Advertisment

காதல் உறவில் இருக்கும் சிவப்பு கொடிகள் - Psychologist Aisha

சைக்காலஜிஸ்ட் ஆயிஷா தனது படிப்பை முடித்த பிறகு ஆன்லைனில் சைக்காலஜி பற்றிய வீடியோக்களை பதிவிட தொடங்கினார். அதற்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் SheThePeople தமிழுக்கு அளித்த நேர்காணல் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Aisha Psychologist

Images of Psychologist Aisha

SheThePeople Tamil தமிழுடன் நடந்த நேர்காணலில் சைக்காலஜிஸ்ட் ஆயிஷா(Psychologist Aisha) அவரை பற்றியும், பிற பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

ஒருவர் எந்த மாதிரியான விஷயங்களுக்காக சைக்காலஜிஸ்டை பார்க்க வேண்டும்?

பலர் பிரச்சனை இருந்தால் தான் சைக்காலஜிஸ்டை பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்தில் வேணாலும் நீங்கள் ஒரு சைக்காலஜிஸ்டை அணுகலாம். நீங்கள் எதிலாவது முன்னேற வேண்டும் என்று நினைத்தால் அல்லது உங்களை ஏதாவது பாதிக்கிறது என்றால் சைக்காலஜிஸ்டை அணுகலாம். உங்கள் வேலையில் முன்னேற வேண்டும் அல்லது நேரத்தை வீணாக்காமல் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும், காதல் உறவுகள் ஆரோக்கியமாக இல்லை அதை ஆரோக்கியமாக மாற்ற வேண்டும் அல்லது உங்கள் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் போன்ற எந்த விஷயமாக இருந்தாலும் நீங்கள் ஒரு சைக்காலஜிஸ்டை அணுகலாம். குறிப்பாக இந்த விஷயத்திற்காக தான் சைக்காலஜிஸ்டை பார்க்க வேண்டும் என்று எதுவும் இல்லை.

Psychologist Aisha

Advertisment

மிகவும் கண்டிப்பாக குழந்தையை வளர்ப்பது எவ்வளவு ஆபத்தானது?

நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அடித்து கண்டிப்பாக வளர்ப்பது தான் சரி என்று நினைக்கின்றனர். அதே மாதிரி பெரும்பாலான பெற்றோர்கள் எங்களை எல்லாம் அடித்ததானே வளர்த்தார்கள், நாங்கள் நன்றாக தான் உள்ளோம், எனவே அது தவறில்லை என்று கருதுகின்றனர். சொல்லப்போனால் இப்படி நடந்துக்கொள்வது அவர்களுக்கு சாதகமாகவே முடிகிறது. அவர்கள் அடித்து குழந்தை ஒழுங்காக வளரவில்லை என்றால் மிகவும் கண்டிப்பாக இருந்தது தான் தவறு என்று கூறுவர். அதுவே அடித்து குழந்தை நன்றாக வளர்ந்தால் அடித்ததால் தான் குழந்தை நன்றாக வளர்ந்தது என்று கூறுவர். 

என்னிடம் வரும் கிளையண்டுகளிடம்(client) நான் பெற்றோர்கள் உங்களை அடித்தது நியாயமான காரணத்திற்காகவா அல்லது அவர்கள் கோபத்தை உங்கள் மீது காண்பித்தார்களா என்று தான் கேட்பேன். ஒருவேளை அவர்கள் தவறு செய்து அதற்காக அடிவாங்கி இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருந்தது. ஆனால் பெற்றோர்கள் மற்ற கோபங்களை குழந்தைகள் மீது காட்டினால், எதற்காக அவர்கள் கோபப்படுகிறார்கள், நாம் என்ன தவறு செய்தோம் என்பதே அவர்களுக்கு தெரியாது. இப்படி ஒரு சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் மற்றவர்கள் கோவப்பட்டாலும், சோகமாக இருந்தாலும் பயப்பட தொடங்குவார்கள். 

