விவாகரத்து என்பது இருவர் பிரிவது மட்டுமல்ல அது ஒரு உறுதியான பிணைப்பின் உடைபாகும். திருமண உறவு முடியும் போது மனதளவில் வலி அதிகமாக இருக்கும். நீங்கள் கட்டி எழுப்பிய கோட்டைகள் எல்லாம் உடைவது போல இருக்கும். இருப்பினும் இந்த சூழ்நிலையில் உங்களுக்கு அதை குணப்படுத்தும் வழிகளும், புதிய வாழ்க்கையையும் கண்டறிய முடியும்.
தனக்கான நேரம்:
திருமண முடிவுக்கு பிறகு தனிமையில் தான் முழு நேரம் இருப்பது போல் தோன்றும். உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள இந்த நேரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். "விவாகரத்திற்கு பிறகு காதல்" என்பது மற்றவர்கள் மீது நமக்கு வரும் காதல் மட்டும் அல்ல அது நம் மேல் நாம் கொள்ளும் காதலையும் குறிக்கும். உங்களின் ஆர்வங்கள், விருப்பங்கள், நீண்ட நாளாக நீங்கள் புறக்கணித்துக் கொண்டிருந்த விஷயங்களை மீண்டும் தொடர இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த தனிமையில் இருக்கும் பொழுது நீண்ட நாளாக நீங்கள் திருமணத்திற்கு பிறகு இணைப்பில் இல்லாத நபர்களுடன் மீண்டும் பேச ஆரம்பிக்கலாம்.
மனதை குணப்படுத்துதல்:
குணப்படுத்துதல் என்பது படிப்படியான செயல்முறையாகும், இதில் கடந்த காலத்தின் வடுக்களை நாம் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். "விவாகரத்துக்குப் பிறகு காதல்" என்பது நினைவுகளை அழிப்பதற்காக அல்ல; அது அவர்களைப் புரிந்துகொள்வதாக இருக்கும். கடந்த திருமண வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்களில் கவனம் செலுத்தி அதிலிருந்து வலிகளை தேடுவதை விட வாய்ப்புகளுக்கான வழியை பாருங்கள். மனக்கசப்புகளை மறந்து விடுவது எளிமையான விஷயம் அல்ல. ஆனால் இப்படி செய்வதன் மூலம் நமது மனக்கதவை திறக்க உதவும்.
புதிய தொடக்கங்கள்:
விவாகரத்திற்கு அப்பாற்பட்ட உலகத்தை பார்க்கும் பொழுது இன்னும் பல உறவுகளின் இணைப்புகள் சாத்தியமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். புதிய நண்பர்களின் அரவணைப்பு மற்றும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் தோழமையை உங்களை ஆறுதல் படுத்தும். விவாகரத்திற்கு பிறகு காதல் வாழ்க்கையை தாண்டி வேறு சின்ன சின்ன இன்பங்கள் உங்களை உற்சாகப்படுத்தும். பொழுதுபோக்குகள், புதிய நட்புகள் போன்றவற்றையும் அந்த வாக்கியம் குறிக்கிறது.
மனம் விட்டு பகிர்ந்து கொள்வது:
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் காதல் செய்வது அச்சுறுத்தலாக இருக்கலாம். நமது கடந்த காலம் பற்றியும் நமது இதயத்தை இருப்பதை மற்றொருவருடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சில சமயம் பயத்தை உருவாக்கலாம். ஆனால், கடந்த காலத்தைப் பற்றி உண்மையாக இருப்பது உண்மையான உறவுகளை வளர்க்கும். அதுவே, நம்பகத்தன்மையின் அடித்தளமாக இருக்கும்.
ஒரு புதிய தொடக்கம்:
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் காதலை கண்டுபிடிப்பது இழந்த ஒன்றை நிரப்புவதற்காக அல்ல. அது புதிதான ஒன்றை உருவாக்க போகிறது. விவாகரத்துக்கு பிறகு காதல் என்பது புதிய தொடக்கத்தை குறிக்கிறது. ஒரு வெள்ளை காகிதத்தை உங்களின் வாழ்க்கையாக நினைத்துக் கொண்டு இனி உங்களுக்கு பிடித்தவாறு அதில் நீங்கள் அழகான ஓவியங்கள் செய்யலாம். நீங்கள் எடுத்து வைக்க ஒவ்வொரு அடியும் உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக மாற்றும்.
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்கள் பெண்களை ஆதரிப்பதால் ஏற்படும் நன்மைகள்
Suggested Reading: நீங்கள் சுதந்திரமாக(independent) இருக்க வேண்டுமா? இதை படியுங்கள்
Suggested Reading: இந்த மூன்று விஷயங்களுக்காக காதல் உறவை முடித்துக் கொள்ளாதீர்கள்