எடைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான தின்பண்டங்கள்

"நாங்கள் எடையைக் குறைக்க மாட்டோம் என்றா கூறுகிறோம். அது குறைய மாட்டிங்கிறது. ஆமாம் அதற்கு உன் வாயைக் கட்டுப்படுத்த வேண்டும், அதைச் செய்தாயா? இது ஒரு நல்ல கேள்வி. பதில் தெரியவில்லையே" என்று இதுபோல் நாம் வாக்குவாதங்களில் ஈடுபட்டதுண்டு.

author-image
Nandhini
New Update
healthy snack

Healthy snack bowl

உண்மையில் நாம் என்னதான் உணவுமுறையை மாற்றி ஆரோகியமான உணவுப் பழக்கத்திற்கு மாறினாலும், முழுதாக எடையை குறைக்க உதவுவது நம் மனநிலை. அதை நாம் கட்டுக்குள் வைத்தால் மட்டுமே இந்த பழக்கங்கள் மாறும். எனக்கு குறிப்பாக இந்த மதியம் மூன்று முதல் ஐந்து மணிக்குள் ஒரு கருக்முறுக்கு என கடிக்காமல் தேனீரோ அல்லது காபியோ குடிக்க முடியாது . ஆனால் அதை சாப்பிட்டால், உடல் எடை குறையாது. அப்போது நான் இணையதளத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கனும் அதே சமயத்தில் சாதாரண தின்பண்டங்களின் சுவையும் இருக்க வேண்டும் என்று தேடியபோது தான் இந்த கட்டுரையைப் பார்த்தேன். கண்டிப்பாக என்னைப் போல் இப்படி தேடும் சகோதரிகளுக்கு இது உதவும் என்று நம்பிக்கையில் எழுதுகிறேன்.

Healthy snacks for weight loss.

Advertisment

நமது தின்பண்டங்கள் முக்காவாசி "வறுக்கப்படும் " "அதிகப்படியான எண்ணெய்" வகையை சார்ந்தது என்பது போல ஒரு பின்பம் இருக்கிறது. ஆனால் நம்மிடம் நல்ல ஆரோக்கியமான , சத்தான திண்பண்டங்கள் இருப்பதை கவனிக்க வேண்டும். இந்த கட்டுரையில் அதைப்பற்றி பாப்போம்.

1. வறுத்த கொண்டைக்கடலை

நமது வீடுகளில் அம்மாக்கள் கண்டிப்பாக ஒரு பெட்டியில் வைத்து, எப்போது நாம் பசிக்கிறது என்று கேட்டாலும் ஒரு குட்டி கிணத்தில் இதைப் போட்டு கொடுப்பார். இதில் "புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது" என்பதினால் நமக்கு நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்கும். இதை பல விதங்களில் சாப்பிடேலாம் ஆனால் பெரும்பாலோர் வீடுகளில் இதை சிறிது காரப்பொடி போட்டு நன்கு கலந்து சாப்பிடுவார்கள்.

2. மக்கானா

இப்போது எங்கு பார்த்தாலும் இந்த பெயர் இருக்கிறது. பெயரைக் கேட்டதும் நான் இது ஏதோ இனிப்பு வகையைச் சார்ந்தது என்று நினைத்தேன். அதன் பின் தான் கூறினார்கள் அது தாமிரை விதைகள் என்று. இதில் குறைந்த calorieஎன்பதினால் எவ்வளவு சாப்பிட்டாலும் கலோரி ஏறாது என்பது ஒரு பேச்சுவழக்கம். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு."

Advertisment

makhana

3. சூப்

இது மிகவும் சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின்கள் (vitamin) மற்றும் கனிமங்கள் (minerals) நிறைந்தவை. அதனால் இதை பல வகையில் செய்து சாப்பிட்டலாம். உங்களுக்கு பிடித்த காய்கறிகளைப் போட்டு செய்து குடித்தாலே போதும் அன்று இரவு சாப்பாடு cut. இன்னொரு பேச்சு இருக்கிறது சூப் குடித்தால் சீக்கிரம் பசி எடுக்கும் என்று. அது உண்மையா பொய்யா என்பதில் ஒரு சந்தேகங்கள் இருக்கின்றன.

4. முளைகள் சாலட் (Sprouts Salad)

இது தான் அனைவரது favourite என நம்புகிறேன். இதற்க்கு பெரிதாக வேலை ஏதும் கிடையாது. இரவு தண்ணீரில் ஊற வைத்தால் போதும் காலையில் தேவைப்பட்டால் மிளகுப்பொடி, உப்பு சேர்த்து சாப்பிட்டால் முடிந்தது. இதில் "புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது" என்பதினால் இதை எவ்வளவு  வேண்டுமானலும் சாப்பிடேலாம். இதை நாம் சாப்பிடும் உணவோடும் சேர்த்து சாப்பிடேலாம்.

5. சுட்ட அப்பளம்.

Advertisment

அப்பளம் என்றாலே எண்ணையில் பொறிப்பது அது என்ன சுட்ட அப்பளம்.அதே அப்பளத்தை தீயில் சுட்டு சாப்பிடுவது . இப்படி சாப்புடுவதினால் இருக்கும் நன்மை "எண்ணையில்லாமல் சாப்பிடுவதே". இதை பலர் சூடான வத்தக்கொழம்பு சாதமுடன்சேர்த்து சாப்புடுவது வழக்கம்.

6. சக்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ்

புளியோதரை என்றாலே "உருளை கிழங்கு சிப்ஸ்" தான். ஆனால் உருளைக் கிழங்கு சிப்ஸ் என்பது மிகவும் கேடு. அதற்கு பதிலாக சக்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் நல்லது. அதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சத்து நிறைந்தது. எனவே இது சரியான மாற்று சிற்றுண்டியாக இருக்கும்.

7. புரத சத்து நிறைந்த உணவுகள்

புரத சத்துநிறைந்த உணவுகள் எடுப்பதன் மூலம் நீங்கள் சாப்பிட்ட திருப்தியும் , உங்கள் வயிறை நிறைய நேரம் நிறைவாக வைக்க உதவும். இது உடல் எடையை குறைக்கும் பொழுது சதை வலுமையை இது பாதுகாக்க உதவும். வறுத்த கொண்டைக்கடலை, வேகவைத்த முட்டை, பாலாடைக்கட்டி அல்லது பன்னீர் ,மற்றும் இனிக்காத கிரேக்க தயிர் போன்றவை எல்லாம் புரத சத்து நிறைந்த தின்பண்டங்கள்.

Advertisment

boiled egg

ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் பொது நாம் நிறையவாக உணர்வதை தாண்டி ஒட்டுமொத்த உடல் ஆரோகியதிற்கு வழிகாட்டுகிறது. பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் மற்றும் avacoda toast  இவை எல்லாம் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள் .

நாம் என்னதான் ஆரோகியமான முறையில் உணவுகளை உட்கொண்டாலும் ,பகுதி கட்டுப்பாடு (portion control)என்பது மிகவும் அவசியம். முன்னர் கூறிய படி "அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ". அதனால் அனைத்தும் அளவோடு சாப்பிட்டு, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்திலும் படிக்க : Source : gytree link

10 Healthy Indian Snacks for Weight Loss  

Suggested Reading: 

Suggested Reading: 

healthy snacks Healthy snacks for weight loss