திருமணம் என்பது சமூகத்தின் ஓர் முக்கிய அங்கமாகும். அது பலதரப்பட்ட மக்களை இணைய வைக்கும் ஒரு கருவியாகும். ஆனால், ஒரு ஆண், ஒரு பெண், என்று தனித்து பார்க்கும் பொழுது, இருவரும் சேர்ந்து ஒரு நீண்ட கால உறவில் நுழைய திருமணம் ஒரு பாலமாக அமைகிறது. காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு முன்னரே ஒருவரை ஒருவர் தெரிந்திருக்கும் நிலையில், திருமணம் முடிந்த உடனே அவர்கள் வாழ்க்கையை தொடங்கி விடுகிறார்கள். ஆனால், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் புரிதல் என்பது தாமதமாகவே நடக்கிறது. இந்த 21ஆம் நூற்றாண்டில், பெண்களும் சரி ஆண்களும் சரி தனித்தனியான வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் முதல்முறையாக சந்திக்கும் போது பேச வேண்டிய விஷயங்கள் மற்றும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள செய்ய வேண்டிய சில டிப்ஸை பார்க்கலாம்.
1.நேர்மையான பேச்சு:
முதல் சந்திப்பிலேயே இருவரும் அவர்களின் விருப்பம், வாழ்க்கையின் குறிக்கோள், இதுவரை வாழ்க்கை பற்றிய அவர்களின் புரிதல் ஆகியவற்றை பரிமாறிக் கொண்டால் வருங்காலத்தில் சிறந்த முடிவு எடுப்பதற்கான சூழல் உருவாகும். பெற்றோர்களின் விருப்பத்திற்காகவோ, அவர்களின் கட்டாயத்திற்காகவோ முடிவு எடுப்பதை தவிர்த்து இருவருக்கும் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயலுங்கள். அதற்கான சூழ்நிலையை உருவாக்கி இருவரும் நேரத்தை ஒதுக்குங்கள். வாழ்க்கையை சேர்ந்து தொடங்கும் முன்னே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள், அதற்கான மதிப்பை நிர்ணயங்கள்.
2. இருவருக்கும் இடையேயான Private Space:
ஒரு ஆரோக்கியமான உறவு வளர, தனிநபரின் நேரம், சமூக நேரம், தவிர அவர்களுக்கு என Private Space இல் என்ன செய்வீர்கள் என்று விவாதித்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமான விஷயமாகும். Arranged Marriage செய்பவர்களுக்கு பலவிதமான குழப்பங்கள் இருக்கும். நம் பெற்றோரின் வாழ்க்கை முறை வேறு நம் வாழ்க்கை முறை வேறு. நாம் வளர்க்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையும் வேறு. இதனைப் புரிந்து இருவரும் அவர்களுக்கென தனித்தனி நேரத்தை செலவிடுங்கள்.
3. நிதி சார்பு:
Financial Dependency என்பது அந்தக் கால பெண்களுக்கு என்னவென்று புரிவதற்கு முன்பே அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டது. இந்த காலத்திலோ ஆண்களுக்கு சமைக்க தெரிகிறது பெண்களுக்கு சம்பாதிக்க தெரிகிறது. பெண்களும் சரி ஆண்களும் சரி ஒருவரை ஒருவர் நிதி சார்ந்து வாழும் வாழ்க்கை முறை மாறிவிட்டது. நிதி சார்பு இல்லாத சமயத்தில் அவர்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை கொடுப்பது அவர்களின் மேல் இருக்கும் Emotional Dependency. ஆகவே, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் உணர்ந்து எப்படி வாழ வேண்டும் என்பதை பேசிக்கொள்ளுங்கள்.
நீங்கள் வாழ்க்கையை தொடங்கும் முன் உங்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, திருமணத்திற்கு பின் பெற்றோருடன் இருப்பதா? செலவுகளை எப்படி செய்வது? வேலை வெளியூரில் இருந்தால் அங்கு செல்ல சம்மதமா? குழந்தை பற்றிய யோசனை என அனைத்தையும் வெளிப்படையாக பேசி விடுங்கள். நிம்மதியான வாழ்க்கைக்கு உங்கள் பேச்சுத் திறனே அடிப்படை. வெளிப்படைப்பேச்சு, வெண்மையான வாழ்விற்கு வித்திடும்!
Suggested Reading: உங்கள் வாழ்க்கை துணையை கவனமாக தேர்ந்தெடுங்கள் - Shrutika Arjun
Suggested Reading: Boundaries மற்றும் பாலியல் கல்வி பற்றி பெற்றோர்களின் கருத்து
Suggested Reading: Toxic Relationship -ஆ! No சொல்லுங்க.. Guilt இல்லாமல்!
Suggested Reading: பெண்கள் பெண்களை ஆதரிப்பதால் ஏற்படும் நன்மைகள்