Advertisment

மற்றவர்கள் செய்வதற்காக இந்த நான்கு விஷயங்களை செய்யாதீர்கள்

நம்மில் பலர் நம் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம். ஆனால், இந்த நான்கு விஷயங்களை மற்றவர்கள் செய்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் செய்யாதீர்கள். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Romeo Juliet movie images

Image is used for representational purpose only

நம்மை யாராவது மற்றவர்களுடன் ஒப்பிட்டால் நமக்கு அது பிடிக்காது. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ நம்மை நாமே மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வோம். ஒப்பிட்டுக் கொள்வது மட்டுமில்லாமல் அவர்களிடம் இது இருக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கிறது ஆனால் நம்மிடம் எதுவும் இல்லை, நம் வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்கவில்லை போன்ற எதிர்மறையான எண்ணங்களையும் வளர்த்துக் கொள்வோம். இப்படி வாழும் நாம் எந்த ஒரு காரணத்திற்காகவும் மற்றவர்கள் செய்வதற்காக இந்த ஐந்து விஷயங்களை செய்யக்கூடாது.

Advertisment

1. திருமணம்:

நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நமது வீட்டிலேயே பல காரணங்களை கூறுவார்கள். அதில் பல காரணங்கள் நியாயம் இல்லாததாக தான் இருக்கும். உன் கூட படிச்சவங்க கல்யாணம் பண்ணிக்கிறாங்க, உன் நண்பர்கள் கல்யாணம் பண்ணிக்கிறாங்க,இந்த வயசுல கல்யாணம் ஆகலைன்னா அப்புறம் எப்பயும் நடக்காது, கல்யாணம் பண்ணாம என்ன பண்ண போற இது போன்ற பல கேள்விகளை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், இதெல்லாம் நாம் திருமணம் செய்து கொள்வதற்கு சரியான காரணம் அல்ல.

நமக்கான வாழ்க்கை துணையை நாம் தேர்ந்தெடுக்க போகிறோம். அவர்கள் வாழ்நாள் முழுவதும் நம்முடன் வாழ போகிறார்கள். அப்படி இருக்க இந்த முடிவுகளை நீங்கள் மற்றவர்களுக்காக எடுக்கக் கூடாது. உங்களுக்கு எப்பொழுது சரி என்று படுகிறதோ அப்பொழுது நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். உங்கள் வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் ஆகிறது என்பதற்காக நீங்களும் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுப்பது பிற்காலத்தில் கஷ்டத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் சரியான நபரை, உங்களுக்கு பிடித்த நபரை தேர்ந்தெடுத்த பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்.

Advertisment

2. குழந்தை பெற்றுக் கொள்வது:

திருமணமான உடனே அடுத்து அனைவரும் கேட்கும் கேள்வி குழந்தைகள் பற்றி தான். அதற்கும் வயதாகிறது, உன் வயதில் இருப்பவர்கள் எல்லாம் பெற்றோர்கள் ஆகிவிட்டார்கள் போன்ற கருத்துக்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், குழந்தை பெற்றுக் கொள்வதும், குழந்தையை வளர்ப்பதும் சாதாரணமான விஷயம் இல்லை. அது மிகப் பெரிய பொறுப்பாகும். அதனால் மற்றவர்களுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் நீங்கள் குழந்தையை வளர்க்க எப்பொழுது தயாராக இருக்கிறீர்களோ அப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

new family

Advertisment

3. பொருட்கள் வாங்குவது:

இப்பொழுது சமூக வலைதளத்தினால் நாம் நிறைய வீடியோக்களை பார்க்க நேரிடுகிறது. மக்கள் அவர்களிடம் இருக்கும் பொருட்களை, அவர்கள் செல்லும் இடங்களை வீடியோக்களாக எடுத்து பதிவிடுகின்றனர். அதேபோல் நமக்குத் தெரிந்தவர்கள் "நான் இதை வாங்கினேன், நான் இதை வைத்திருக்கிறேன்" என்று சொல்லும் பொழுது நமக்கும் அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். இப்படி மற்றவர்கள் வைத்திருக்கும் பொருட்களை பார்த்து நாமும் அதை வாங்க வேண்டும் என்று யோசிப்பது மிகவும் தவறாகும். அவர்களுக்கு அந்த பொருளின் தேவை இருப்பதால் அவர்கள் வாங்கி இருப்பார்கள். ஒரு பொருளை வாங்கும் பொழுது அந்த பொருள் உங்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பார்த்து வாங்குங்கள். மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நீங்களும் அதை வாங்க நினைத்தால் உங்களுக்கு தான் அது நஷ்டத்தில் முடியும்.

4. தொழில் தொடங்குவது:

Advertisment

தற்போது ஒரு தொழிலை தொடங்குவதற்கு நிறைய வசதிகள் வந்துள்ளது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும் ஒரு தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற முடியும். ஆனால், அதற்கு உங்களுக்கு தொழிலின் மீது ஒரு ஈடுபாடு வேண்டும் அல்லது அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமாவது வேண்டும். இப்படி இது எதுவும் இல்லாமல் உங்களுக்குத் தெரிந்த ஒரு நபர் அல்லது யாரோ ஒருவர் ஒரு தொழில் செய்து சம்பாதிப்பதை பார்த்த உடனே நானும் அந்த தொழிலை செய்ய போகிறேன் என்று ஒரு தொழிலை ஆரம்பிக்காதீர்கள்.

உங்களுக்கு தொழில் தொடங்க வேண்டும் என்றால் உங்களுக்கு எதன் மீது விருப்பம் உள்ளது என்பதை பாருங்கள். அதற்கேற்றவாறு உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள். அதுதான் சரியான வழியாகும். அப்பொழுதுதான் உங்களால் முன்னேற முடியும். மற்றவர்கள் ஒரு தொழிலை வைத்து முன்னேறுவதால் நீங்களும் அதே தொழிலை வைத்து அவர்களைப் போலவே முன்னேற வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஒருவரிடம் இருந்து நாம் இன்ஸ்பிரேஷன்(inspiration) வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் செய்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதை அப்படியே நீங்கள் செய்யாதீர்கள்.

 

Advertisment

Suggested Reading: நீங்கள் சுதந்திரமாக(independent) இருக்க வேண்டுமா? இதை படியுங்கள்

Suggested Reading: குழந்தை பெற்ற பெண்ணிடம்(new mom) சொல்லக்கூடாத மூன்று விஷயங்கள்

Suggested Reading: காதல் உறவின் நான்கு சிவப்பு கொடிகள் - Relationship counsellor

Suggested Reading: இந்த மூன்று விஷயங்களுக்காக காதல் உறவை முடித்துக் கொள்ளாதீர்கள்

 

stop comparing
Advertisment