"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு." இதன் பொருள், தீயால் நமக்கு ஏதேனும் காயமானால் ,அது நம் உடம்பில் ஏற்படும் வெளி காயம் அது காலப் போக்கில் ஆறிவிடும். ஆனால் இதுவே ஒருத்தரைக் கடும் சொற்களால் பேசிவிட்டோம் என்றால் அது, அவர் உள்மனதில் அழியாக் காயமாக மாறி விடும். இதற்க்கு தான் நம் பெற்றோர்கள் நமக்கு சிறு வயதில் இருந்து "வார்த்தையைப் பார்த்து உபயோகிக்கவும்" என்று கூறி நம்மை வளர்த்தார்கள். இதற்கும், இப்பொழுது இந்த கட்டுரையில் குறிப்பிடும் செய்திகளுக்கும் சம்மந்தம் இருக்கிறது.
கடந்த வாரம் உச்ச நீதி மன்றம் ( Supreme court ) ஒரு குறிப்பேடு (handbook) வெளியிட்டது. “HANDBOOK ON COMBATING GENDER STEREOTYPES” .
/stp-tamil/media/post_attachments/RBpQTmNaXeLSragkh7a1.jpg)
குறிப்பேட்டில் இருப்பதை பற்றி பார்க்கும் முன், பாலின stereotype என்பதைப் பற்றிக் குறிப்பாக பார்ப்போம்.
பாலின stereotype : ஒரு தனிநபரின் பாலினத்தை அடிப்படையாய் வைத்தும் ஒரு சில குணாதியசங்களை வைத்தும் ஒதுக்கும் நடைமுறையாகும்.
இது நமது பேச்சுவழக்கில் , நம்மை அறியாமலே பயன்படுத்துவதுண்டு. உதாரணம்: பெண்கள் என்றாலே மென்மை , அடங்கி இருக்க வேண்டும். ஆண் என்றாலே பலமாக இருக்க வேண்டும், கோழையாக இருக்கக் கூடாது என்பது போன்று.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் ஆகியவற்றில் தொடர்ந்து பாலின இடைவெளி இருப்பதை நாம் கவனித்ததுண்டு.இந்த மாதிரி தீங்கு விளைவிக்கும் பாலின வேறுபாடுகளே பெண்களின் அடிப்படை தேவைக்கு தடையாக இருக்கிறது.
உதாரணம் : "இப்போது வேலைக்கு போக வேண்டும்? ஏன்? ஒழுங்கா வீட்டு வேலையைப் பாரு " என்று கூறுவதை நாம் கேட்டதுண்டு.
இதை ஏன் இப்போது வலுவாக கூற வேண்டியதன் நோக்கம் என்ன? இது முக்கியமாக நீதிபதிகள், நீதித்துறை வெளிப்பாடில் (Judicial disclosure) தீங்கு விளைவிக்கும் பாலின stereotype பயன்படுத்துதல், முக்கியமாக பெண்களை குறிக்கும் stereotypic வார்த்தைகளை கொண்டு சட்ட ஆவணங்களில் உபயோகிக்க கூடாது என்பதையே வலியுறுத்துகிறது. இவர்கள் மக்களின் பிரதிநிதியாக இருப்பதினால் இந்த மாற்றம் அவசியம் என்று உச்ச நீதி மன்றம் முடிவு எடுத்துள்ளது .
இது நீதித்துறை உரையாடலில் மிகவும் சமமான மற்றும் பாரபட்சமற்ற மொழிப் பயன்பாட்டை வலியுறுத்துகிறது. மேலும் இந்த குறிப்பேடு, பாலினம் பற்றிய நவீன மற்றும் மரியாதைக்குரிய புரிதலை பிரதிபலிக்கும் மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சம உரிமைகளை ஊக்குவிக்கும் மொழியை நோக்கி மாற்றம் உருவாக்க வேண்டும் என்பதே.
இது ஏன் நீதிபதி இந்த குறிப்பேட்டில் உள்ளதை பின்பற்ற வேண்டும்?
என்னதான் நீதிபதிகள் கூறும் முடிவு , அவர்களது விளக்கத்தை மட்டுமல்ல, நீதிபதிகள் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார்கள். அதனால் இதைப் பின்பற்றுவது முக்கியம். நாம் பயன்படுத்தும் மொழி என்பது சட்டத்திற்கு மிகவும் முக்கியமானது. வார்த்தைகளே நமது சட்டத்தின் மதிப்புகளைக் கொண்டு சேர்க்கும் கருவி.
/stp-tamil/media/media_files/o5g59szeHv1tW50aTIkN.jpg)
இது சட்ட ஆவணங்களிலுள்ள முக்கியமாக பெண்களைக் குறிக்கும் stereotypic வாக்கியங்களைக் எடுத்துக் காட்டி, அதற்க்கு மாறாக நடுநிலையான வார்த்தைக்களை காட்டியுள்ளது.
உதாரணத்திற்கு : "Eve teasing" என்ற வார்த்தைக்கு "Street side harassment " , "Career Women" என்ற வார்த்தைக்கு "Women" என்றும், "Housewife" என்ற சொல்லுக்கு "Home maker" என்று குறிப்பிடுகிறது. இது போல் நிறைய பாலின வேறுபாடுகளில் உள்ள வாக்கியங்கள் மற்றும் வார்த்தைகளுக்கு நடுநிலையான வார்த்தைகள் உபயோகிக்க வேணும் என்றும் கூறுகிறது.
இது எல்லாம் ஒரு நல்ல மாற்றம். சமுதாயத்திற்கு தேவையுள்ள மாற்றமே இது. ஆனால் எங்கள் அனைவருக்கும் எழுகின்ற கேள்வி என்னவென்றால் இதையே இப்பத்தான் நீங்கள் அமல்படுத்திகின்றார்களே , நாங்கள் கேட்கும், கற்பழிப்பு ,கௌரவக் கொலை போன்ற வழக்குகளுக்கு எப்போது நாங்கள் கேட்கும் முடிவுகளை தரப் போகிறார்கள்? என்று தான் தெரியவில்லை. நல்ல தொடக்கம், ஆனால் இது இன்னும் தொடருமா? என்று பார்ப்போம்.
இந்த கட்டுரை அந்த குறிப்பேட்டில் உள்ள முக்கியமான விஷயங்களை எடுத்துரைக்கப் பட்டுள்ளது . முழு handbook யைப் படிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
Suggested Reading:
சிவனும் சக்தியும் சேர்ந்தா Mass டா!!
Suggested Reading:
Design, design'ஆ டிரஸ் மட்டும் இல்லை ; ஆட்களையும் சந்திக்கிறோம் .
Suggested Reading:
ஆஹா!! இது தெரியாம போச்சே!
Suggested Reading:
நீ எப்போதுமே என் "நண்பி டி"