இந்த பந்தம் காலத்துக்கும் அழியாமல் இருக்கும். சுற்றுலா செல்வதோ, படத்திற்கு செல்வதோ, அல்லது ஒரு பேரங்காடிக்கு செல்வதோ அவளுடன் தான். அவள் கிட்டத்தட்ட வீட்டுக்கு மூத்த பிள்ளையாக கருதப்படுவர். நம்மை காட்டிலும் நம் வீட்டில் ஒரு நல்ல நம்பிக்கை அவள் மீது இருக்கும். நாம் கேட்டு முடியாது என்று சொல்லும் பெற்றோர்கள், "அவள் வருகிறாள் " என்றால் சரி சென்று வா என்று கூறுவார்கள். நம்மக்கே தோன்றும் இந்த முகத்தில் அப்படி என்ன நம்பிக்கை வருகிறது என்று.
அவளது வீட்டில் நாமும், நம் வீட்டில் அவளும் ஒரு ரேஷன் கார்டில் பெயர் சேர்க்காத ஒரு ஆளாக தான் இருப்போம். இப்படி அழகான உறவில் நடுவில் "கல்யாணம் அல்லது காதல்" என ஒன்று வந்தால் ஒரு பிரிப்பு உண்டாகிறது. அதுவும் கல்யாணம் தான் மிக பெரிய பிரிவை உண்டாக்குகிறது.
ஏன் இந்த பிரிவு? இந்த பிரிவு ஏற்படாமையே அந்த புதிய உறவை கையாளலாமே. அப்படி என்ன செய்தால் இந்த உறவில் பிரிவு ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆகி விட்டோம்:
கல்யாணம் முன், வாழ்க்கையில் எந்த ஒரு அர்ப்பணிப்பும் இல்லாமல் இருப்போம். அதுவும் ஹாஸ்டல் வாழ்க்கை என்றால் சொல்லவே வேண்டாம் முழுக்க முழுக்க நண்பர்களுடன் மட்டும் தான் இருப்போம். அவர்கள் தான் எல்லாமே , நம் சந்தோச, சோக நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். மனதில் நினைப்பதெல்லாம் சொல்ல முடியும். உறுதி மொழி எல்லாம் எடுத்துதிருப்போம் "கண்டிப்பாக உன்னை விட மாட்டேன் , நீயும் விட கூடாது" என்று.
ஆனால், கல்யாணம் பேச்சு ஆரம்பிக்கும் போதே கொஞ்சம் பிரிவு வரும். அது தவிர்க்க முடியாத ஒன்று. அடுத்த கட்ட தீர்வு எல்லாம் யோசிக்க வேண்டிய ஒன்று. அப்போது லேசாக ஒரு பிரிவு வரும், அது பின் ஒரு பெரிய பிரிவாக மாறிவிடும்.
முதல் காரணம், கல்யாணம் அல்லது வாழ்க்கையில் அடுத்த கட்டம் அதெல்லாம் தாண்டி, நாம் பக்குவம் (maturity) அடைகிறோம். கல்லூரி, பள்ளி காலத்தில், நாம் சிறு பிள்ளையாக இருப்போம், வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல், மகிழ்ச்சியாக இருப்போம். வேலைக்கு செல்லும் பொது தான் ஒரு பக்குவம் வருகிறது. அந்த மனநிலையில், எப்படி வழக்கியில் முன்னேறலாம் என்று தான் தோணும்.
இந்த நேரத்தில் கூட அப்பப்போ பேச கூடிய சூழல் இருக்கலாம். ஆனால், இந்த கல்யாணம் என்ற ஒரு பேச்சு வந்தால், தோழி எல்லாம் இரண்டாம் கட்டம் தான். முதலில் அந்த கணவராகும் நபர் தான்.
அவருடன் தான் தன் மீதமுள்ள வாழ்க்கையை நடந்த வேண்டும் என்பதினால், அவரைப் பற்றி இவரும், இவளை பற்றி அவளும் பேசி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் தான் ஆர்வம் இருக்கும்.
கண்டிப்பாக முன்னுரிமைகள் மாறும். அப்படி மாறினாலும் தோழிடம் முடிந்தவரை தொடர்பில் இருக்க முயற்சிசெய்யவும். நம் அணைத்து கஷ்டம் மற்றும் சந்தோசத்தில் ஈடுபட்டு இருந்தவரை எந்நிலையும் மறந்திட கூடாது. வாரம் அல்லது மாதம் ஒரு முறையாவது பார்க்கவோ அல்லது தொலைபேசியில் பேசி, உங்கள் இருவர் வாழ்க்கையில் நடந்ததை பேசி பகிர வேண்டும். நிறைய ஆண்டுகளுக்கு பிறகு உங்களது தோழிக்காக நேரத்தை ஒதுக்குவதில் கிடைக்கும் சந்தோஷம் அந்த உணர்வை வார்த்தையில் அடக்க முடியாது.
கணவர் பங்களிப்பு:
நண்பருக்கு முக்கியத்துவம்
தோழி என்று பாராமல் அவளும் நம்முள் ஒருத்தர் என்று எண்ணி அவருக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் கஷ்ட, சந்தோச நேரங்களில் கூட இருந்த தோழிக்காக இதை கூடப் பண்ணவில்லை என்றால் என்ன?
Suggested Reading: Working Women - க்கு கண்டிப்பாக உரிமை இருக்கிறது!
Suggested Reading: Arranged marriage செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
Suggested Reading: ஆசைகளுக்கு வயது வரம்பு இல்லை
Suggested Reading: இதான் எங்கள் வாழ்க்கை - தள்ளுவண்டி கடை அக்காக்களின் நேர்காணல்