என்னதான் online’ல துணிகள் எல்லாம் வாங்கினாலும், நேரில் பார்த்து பேசி வாங்குகிற சுகம் கிடைக்காது. கடைக்கடையாய் ஏறி இறங்கி கடைசியில் முதலில் பார்த்த அதே கடையில் பார்த்த ஆடையை வாங்கி,அருகில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு வீட்டுக்கு வந்து, அந்த ஆடையை மறுபடியும் போட்டு பார்த்து, அந்த பண்டிகை எப்போடா வரும், நாம் அந்த dress’ய் போட வேண்டும் என்று ஆவலுடன் இருந்த நாட்கள் எல்லாம் இப்பொழுது நினைவுகளாக இருந்தது. அப்படியே போவோம் என்று புறப்பட்டு ஒரு கடையில் dress பார்க்க தொடங்கினேன். அப்போது அந்த அக்காக்கள் பழகின விதம் மிகவும் பிடித்து இருந்தது. அவர்களது வேலை, வழகியை பற்றி விசாரிக்க தொடங்கினேன்.
இதில் என்ன அப்படி கடினம் இருக்க போகிறது? நாங்கள் கேட்கும் dress எடுத்து காட்ட வேண்டும், AC ரூம் , வெயிலே தெரியாது இதில் என்ன கடினம் இருக்க போகிறது? என்னும் நபர்களுக்கு இந்த கட்டுரை.
Dawn to dusk - no rest!
நாங்கள் காலை ஏழு மணிக்கெல்லாம் கடைக்கு வர வேண்டும். நாங்கள் இந்த கடைக்கு அருகில் இல்லை. அதனால் நாங்கள் வீட்டில் இருந்து ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும். இங்கு வந்து சுத்தம் செய்ய வேண்டும். அன்று வந்த சரக்குகளை அந்த அந்த இடத்தில் வைக்க வேண்டும். அதற்குள்ள கடையை திறந்து விடுவார்கள். பின்னர் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தான் சாப்பிட இயலும். வாடிக்கையார்கள் வந்து விடுவார்கள். அதுவும் கல்யாண சீசன் அல்லது ஏதாவது தீபாவளி பொங்கல் போன்ற சீசன் என்றால் காலை ஒன்பது மணிக்கே கூட்டம் வந்துவிடும் ,
அப்படி மாற்றி மாற்றி காட்டுவதற்குள் மதிய சாப்பாடு நேரம் வந்து விடும். காலை மாறி ஒருத்தர் பின் ஒருத்தர் தான் சாப்பிட முடியும். மாலைக்கு மேல் தான் கூட்டம் இருக்கும். அந்த கூட்டம் இரவு பத்து மணி வரை தொடரும் . கடையை மூடி நாங்கள் புறப்பட எப்படியும் ஏறக்குறைய பதினோரு மணி ஆகி விடும். பின்னர் கடைசி ரயில் அல்லது கடைசி பேருந்து பிடித்து வீடு சேர பனிரெண்டு மணி ஆகி விடும் . வீடு சென்று சாப்பிட்டு தூங்க சரியாக இருக்கும். நின்று நின்று கால்கள் வலிக்கும். வீடு சென்று தூங்கினால் போதும் என தோன்றிய நாட்கள் தான் அதிகம்.
Talk less Work more!
ஒரு நல்லது கெட்டதிற்கு விடுமுறை கேட்டால் ஆயிரம் கேள்விகள் வரும். ஒவ்வொரு மாடிக்கு ஒவ்வொரு மேனேஜர் இருப்பார்கள். ஒரு மேனேஜர் நல்லா சிரிச்சி பேசுவார்கள். ஒரு சில பேரு கத்திக் கொண்டே இருப்பார்கள். ஏன் என்று இப்பவரை தெரியாது. அவங்களின் மனநிலை பொறுத்து தான் எல்லாமே. திடீர்னு வேற மாடிக்கு ஆட்கள் பத்தவில்லை என்று அங்க போக சொல்வார்கள். பிரச்சனை என்று இல்லை . கடுப்பாக இருக்கும். தோழிகளை விட்டு போவதை நினைத்து. கழிவறைகள் நன்றாக தான் இருக்கும். வேற எந்த மாறியான பாலியல் தொல்லைகள் இதுவரை கண்டதில்லை.
Suggested Reading:
சிவனும் சக்தியும் சேர்ந்தா Mass டா!!
Suggested Reading:
Suggested Reading:
Postpartum Depressionயை கையாளுவது எப்படி?
Suggested Reading:
இதான் எங்கள் வாழ்க்கை - தள்ளுவண்டி கடை அக்காக்களின் நேர்காணல்