண்ணுகிறோம். அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகளும், பொறுப்புகளும் உங்களின் வாழ்க்கை மற்றும் சூழ்நிலைகளில் இருந்து வேறுபடுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், உழைப்பு இல்லாமல் எதுவும் வராது என்பதை நீங்கள் உணர வேண்டும். இதுபோன்று நடைமுறை வாழ்க்கையில் உள்ள விஷயங்களை புரிந்து கொண்டாலே நாம் நிம்மதியாக வாழ முடியும்.

குடும்பத்தினர்களிடம் இருந்து அவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது:

இந்திய குடும்பங்களில் பலர் காதல் உறவுக்கு ஆதரவு அளிக்க தயங்குவதுண்டு. அவர்களின் குடும்பத்தில் நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், இந்த ஆதரவை பெறுவதற்காக அவர்கள் எவ்வளவு போராடினார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். சமூக வலைத்தளங்களில் நமது வாழ்க்கை பற்றி பதிவிடுவது எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்திய சமுதாயத்தில் குடும்பத்தினர்களிடமிருந்து இதுபோன்ற ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்குவது மிகவும் கடினமானது. எனவே, உங்கள் குடும்பத்தினர்களிடமிருந்து ஆதரவையும் நம்பிக்கையையும் எப்படி பெறலாம் என்பதை யோசிங்கள்.

Advertisment

love article

அவர்களின் காதல் உறவில் சண்டைகள் வரவே வராது:

எந்த காதல் உறவாக இருந்தாலும் அதில் சண்டைகள் வரத்தான் செய்யும். அதை நாம் எப்படி கடக்கிறோம் என்பது தான் பெரிய சவாலாக உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டைகளை பதிவிடவில்லை என்றாலும் நிஜ வாழ்க்கையில் நிச்சயமாக அவ்வப்போது சண்டைகள் வந்திருக்கும். ஆனால், அவர்கள் அதைக் கடந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம்.

Couple Vloggers இடம் இருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும்

வாழ்க்கையில் என்ன நடந்தாலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். ஒரு உறவில் இருக்கும் இருவரும் அவர்களின் கனவுகளை மதித்து அவர்கள் அதை அடைவதற்காக ஆதரவு அளிக்க வேண்டும். எப்பொழுதுமே ஒரு பெண் மட்டும் ஆணின் கனவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எண்ணாமல் அந்த ஆணும் அந்த பெண்ணின் கனவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நாம் பல ஆண்டுகள் ஒன்றாக வாழப் போகிறோம் என்றால் அதில் நிச்சயமாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் வரும். அதை கடந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

Suggested Reading: பெண்கள் செய்யக்கூடாத 6 விஷயங்கள் 

Suggested Reading: Toxic relationshipஇல் இருந்து முழுமையாக வெளிவர செய்ய வேண்டிய 7 விஷயங்கள்

Advertisment

Suggested Reading: MNC வேலையை விட்டு Thinai Organics ஆரம்பிந்த Saranya

Suggested Reading: குறைபாடு என்று மற்றவர்கள் கூறியதை தனது அடையாளமாக மாற்றினார் Ramya

காதல் relationship