Job 'ஆ எங்களுக்கு நாங்களே வைத்த ஆப்பு!!

லிட்டருக்கு ஐந்து ரூபாய் ஏறியுள்ளது. ஐம்பது காசு குறைந்தியிருக்கு என்றெல்லாம் நம் தந்தை பார்த்து கூறும் பொது, இதில் என்ன இருக்கிறது? என்று நாம் யோசித்ததுண்டு. வளர்ந்து, சம்பாதிக்கும் பொழுது தான் குறைந்ததிற்கு ஏன் அப்படி சந்தோஷப்பட்டார் என்று புரிந்தது.

author-image
Nandhini
Aug 18, 2023 13:30 IST
ppw2

images are used only for representation purpose only.

என்னதான் வெறும் நூறு ரூபாய்க்கு போட்டாலும் , வாரம் மூன்று முறை பெட்ரோல் போடும் படி ஆகிவிடுகிறது. மாதம்  சம்பளம் என்னம்மோ மூன்றில் இருந்து ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் ஏறுகிறது ஆனால் இந்த பெட்ரோல் விலை நொடிக்கு நொடி மாறும் போலயே என்று அலுவலகத்தில் பேசியதுண்டு.

Advertisment

கால்களில் பம்பரம் கட்டியது  போல் காலை ஆரம்பித்து இரவு வரை போகும் இந்த வேலையில்  ஓரளவுக்கு நம்மக்கு தெரியும் , எந்த மாறி ஆபத்து இருக்கிறது என்று. ஆனால் நம்மக்கு தெரியாமல் நிறைய ஆபத்து இருக்கிறது. ஒரு பேச்சுவாக்கில் அவர்களிடம் நடத்திய உரையாடலில் , சிறு சிறு பிரச்சனையாக இப்போது தெரிகிறது, அது பின்னாடி பெரிய விஷயமாக மாறும் என்று அவர்களுக்கு அறியவில்லை. பெட்ரோல் வங்கியில் வேலைப் புரியும் பெண்கள்களிடம் நேர்காணல் வழி எழுதிய கட்டுரை.

 Job - அத ஏன் கேக்குறீங்க !!

நின்றே இருக்க வேண்டிய வேலை. காலை மற்றும் மாலை வேலைக்கு செல்லும் முன் மற்றும் வீட்டுக்கு செல்லும் பொது தான் முக்காவாசி நபர்கள் வந்து பெட்ரோல் போடுவார்கள். அச்சமயம் எங்களால் கழுவறைக்கு கூட செல்லயியலாது . (இது நகர்ப்புறத்தில் உள்ள ஒரு வங்கியாக இருக்கும் படி) . ஊருக்கு வெளியில் இருக்கும் வங்கிகளுக்கு கூட்டமாக இருக்காது, ஆனால் அவ்வப்போது வண்டிகள் வந்துபோகும். இது நாளுக்கு நாள் மாறுமே தவிர , இந்த நேரங்களில் கூட்டம் என்னமோ இருக்கும். இந்த சமயத்தில் தான் இந்த  gpay / phonepe எல்லாம் பிரச்சனை செய்யும்.

Advertisment

ppw 22

அதற்க்கு ஒரு திட்டுகள், சண்டைகள் எல்லாம் நடக்கும். நாங்கள் பாட்டில் (bottle ) பெட்ரோல் கொடுக்கக் கூடாது என்பது விதிமுறை. அதை மீறினால் எங்களுக்கு வேலை போய்விடும். அதையும் மீறி இந்த பசங்க வந்து கேட்பார்கள். காலை வேளையில் கேட்டால் முடியாது என்று சொல்லி விடுவோம். ஆனால் இதுவே இரவு நேரங்களில் கேட்டால், முடிந்த வரை முடியாது என்போம். அதையும் மீறி கேட்டால் கொடுத்துவிடுவோம். என்ன செய்வது வாதாட முடியுமா என்ன?  இதுவே ஒரு சில பேரைப்  பார்த்தால் சந்தேகமாக இருக்கும் அப்போது நாங்களே தரமாட்டோம் . அதையும் மீறி கேட்டால், நாங்கள் மேனேஜரை அழைத்து சொல்லிவிடுவோம் அவர் பார்த்துக்கொள்வார். 

