Advertisment

ஆசைகளுக்கு வயது வரம்பு இல்லை

40 வயசுக்கு மேல் ஒரு பெண் தன்னுடைய ஆசைக்காக ஓடினால் இந்த உலகம் அவளுக்கு சொல்லும் ஒரே வாக்கியம் "இந்த வயசுல உனக்கு எதுக்கு?" என்று தான். ஏன்? ஒரு பெண் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற ஏதும் கால வரைமுறை இருக்கிறதா என்ன?

author-image
Nandhini
New Update
sridevi

Actress Sridevi from English Vinglish movie

35 முதல் 40 வயது இருக்கும் பெண்களை நேர்காணல் மூலம் நடத்திய கணக்கெடுப்பின் படி எழுதிய பதிவு. இதில் இருக்கும் கருத்துக்கள் முழுக்க அவர்களது பதில்கள் மூலம் கட்டுரையாகி உள்ளது. 

Advertisment

ஏன்  முகம் மாறுகிறது?

ஒரு பெண் 40 வயதைத் தொட்டுவிட்டால் அவளது ஆசை, கனவுகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கி எரிய வேண்டும். கணவர், குழந்தைகள், மாமியார், மாமனார் என அவளது உலகம் இந்த சுற்றத்திலேயே இருக்க வேண்டும் என்று இந்த சமுதாயம் திட்டமிடுகிறது. முதலில் இப்படி ஒன்று நிர்ணயிக்க யார் உரிமை கொடுத்தார்கள்?

40 வயசு ஆன பிறகு ஒரு பெண் அவளுக்கு பிடித்த விஷயம் அல்லது கனவை நிறைவேற்ற வேண்டும், என்று ஆசைப்பட்டு பிறரிடம் சொன்னால், அவர்களது முகம் உடனே மாறிவிடும். ஏன்? அவளுக்கு என்ன வேண்டும் என்று அவள் விரும்பும் உரிமை கூட அவளுக்கு இல்லையா என்ன?

Advertisment

ஒரு பெண் அவளுக்கு பிடித்த காரியங்களை செய்ய உரிமை அவளுக்கு எப்போதும் உண்டு. அதுக்கு வயது வரம்பு கிடையாது.

jyothika 36 vayadhinile

என்ன என்ன ஆசைகள் இருக்கிறது?

Advertisment

பெரும்பாலோர் கூறியது வேலைக்கு செல்ல வேண்டும், வெளியூருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று. அந்த ஆசைகள் நிறைவேறாத காரணமாக அவர்கள் கூறியது, கல்யாணம் ஆகி ஓர் ஆண்டில் குழந்தை, பின்னர் அவர்களை வளர்க்க, அவர்களை பார்த்துக்கொண்டதில் 40 - 45 வயசு ஆகி விடுகிறது. பின்னர் அவர்களுக்கு கல்யாணம், அவர்களது குழந்தைகளைப் பார்த்து கொள்ளும் பொறுப்பு வந்து விடுகின்றன. இதற்கு நடுவில் ஏதாவது வாய்ப்புக்கிடைத்தால், அந்த சமயம் கணவருக்கு வேலை  வந்துவிடும் அல்லது  எங்களுக்கே அந்த சமயத்தில் செல்லும் மனநிலை சரியாக இருக்காது, ஏதோ மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படியே பல சந்தர்ப்பங்கள் போய்விட்டன .

உங்களுக்கு  எண்ணிக்காவது கொஞ்சம் காலம் பின்னர் கல்யாணம் செய்து கொண்டு இருந்திருக்கலாமோ என்று தோணியதுண்டா??

பல முறை சிந்தித்ததுண்டு. தப்பான முறையில் அல்ல. இந்த வேலைக்கு செல்லும் பெண்களைப் பார்க்கும் பொழுது அல்லது சுற்றுலா செல்லும் பெண்களை பார்க்கும் பொழுது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். அவர்களை போல் நம்மால் இருக்க முடியவில்லை என்று. சந்தோசமாக, அவர்களுக்கு பிடித்த மாதிரி இந்த உலகத்தில் இருக்கிறார்கள், நாம் தான் இந்த சிறிய கூட்டத்தில், இந்த வழக்கமான வேலைகளை செய்கின்றோம் என்று அவர்கள் கூறும் பொழுது அவர்களது பேச்சில் ஒரு ஏக்கம் இருந்தது.

