Advertisment

பெண்கள் பெண்களை ஆதரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

பெண்கள் மற்ற பெண்களை ஆதரிக்காமல் இருப்பதனால் இந்த சமூகத்தில் நிறைய எதிர்மறையான விஷயங்கள் நடக்கிறது. பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
sweet karam coffee

Image is used for representational purpose only

"பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி" இதை நாம் பலமுறை கேட்டிருப்போம். நம் சமூகத்தில் பெண்கள் பெண்களை ஆதரிப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், இப்படி இருப்பதால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்கள் பெண்களை ஆதரிப்பது எவ்வளவு முக்கியம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

அனைத்து பெண்களும் ஒரே கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்:

பெண்ணாக பிறந்தால் இந்த சமூகம் அவர்களுக்கு நிறைய விதிமுறைகளை வைத்திருக்கிறது. ஆண்களுக்கும் இந்த சமூகத்தில் கஷ்டங்கள் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாக உடல் மற்றும் மன ரீதியான கஷ்டங்கள் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு மாதவிடாய், குழந்தை பெறுவது, மெனோபாஸ்(menopause) போன்ற பெண்களின் உடலில் நடக்கும் விஷயங்களால் அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்படுகின்றனர். 

அது மட்டும் இல்லாமல் இந்த சமூகத்தில் பெண்களுக்கு நிறைய தடைகள் உள்ளது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கஷ்டங்களை அனைத்து பெண்களுமே அனுபவிக்கின்றனர்.
இப்படி இருக்க பெண்களே பெண்களை ஆதரிக்கவில்லை என்றால் நாம் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இன்னும் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். அம்மாவாக, மகளாக, சகோதரியாக, தோழியாக, மாமியாராக பெண்கள் சக பெண்களை மதித்து அவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களை ஆதரிக்க வேண்டும்.

Advertisment

sweet karam coffee

வீட்டில் ஆதரவு:

பலர் வீட்டில் தந்தையும், சகோதரர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்பே முதலில் அம்மா தான் மகள்களுக்கு ஆதரவளிக்காமல் எதிர்ப்பு தெரிவிப்பாராக இருப்பார். ஏனென்றால், இந்த சமூகத்தில் பெண்களே பெண்களுக்கு ஆதரவு அளிக்க முடியாத அளவிற்கு ஆணாதிக்கம் பெண்களிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisment

திருமணத்திற்கு முன்பு அம்மா மகளை ஆதரிக்காமல் இருப்பது, திருமணத்திற்கு பிறகு மாமியார் மருமகளை கொடுமை செய்வது போன்றவை இந்த சமூகத்தில் ஒரு வழக்கமாகவே உள்ளது. இப்பொழுது ஒரு அளவிற்கு இந்த நிலைமை மாறி வருகிறது என்றாலும் பெரும்பாலான வீடுகளில் இது போன்ற கொடுமைகள் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தாலே ஆண்களால் பெண்களுக்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்க முடியாது. இப்படி பெண்களுக்கு பெண்களே எதிரியாக இருப்பதனால் தான் ஆணாதிக்கம் வீட்டிலும் தலைதூக்கி நிற்கிறது.

sweet karam coffee

வேலை இடங்களில் ஆதரவு:

Advertisment

வேலை இடங்களிலும் பெண்களுக்குள் இதுபோன்ற பாகுபாடுகளும், தவறான புரிதல்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் பெண்கள் பெண்களை அவர்களின் எதிரியாக பார்க்காமல் ஊக்குவிக்கும் சக மனிதர்களாக இருக்க வேண்டும். பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலே வேலை செய்யும் இடங்களிலும் மேலும் அவர்கள் உயர முடியும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பாகவும் உணர முடியும்.

பெண்களே பெண்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் அளவிற்கு ஆணாதிக்கம் நம் சமூகத்தில் நிறைந்துள்ளது. இன்று நம் பல விதங்களில், பல தடைகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றும் இந்த சமூகத்தில் நிறைய பாகுபாடுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக பெண்கள் பெண்களை ஆதரிக்காமல் இருப்பதை கூறலாம். 

நம் சமூகத்தில் பெண்கள் பெண்களை ஆதரித்தால் நல்ல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். ஒரு பெண் முன்னேறும் பொழுது அவளை சுற்றி உள்ள மற்ற பெண்களையும் அவள் மேம்படுத்த வேண்டும் என்பதுதான் பெண்ணியத்துடைய முக்கிய அங்கமாகும். எனவே, சொந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும் பெண்கள் ஒருவரை ஒருவர் ஆதரித்துக் கொள்வது அவர்களுக்கு பல விதங்களில் நன்மையை அளிக்கும். 

Advertisment

 

Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி

Suggested Reading: குழந்தை பெற்ற பெண்ணிடம்(new mom) சொல்லக்கூடாத மூன்று விஷயங்கள்

Advertisment

Suggested Reading: மற்றவர்கள் செய்வதற்காக இந்த நான்கு விஷயங்களை செய்யாதீர்கள்

Suggested Reading: காதல் உறவின் நான்கு சிவப்பு கொடிகள் - Relationship counsellor



women supporting women
Advertisment