கைபேசி உபயோகிக்கக் கூடாது என்று கூறினாலும், நிறைய பெரு பெட்ரோல் போடும் பொது பேசிக்கொண்டே இருப்பார்கள். இதில் அவர்கள் கூறிய தொகைக்கு தான் போட்டுயிருப்போம் ஆனால் நான் இந்த தொகை சொல்லவில்லை என்று கத்தி கூச்சல் போட்டு பிரச்னை எல்லாம் செய்வார்கள். நம்மை பற்றி அங்க இருக்கும் மேனேஜர்க்கு தெரியும் என்பதினால், எங்களைக் கத்தமாட்டார்கள்.

Advertisment

 ஒன்றா இரண்டா ? எக்கச்சக்கம் - கஷ்டங்கள்.

வேலையில் அவர்கள் படும் கஷ்டங்கள் பற்றி கேட்ட பொது, அனைவரது முகம் மாறியது. ஏன் என்று வினவிய பொது அவர்கள் , " நின்றே இருப்பதினால், கால்கள், மூட்டு வலிகள் வரும். தனது நெருங்கி நண்பர் வெரிகோஸ் நோய் வந்து வேலையை விட்டதாக கூறும் பொது அவர்களது முகத்தில் சோகம் சூழ்ந்தது.

வெயில், மழை, புயல் , பனி என்று பாராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும். நாற்காலிகள் இருக்கும். ஆனால் பெட்ரோல் போடும் இடத்தில் வைத்தால் வண்டி வரும் போதும் போகும் போதும் இடையூறாக இருக்கும்.

Advertisment

 சில சமயங்களில் பெட்ரோல் போடும் பொது கைகளில் சிந்திவிடும் . அவ்ளோதான் ஒரு துணியை எடுத்து துடைத்தால் சரி ஆகி விடபோகிறது என்று சொன்னாலும் அந்த வாடை கைகளில் இருக்கும், அது சாப்பிடும் பொது மிகவும் கஷ்டமாக இருக்கும். இதெல்லாம் வேலைக்கு சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்கு கடினமாக இருந்தது ஆனால் போக போக பழகிவிட்டன.

சில நேரங்களில் அந்த பெட்ரோல் கைகளில் பட்டுப்பட்டு சதை ஒவ்வாமை (skin allergy) ஏற்பட்டதுண்டு. அதனால்  மக்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பார்த்து முகம் சூழிப்பதுண்டு. ஒரு சில மருத்துவர் , தோல் சம்பந்தம் பட்டவர்கள் இதைக் கவணித்து போறபோக்கில் " இது ஆபத்தானது, சீக்கிரம் சரி செய்ய வேண்டும் " என்று கூறிவிட்டு செல்லும் பொது எங்களுக்கு எங்களைத் தாண்டி எங்கள் குடும்பம் தான் நினைவிற்கு வந்தது.

 இதெல்லாம் எதற்க்காக?

Advertisment

ppw3

இவ்வளவு விஷயங்களையும் தாங்கி கொள்வது " குடும்பத்திற்காக" மட்டுமே. பிள்ளைகளை நன்றாக பக்க வைக்க வேண்டும். கணவர் ஒரு பக்கம் contract வாட்ச்மேன் அல்லது பெரிய கொம்பனியில் கார் ஓட்டினராக  ஓடினாலும், நாங்களும் ஒரு பக்கம் ஓடி, முடிந்த வரை பிள்ளையை கஷ்டமில்லாமல் வளர்த்து படிக்க வைக்க வேண்டும்.

தெரியும், இந்த ஆபத்தான வேலை, இந்த நச்சு எவ்வளவு நாட்களில் எங்கள் உயிரை எடுக்கும் என்று தெரியாது. இருக்கும் வரைப்  பிள்ளைகளுக்கு நல்ல பாதை அமைத்து கொடுக்கவேண்டும், நாங்கள் வாங்கிய கடனை பிள்ளைக்கு வைக்காமல் நாங்களே கட்டி முடிக்க வேண்டும் என்பதே எங்கள் மனதில் ஓடக்கூடிய விஷயம் என்று அவர்கள் கூறினார்கள்.  உயிர் கொள்ளும் என்று அறிந்தும் அவர்கள் இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் ஓடிக்கொண்டிருக்கும் அந்த அக்காக்களைப் பார்த்தபோது பொது எங்களை மீறி கண்களில் கண்ணீர் வர தொடங்கியது. 

Advertisment

 

 

Suggested Reading:  அழகில் மறைந்துள்ள சோகம்

Advertisment
#women supporting women #petrolbunkworkers