Advertisment

மேலும், அவர்கள் குறிப்பிட்டது, "கண்டிப்பாக எங்களது வாழ்வு சூழலும் அவர்களது சூழலும் ஒன்றாக இருக்காது என்று நாங்களே எங்களை சமாதானம் செய்துகொள்வோம்"

 கணவரிடம் உங்கள் ஆசையை பற்றி பகிரிந்தது உண்டா?

நாங்கள் மனம் விட்டு பேசியதுண்டு. அவர்களும் போவோம், என்று கூறுவார்கள். ஆனால், வேலை காரணமாக அது தள்ளி போய்க்கொண்டே இருக்கும். ஒரு நிலையில் நாங்கள் இருவரும் இதை பற்றி பேசினோம் என்பதையே மறந்துவிடுவோம்.

Advertisment

jyothika 36 vayadhinile

இப்போது உடனே ஏதாவது ஆசை இருக்கிறதா?

பத்து பேரில் நான்கு பெண்கள், எந்த யோசனையும் இல்லாமல், நாளை என்ன சமைக்க வேண்டும், இத்தனை மணிக்கு முன் பிள்ளைகளுக்கு சமைத்துக்கொடுக்க வேண்டும், என்றெல்லாம் இல்லாமல், நிம்மதியாக யாராவது கால்கள் கைகளை அமிக்கி விட்டு நாங்கள் தூங்க வேண்டும் என்றார்கள். மூன்று பெண்கள், ஒரு நாள் எங்கள் வேலைகளை யாரேனும் எங்களுக்கு செய்ய வேண்டும். நாங்கள் ஊரைச் சுற்றவோ, வெளியேவோ செல்லமாட்டோம். வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே அந்த நாளை கழிக்க வேண்டும் என்றார்கள். மீதம் இருக்கும் பெண்கள், எங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசை. இந்த வீட்டில் உள்ள நான்கு சுவர்களை பார்த்தவண்ணம் எங்களுக்கு மந்தமாகிவிட்டன என்றார்கள்.

Advertisment

கணக்கெடுப்பின் வழி நாங்கள் புரிந்து கொண்டது

குடும்பதிற்காக தங்களது அடிப்படை தேவையான "வேலைக்கு செல்லவேண்டும்" என்பதை மறந்து, அந்த குடும்பதிற்காக ஓடாக உழைத்து, அந்த உழைப்பின் சோர்வைக் கலைக்க ஓய்வெடுக்க வேண்டும் என்பது அவரது தற்பொழுதிய "தேவையாக" மாற்றப்பட்டது.

வேலைக்கு  போக வேண்டும். எனக்காக வருவாயை சேமிக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசையாக இருந்தது. ஆனால்  கால போக்கில் அது மாறியது யாருடைய தவறு? பெண்களின் கவணக்குறைப்பாடா? அல்லது தங்களுக்கு தாங்களே போட்டுக்கொள்ளும் வரைமுறையா?

Advertisment

இருப்பினும், அந்த ஆசைகளை இப்போதும் செயல் படுத்த முடியும். இந்த வீடு, அவர்கள் இல்லாமலும் செயல்படும் என்பதை உணர்ந்து அவ்வப்போது அவர்கள் தங்களுக்கான நேரத்தை ஒதிக்கியோ, அல்லது வேலைகளை முடித்துவிட்டோ தங்கள் ஆசையை நிறைவேற்றினால் அவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியான அமைதியை அடைவார்கள். ஆசைகள் பெரியதோ , சிறியதோ உங்களுக்கு அது நிம்மதி மற்றும் சந்தோஷம் தருமானால், அதுவே சிறப்பு. மீண்டும் அழுகமாக ஒரு முறை கூறுவது, "ஆசைகளுக்கு வயதுவரம்பு கிடையாது".

 

Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)

Suggested Reading: பெண்கள் பெண்களை ஆதரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Suggested Reading: Arranged marriage செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

Suggested Reading: உங்கள் வாழ்க்கை துணையை கவனமாக தேர்ந்தெடுங்கள் - Shrutika Arjun

 

women supporting women career agelimits
Advertisment