Boundaries மற்றும் பாலியல் கல்வி பற்றி பெற்றோர்களின் கருத்து

Good touch, bad touch, boundaries மற்றும் பாலியல் கல்வி பற்றி குழந்தை பெற்ற தாய்மார்களும், பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது இந்த செய்தி தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
Aug 12, 2023 23:39 IST
boundaries

Image is used for representational purpose only

இந்த காலத்தில் குழந்தைகளுக்கு good touch, bad touch, boundaries மற்றும் பாலியல் கல்வி கற்றுத் தருவது அவசியமாக இருக்கும் நிலையில் நாங்கள் பெண்களிடமும், குழந்தை பெற்ற தாய்மார்களிடமும் இதைப் பற்றிய அவர்களின் கருத்துக்களை பகிரும்படி கேட்டுக் கொண்டோம். அவர்கள் கூறிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

"Good touch, bad touch பற்றி குழந்தைகளுக்கு சொல்லித் தருவது பெற்றோர்களின் கடமையாகும். இந்த காலத்து பிள்ளைகள் மிகவும் matured ஆக இருக்கின்றனர். பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களுக்கு கைபேசியை கொடுத்து விடுகின்றனர். அதில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அதேபோல் அவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு சென்றாலும், பள்ளிகளுக்கு சென்றாலும் மற்றவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று நமக்கு தெரியாது. அதனால், good touch பற்றியும் பாலியல் கல்வி பற்றியும் குழந்தைகளுக்கு கற்று தருவது பெற்றோர்களின் கடமையாகும்"

"என்னுடைய கருத்தின்படி பாலியல் கல்வி பற்றி குழந்தைகளுக்கு சொல்லித் தருவது அவசியம். ஆனால், அதை சரியான தகவல்களை அவர்களுக்கு வழங்கி சரியான விஷயங்களை மட்டும் கவனமாக சொல்லித் தர வேண்டும். அப்பொழுது தான் அவர்களுக்கு தெளிவான புரிதலும் இருக்கும் அதை போல் அவர்களின் குழந்தை தன்மையும் மாறாமல் இருக்கும்"

"நம் பெற்றோர்கள் இதைப் பற்றி எல்லாம் நமக்கு சொல்லித் தரவில்லை ஏனென்றால் அவர்களுக்கு இதைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லை. இதனால் நாம் குழந்தையாக இருக்கும் பருவத்தில் சிலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நம் குழந்தைகளை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு good touch, bad touch மற்றும் boundaries பற்றி சொல்லி தர வேண்டும்"

Advertisment

sex education

"இன்று குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமைகள் பற்றிய பல செய்திகளை நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம். நம் குழந்தைக்கு அது போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்க நம்மால் முடிந்த வரை அவர்களுக்கு good touch, bad touch பற்றி சொல்லி தர வேண்டும். அது மட்டும் இல்லாமல் என்ன நடந்தாலும் பெற்றோர்களிடம் அவர்கள் வந்து செல்லும்படி அவர்களுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும். மிகவும் கண்டிப்பாக குழந்தையை வளர்த்தால் அவர்கள் இது போன்ற விஷயங்களை பெற்றோர்களிடம் சொல்வதற்கு தயங்குவார்கள். அதனால் பெற்றோர்களும் முடிந்த அளவிற்கு குழந்தைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்"

தற்போது சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்ற நிறைய கருத்துக்கள் பரவி வருகிறது. இருப்பினும் ஒரு குழந்தைக்கு இருக்கும் புரிதல் மற்றொரு குழந்தைக்கு இருக்குமா என்பது தெரிய வில்லை. அதனால் உங்கள் குழந்தைகளுக்கு இதை எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லித் தருவது பெற்றோர்களின் கடமையாகும். 

Advertisment

Good touch, bad touch, boundaries மற்றும் பாலியல் கல்வி போன்ற விஷயங்களைப் பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்வது பலவிதங்களில் அவர்களுக்கு நன்மை அளிக்கும். ஆனால், அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி எளிமையாக சொல்லித் தர வேண்டும். அதேபோல் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதற்கு முன்பு பெற்றோர்களுக்கு இதைப் பற்றின தெளிவான புரிதலும் வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு அவர்கள் இதைப் பற்றி தெளிவாக சொல்லித் தர முடியும். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான தகவல்களை அவர்களின் வயதிற்கு ஏற்ப சொல்லித்தர வேண்டும் அப்போதுதான் அவர்களின் குழந்தை தனமும் போகாமல் இருக்கும்.



Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)

Suggested Reading: பெண்கள் பெண்களை ஆதரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Suggested Reading: நீங்கள் சுதந்திரமாக(independent) இருக்க வேண்டுமா? இதை படியுங்கள்

Suggested Reading: இந்த மூன்று விஷயங்களுக்காக காதல் உறவை முடித்துக் கொள்ளாதீர்கள்

#good touch #bad touch #sex education #boundaries