Advertisment

குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்து கொண்டால் அவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் பல விஷயங்களை செய்ய தொடங்குவர். பெற்றவர்களுக்கு தெரிந்து செய்தால் ஏதாவது பிரச்சினை ஆனால் கூட அதில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியும். ஆனால் பெற்றோர்களுக்கு தெரியாமல் செய்யும் தவறுகளை மறைக்க குழந்தைகள் நீங்கள் என்ன வேணாலும் செய்யுங்கள், ஆனால் எனது பெற்றோர்களிடம் மட்டும் இதைப்பற்றி சொல்லாதீர்கள் என்று கூறுவர். தெரியாதவர்களிடம் நீங்கள் என்ன செய்தாலும் சரி ஆனால் எனது பெற்றோர்களிடம் மட்டும் சொல்லாதீர்கள் என்று கூறும்பொழுது அந்த சூழ்நிலை மோசமாக மாறிவிடும். எனவே, கண்டிப்பாக குழந்தையை வளர்ப்பது ஆபத்தானது.

Wonder Human Psychologist Aisha

காதல் உறவுகளில் இருக்கும் சிவப்பு கொடிகள் என்ன?

Advertisment

முதலில், உங்களை தனிமை படுத்தி வைக்கிறார்கள் என்றால் அதுவே ஒரு சிவப்பு கொடி தான். என்னைத் தவிர யாரும் நல்லவர்கள் இல்லை என்று கூறி எல்லாரிடமிருந்தும் உங்களை தனிமைப்படுத்தி வைத்தால் அது ஆபத்தானது.

இரண்டாவதாக, ஒரு பிரச்சனை ஏதாவது இருந்தால் முதலில் கத்தி, அடிப்பது போல விஷயங்களில் ஈடுபட்டு அதன் பிறகு நான் பாசத்தினால் தான் இதையெல்லாம் செய்தேன் என்று கூறுவர். அம்மு திரைப்படத்தில் கூட இது போன்ற விஷயங்களை எடுத்துக்காட்டியிருப்பார்கள். அதே மாதிரி அவர்கள் தொடர்ந்து இதை செய்வார்கள். அடித்து விட்டு பிறகு சமாதானப்படுத்துவதற்காக பரிசு கொடுப்பது, வெளியில் அழைத்து செல்வது போன்ற விஷயங்களில் ஈடுபடுவர். 

பிறகு ஒருவர் கோபப்படும்போது எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஏனென்றால், சாதாரணமாக இருக்கும் போது அனைவரும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால் கோபப்படும்போது உங்களை கெட்ட வார்த்தையில் திட்டினாலும், தகாத வார்த்தையில் பேசினாலும் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் உங்களுக்கு அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 

Advertisment

மூன்றாவதாக, நம்மையும், நம் வேலையையும் மதிக்கவில்லை என்றால் அதுவே ஒரு சிவப்பு கொடி தான். இந்த வேலை எல்லாம் இங்கு எடுத்துட்டு வராத,  திமிருல ஆடாத இந்த மாதிரியான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தினால் அந்த நபர் நமது வேலையையும், நம்மையும் மதிக்கவில்லை என்று வெளிப்படையாக தெரிகிறது. இந்த மாதிரி நேரத்தில் அந்த உறவை தொடருவது சரியான ஒன்றாக இருக்காது. 

சைக்காலஜிஸ்ட் ஆயிஷா(Psychologist Aisha) இது போன்று நிறைய விஷயங்களை Thuglife Thalaivi என்ற Podcastயில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறிய பயனுள்ள தகவல்களை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click here: Wonder Human Aisha | Psychologist | First Media Psychologist

Advertisment

Suggested Reading: Rafflesia Illustration மூலம் பிரியதர்ஷினி இணையத்தை கலக்கி வருகிறார்!

Suggested Reading: Black Sheepஇன் இவள் சீரிஸ் உருவான கதை

Suggested Reading: ஊட்டச்சத்து நிபுணர் தர்ஷினியின் பயணம்(dietition dharshini)

Advertisment

Suggested Reading: உடலுறவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் டாக்டர் நிவேதிதா

Psychologist Aisha tamil psychologist media psychologist
Advertisment