Advertisment

ஆஹா!! இது தெரியாம போச்சே!

கண்ணாடி திருப்பினா எப்படி ஜீவா வண்டி ஓடும்? என்ற காமெடி நமக்கு பரிட்சியமான ஒன்று. இப்பொது நான் சொல்ல போகும் கருத்துக்கள். ஒரு பெண்ணின் கருத்துக்களை இந்த சமுதாயம் எடுத்துக்கொள்ளுமா இல்லையா என்பது அவள் வேலை பார்க்கிறாளா இல்லையா என்பதில் தான்.

author-image
Nandhini
Aug 18, 2023 16:24 IST
New Update
baakiya

images are used for representation purposes only

அவளது மதிப்பும் மரியாதையையும் இது வைத்து தான்.  படித்தால் தான் வேலை என்பதெல்லாம் அந்த காலம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால், நீங்களும் ஆகலாம் தொழிலதிபர் என்பது தான் இந்த காலம்.

Advertisment

வீட்டிலே உகார்த்த படி உங்களான தொழிலை தொடங்கி , அதில் எளிதாக சம்பாதிக்கெல்லாம். அதற்க்கு என்னென்ன தேவை என்பதே இந்த கட்டுரை.

எதில் Interest?

எல்லாம் சரி , இப்போ என்ன செய்வது?

Advertisment

ரொம்பவும் அடிப்படையில் இருந்து செல்வோம். அனைவருக்கும் ரொம்ப பிடித்த ஒரு விஷயம் கண்டிப்பாக  இருக்கும். உதாரணத்திற்கு எனக்கு மூங்கில் வைத்து பின்னுதல் பிடிக்கும். அது மாறி உங்களுக்கு எது எளிதில் வருமோ அதை எடுத்து பண்ணலாம். இதில் ஒரு தந்திரம் இருக்கிறது. நம்மக்கு தெரிந்த அல்லது பிடித்த விஷயம் பண்ணும் பொழுது நம் ஆர்வம் கூடும். அதான் இந்த தொழிலதிபர் ஆகும் “ secret ingredient”.

உதாரணம் : தையல், சமையல், ஆடைகளை விற்பது, அணிகலன்கள் , துணிப்பை போன்றவை.

interest

Advertisment

இது போன்று உங்களது Plus என்னவென்று அறிந்து , அதில் தொழில் ( small business)  தொடங்குவது நல்லது. முடிவு செய்த பின் அதைப் பற்றி நன்கு ஆராய வேண்டும் . இதற்க்கு முன் அந்த தொழில் செய்தவரிடம் பேசி அதில் குறை நிறை என்னவென்று விவரமாக பேசி, அதற்க்கு தேவையானதை நீங்கள் தயார் படுத்திக்கொள்ளவேண்டும். 

இல்லை, எனக்கு புதிதாக ஒரு முயற்சி செய்ய வேண்டும்,தெரியாத ஒரு துறையை வைத்து  தொழிலை தொடங்க வேண்டும் என்றால், அதை உறுதி படுத்த, நீங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதில் நீங்கள் strong ஆக  இருந்தால், தாராளமாக அதைப் பற்றி தெரிந்து கொண்டு ஆரம்பிக்கெல்லாம்

இது தான் என்றால், அதில் எது?

Advertisment

இப்போது துறை தேர்ந்து எடுத்தபின் அதில் ஒரு particular areaவை நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணம் இப்போது சமையல் துறை என முடிவெடுத்தப் பின் அதில் என்ன? Bakingஅல்ல மசாலா பொருட்களை விற்பதா?  என்று முடிவு எடுக்க வேண்டும். பின்பு அதில் உங்களை வலுவாகிக் கொள்ளுங்கள். ஆதி முதல் அந்தம் வரை நுணுக்கமாக கற்று உங்களது entrepreneurபயணத்தை தொடரலாம்.

