Advertisment

இந்த மூன்று விஷயங்களுக்காக காதல் உறவை முடித்துக் கொள்ளாதீர்கள்

நீண்ட காலம் ஒரு காதல் உறவில் இருக்கும் பொழுது இந்த மூன்று விஷயங்கள் நடப்பது மிகவும் இயல்பான ஒன்றுதான். இதற்காக காதல் உறவை முடித்துக் கொள்ளாதீர்கள். அந்த மூன்று விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
reason not to breakup

Image is used for representational purpose only

இன்று இருக்கும் காலகட்டத்தில் காதல் உறவுவில் நிறைய பிரச்சனைகள் வருவதை நாம் பார்த்திருப்போம். சில சமயம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததால் நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். ஆனால், காதல் உறவில் இருக்கும் பொழுது இந்த மூன்று விஷயங்களும் நடப்பது மிகவும் இயல்பானது தான். இதற்காக நீங்கள் அந்த நபரை காதலிக்கவில்லை என்றும், அந்த காதல் உறவை முடித்துக் கொள்ளலாம் என்றும் நினைக்க வேண்டாம்.

Advertisment

என்ன பேசுவது என்று தெரியாமல் இருப்பது:

ஒரு காதல் உறவின் தொடக்கத்தில் இருக்கும் இருவருக்குமே நிறைய பேசுவதற்கு இருக்கும். சிறு வயதில் இருந்து அவர்களுக்கு நடந்த விஷயங்கள் மற்றும் பகிர்ந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அதேபோல் காதல் உறவில் ஆரம்பத்தில் இருவரும் மணி கணக்கில் பேசிக்கொண்டு அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். ஆனால், நாட்கள் போக போக இந்த பேச்சுக்கள் எல்லாம் குறைய தொடங்கும். 

relationship tips

Advertisment

நீங்கள் அனைத்தையும் பகிர்ந்து விட்டதால் உங்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் என்ன பகிர்வது என்று தெரியாமல் நீங்கள் பேசுவதும் குறையும். இந்த கட்டத்தை அடையும் போது பெரும்பாலும் காதலர்கள் நீ முன்பு போல் இல்லை, என்னுடன் பேசுவது இல்லை, முன்பு எல்லாம் நீ நிறைய பகிர்ந்து கொள்வாய் இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை என்று சொல்ல தொடங்குவார்கள். ஆனால், காதல் உறவில் இருக்கும் பொழுது இது போன்ற விஷயங்கள் இயல்பானது தான். எனவே, அதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளுங்கள். இது இயல்பான விஷயம்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது சில சமயம் உங்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாது. இதுவும் இயல்பாக ஒன்று தான்.

ஈடுபாட்டின் மாற்றங்கள்:

மனிதர்களின் உணர்ச்சிகள் அவ்வப்போது மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சில சமயம் நீங்கள் அந்த காதல் உறவுவில் நிறைய ஆர்வத்தை காட்டலாம். சில சமயம் இந்த ஆர்வம் குறைந்து போகலாம். மனிதர்களின் உணர்ச்சி மாறுபடுவதால் இது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது. மேலும் இன்று இருக்கும் காலகட்டத்தில் அனைவரும் மன அழுத்தம் நிறைந்த ஒரு வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால் உங்களின் வெளி சூழ்நிலைகளும் உங்களின் காதல் உறவை பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சில சமயம் உணர்ச்சிகள் இது போன்ற மாறுபடுவதால் உடனே எந்த முடிவும் எடுக்காதீர்கள். முக்கியமாக நீங்கள் மன அழுத்தம் நிறைந்திருக்கும் போது எந்த ஒரு முக்கியமான முடிவும் எடுக்காதீர்கள். 

Advertisment

relationship tips for couple

உணர்ச்சி மாற்றங்கள்:

சில சமயம் உங்கள் காதலன் அல்லது காதலியை நீங்கள் நிறைய காதலிப்பது போல் தோன்றும். அதை போல் சில நாட்கள் அவர்கள் மீது பெரிதாக காதல் இல்லாதது போல தோன்றவும் வாய்ப்புகள் உள்ளது. இதுவும் காதல் உறவில் இயல்பான ஒன்றுதான். இதற்காக உங்களுக்கு அவர்கள் மேல் காதல் இல்லை என்பது கிடையாது. மனிதர்களுக்கு இது போன்ற எண்ணங்கள் தோன்றுவதும் இயல்பான ஒன்றுதான். அதனால் முன்பு கூறியது போல நீங்கள் மனக்குழப்பத்தில் இருக்கும் பொழுது எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது.

Advertisment

வாழ்நாள் முழுவதும் நம்முடன் ஒருவர் வாழ போகிறார்கள் என்றால் நாம் பல விஷயங்களையும், உணர்ச்சிகளையும் கடந்து வர வேண்டி இருக்கும். இதுபோன்ற உணர்ச்சி மாற்றங்கள் எல்லா மனிதர்களுக்கும் ஏற்படக்கூடியது தான். நீண்ட காலம் ஒருவருடன் உறவில் இருக்கும் பொழுது இது போன்ற இயல்பான விஷயங்களுக்காக அந்த உறவை முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுக்காதீர்கள்.

 

Suggested Reading: காதல் உறவில் இருக்கும் சிவப்பு கொடிகள் - Psychologist Aisha

Advertisment

Suggested Reading: காதல் உறவில் உள்ள ஐந்து அபாயங்கள்

Suggested Reading: ஏன் உங்கள் காதல் உறவை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது?

Suggested Reading: Toxic relationshipஇல் இருந்து முழுமையாக வெளிவர செய்ய வேண்டிய 7 விஷயங்கள்

காதல் relationship tips
Advertisment