Advertisment

உங்கள் வாழ்க்கை துணையை கவனமாக தேர்ந்தெடுங்கள் - Shrutika Arjun

உங்களின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது இந்த விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொண்டு தேர்ந்தெடுங்கள். அந்த விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Shrutika Arjun

Image is used for representational purpose only

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற IWF Awards 2023இல் ஸ்ருதிகா அர்ஜுன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசிய போது "இங்குள்ள அனைத்து பெண்களுக்கும் இதை நாம் சொல்கிறேன். உங்களின் வாழ்க்கை துணையை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள். அவரால் உங்களை மேம்படுத்தவும் முடியும், உடைக்கவும் முடியும். வாழ்க்கை துணைக்கு இந்த சக்தி உள்ளது. அதனால் தயவு செய்து உங்கள் கணவரை தேர்ந்தெடுக்கும் பொழுது புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள். இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் பெண்கள் நினைத்தால் அவர்களால் நிறைய சாதிக்க முடியும். ஆனால், வீட்டிற்கு செல்லும் பொழுது நம்மை ஆதரிப்பவர் நமக்காக உன்னால பண்ண முடியும் நீ பண்ணு அப்படின்னு சொன்னா நம்ப இன்னும் பத்து மடங்கு செய்வோம். அந்த மாதிரி ஒருவர் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்" என்று கூறினார்.

Advertisment

நாம் நமது வாழ்க்கை துணையை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நம் வாழ்க்கை துணை நம்மை மரியாதை உடன் நடத்த வேண்டும், கனவுகளை ஆதரிக்க வேண்டும், சமமாக நடத்த வேண்டும், அதேபோல் நம்மை புரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் நாம் அவர்களிடம் இருந்து மட்டும் எதிர்பார்க்கக் கூடாது. நாமும் அவர்களை ஆதரித்து புரிந்து கொண்டு சமமாக மரியாதை உடன் நடத்த வேண்டும். இப்படி ஒரு உறவில் இருக்க போகும் இருவரும் இதை கடைப்பிடித்தாலே பெரும்பாலும் எந்த பிரச்சனைகளும் வராது.

எல்லோருக்கும் ஏதாவது ஒரு கனவு இருக்கும். அந்த கனவு அல்லது ஆசையை நோக்கி நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு சில நாட்கள் நமக்கு இன்னும் அதிகமான ஆதரவு தேவைப்படும். ஸ்ருதிகா கூறியது போல நாம் வீட்டிற்கு திரும்பும் பொழுது நம்மை ஆதரிக்கும் ஒரு நபர் இருந்தால் இன்னும் பல மடங்கு நம்மால் உழைக்க முடியும். எனவே, உங்களை புரிந்து கொண்டு ஆதரிப்பவர்களை உங்கள் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுங்கள்.

nayanthara

Advertisment

இதே போல் நயன்தாராவும் அவரின் கனெக்ட் படத்திற்காக பேட்டி அளித்த போது "திருமணம் ஒரு இடைவெளி அல்ல. திருமணத்திற்கு பிறகு நம்மை ஆதரிக்க நமக்காக ஒருவர் இருக்கிறார் என்பதால் நாம் இன்னும் கடினமாக உழைத்து நிறைய சாதிக்க வேண்டும் என்று தான் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

சாதாரணமாக பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதுவும் திருமணமான பிறகு அவை பல விதங்களில் அதிகரிக்கிறது. திருமணமான பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டும், கணவனையும், குழந்தையையும் அவளது உலகமாக நினைத்து வாழ வேண்டும், குடும்பத்திற்காக நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும் போன்ற பல தடைகளை பெண்களுக்காக இந்த சமூகம் வைத்திருக்கிறது. 

தற்பொழுது இந்த நிலையை உடைத்து பல பெண்கள் அவர்களின் கனவுகளை நோக்கி செல்கின்றனர். திருமணமான பெண்களும் தற்பொழுது நிறைய விதங்களில் அவர்களின் திறமைகளை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் கணவரை உங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டால் உங்களால் உங்களின் பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் மிக சுலபமாக சமாளித்து தடைகளை உடைத்து உங்களின் கனவுகளை நோக்கி செல்ல முடியும். 

Advertisment

அதனால், திருமணத்திற்கு முன்பு அல்லது காதல் உறவுக்கு சம்மதம் சொல்வதற்கு முன்பு உங்களின் கனவுகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்கள் அதற்கு ஆதரிப்பவர்களாக இருந்தால் மட்டும் அவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். இதை மட்டும் நாம் ஒழுங்காக செய்துவிட்டால் பிறகு எந்த தடை வந்தாலும் நமக்காக ஒருவர் இருக்கிறார் என்ற ஆதரவுடன் நம்மால் உழைத்து முன்னேற முடியும்.





Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)

Suggested Reading: பெண்கள் பெண்களை ஆதரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Suggested Reading: நீங்கள் சுதந்திரமாக(independent) இருக்க வேண்டுமா? இதை படியுங்கள்

Suggested Reading: இந்த மூன்று விஷயங்களுக்காக காதல் உறவை முடித்துக் கொள்ளாதீர்கள்

marriage tips Shrutika Arjun
Advertisment