 தொடர்புகள்

இந்த phase தான் முக்கியமானது.  நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில், இருக்கும் நபர்களிடம் பேசி, பழகி,  தொழிலின் போக்கு ( how is it going?) எப்படி உள்ளது என்றும் , அந்த நபர்கள் எப்படி இதில் வலுவாக இருக்கிறார்கள் என்று கேட்டு tips வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அது நீங்கள் தொழிலில் முழுமையாக இறங்கு பொது உபயோகமாக இருக்கும். வியாபாரத்தில் என்னென்ன சிக்கல்கள் வரும், அதை எப்படி சரி செய்யலாம், பணம் பற்றாக்குறை நேர்ந்தால் அதை சரி செய்ய என்ன பண்ணலாம்? அப்போது அந்த துறையின் ட்ரெண்ட் (trend) என்ன இது போன்று நல்ல விஷயங்களை பகிர்ந்தும் , தெரிந்தும் கொள்ளலாம்.

Advertisment

 Customers யாரு?

marketing

எல்லாம் சரி, இப்போது உங்கள் பொருளை யாருக்கு விற்க போகிறீர்கள் என்று தேர்வு செய்யவேண்டும். உதாரணம் : நீங்கள் இப்போது சமையல் பொருட்கள் விற்றால் , அதை வாங்கும் முக்காவாசியான வாடிக்கையாளர் 30 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களே. ( இது வெறும் உதாரணதிற்க்காக கூறப்படுபவை) அப்போது நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டிய அல்லது இந்த விஷயத்தை முதன்மையாக சொல்ல வேண்டியது அவர்களிடமே. அவர்கள் மூலம் அவருக்கு தெரிந்த நபர்களுக்கு போகும். இப்போது நீங்கள் phone சம்மந்தப்பட்ட பொருட்கள் விற்றால்,இப்போது கால கட்டத்தில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் மாணவிகளை ஈர்க்கும். இவ்வாறு உங்கள் வியாபாரத்திற்கு ஏற்ற customers தேர்ந்தெடுத்து அதற்க்கு ஏற்ற விளம்பர முறையை பயன்படுத்தலாம்.

Advertisment

(மேல் குறிப்பிட்டது வேறும் கட்டுரைக்காகவே)

பணம் முதலீடு

எல்லாம் யோசித்தாலும் அனைவரும் ஒரு அடி பின்னாடி வைப்பது இந்த இடத்தில தான் . "பணம்". சுய தொழிலுக்கு முக்கியமான ஒன்று. எவ்வளவு பணம் இருதாலும் ஒரு புதிய தொடக்கத்தில் ஒரு பண முதலீடு போட வேண்டும் என்றால் ஒரு யோசனை வருவது இயல்பு தான். ஒரு பெரிய companyil வேலை செய்தால், மாதம் வேலை பார்ப்போம் அதற்குரிய பணத்தை பெறுவோம். இதுவே சுய தொழிலில் நாமே பணமுதலீடு போடுவதால், தீர விசாரித்து இறங்க வேண்டும்.

Advertisment

சுய தொழில் ஆரம்பிக்கும் அளவிற்கு பணத்தை சேர்த்து வைத்த பின் தொடங்க வேண்டும் அல்லது நல்ல நண்பரோ, நபரோ நம்பகத்தன்மையுடைய ஒருத்தர் இருந்தால், அவரிடம் பணம் கேட்டு முதலீடு செய்யலாம்.

எப்படி நாம் சீறு வயதில் நடக்க தள்ளாடும் பொது கீழ விழுவோம் அல்லவா அது போல ஒரு சுயதொழில் தொடங்கும்போது சிறுசிறு தடைகள் வரலாம். லாபம் இருக்குமா இல்லை நட்டம்  தான் இருக்குமா? என்ற எண்ணங்கள் ஏதும் வைக்காமல், consistent ஆகா ஓடிக் கொண்டே இருந்தால் ஒரு நாள் நாம் நினைத்தை அடைய முடியும்.

“Consistency is the power to success”

 

Suggested Reading: 

Suggested Reading: 

#entrepreneur #customer #smallbusiness
Advertisment